திருப்பாவை, திருவெம்பாவை பாடல் 18: பெருமாள் கோயிலுக்கு போனால் எப்படி சாமி கும்பிட வேண்டும் தெரியுமா?
சென்னை: மார்கழி மாதம் 18-ஆம் நாள் இன்று! பெருமாள் கோயிலுக்கு போனால் நேராக பெருமாளை வணங்கக் கூடாது, முதலில் தாயாரை சேவிக்க வேண்டும். வீட்டில் கூட அப்படித்தானே! அப்பாவிடம் கோரிக்கை வைக்க முதலில் அம்மாவிடம் கேட்டால், அவர் அப்பாவிடம் நமக்கால சிபாரிசு செய்வாள். எனவே கண்ணனின் மனைவி நப்பின்னையை எழுப்பி கண்ணனை எழுப்புகிறார்கள் பாவை நோன்பிருக்கும் ஆயர்குலப் பெண்கள்.

திருப்பாவை பாடல் 18
உந்து மதகளிற்றன் ஓடாத தோள்வலியன்
நந்தகோபாலன் மருமகளே! நப்பின்னாய்
கந்தம் கமழும் குழலி கடை திறவாய்
வந்தெங்கும் கோழி அழைத்தன காண் மாதவிப்
பந்தல் மேல் பல்கால் குயிலினங்கள் கூவின காண்
பந்தார் விரலி! உன் மைத்துனன் பேர்பாட
செந்தாமரைக் கையால் சீரார் வளையொலிப்ப
வந்து திறவாய் மகிழ்ந்தேலோர் எம்பாவாய்.
பாடல் விளக்கம்: மதநீர் சிந்தும் யானைகளுக்குச் சொந்தக்காரரும், போரில் பின்வாங்காத தோள்வலிமை கொண்டவருமான நந்தகோபனின் மருமகளாக நப்பின்னையார் அறியப்படுகிறார். வாசனைமிகு கூந்தல், பூப்பந்தொத்த விரல்களைக் கொண்ட அவர் வாசலைத் திறக்குமாறு ஒரு குழுவினர் காத்திருக்கின்றனர்.
காலை வேளையின் கோழிக் கூவலும், குருக்கத்திக் கொடியில் குயில்களின் இசையும் எங்கும் பரவுகிறது. இச்சூழலில், நப்பின்னையின் கணவனைப் புகழ்ந்து பாடுவதே அக்குழுவின் நோக்கம். அழகிய வளையல்கள் ஒலிக்க, செந்தாமரை ஒத்த கரத்தால் அவர் கதவு திறக்க, காத்திருப்போரின் உள்ளம் மகிழ்ச்சியடையும்.
திருவெம்பாவை பாடல் 18
அண்ணாமலையான் அடிக்கமலம் சென்றிறைஞ்சும்
விண்ணோர் முடியின் மணித்தொகை வீறற்றாற் போல்
கண்ணார் இரவி கதிர் வந்து கார் கரப்பத்
தண்ணார் ஒளி மழுங்கித் தாரகைகள் தாமகல
பெண்ணாகி ஆணாய் அலியாய் பிறங்கொளிசேர்
விண்ணாகி மண்ணாகி இத்தனையும் வேறாகி
கண்ணா ரமுதமாய் நின்றான் கழல்பாடி
பெண்ணே இப்பூம்புனல் பாய்ந்தாடலோர் எம்பாவாய்.
பாடல் விளக்கம்: சூரியனின் உதயம் நட்சத்திர ஒளியை மங்கச் செய்வதுபோல, அண்ணாமலையாரின் திருவடிகளைத் தேவர்கள் பணிந்தபோது, அவர்களது மணிமுடிகளிலுள்ள நவரத்தினங்கள் ஒளி இழந்தன. அவர் ஆண், பெண், அலி என முப்பால் வடிவங்களிலும், வானம், பூமி மட்டுமன்றி, உலகங்கள் தோறும் திகழும் சர்வவல்லமை கொண்டவராக போற்றப்படுகிறார்.
கண்ணுக்கு இனிய அமுதம் போன்ற அவரது சிலம்பணிந்த திருவடிகளைப் போற்றிப் பாடி, மலர்கள் மிதக்கும் புண்ணிய குளத்தில் பாய்ந்து நீராடுவது அண்ணாமலையாரின் வழிபாட்டில் ஒரு முக்கிய சடங்காக பக்தர்களால் பின்பற்றப்படுகிறது.
-
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம் -
டிடிவி பராக்.! இரட்டை இலை என்னோடது.. அமித் ஷாவிடம் டீல் பேசிய அண்ணன்! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
கிளம்பு, கிளம்பு.. போர் முடிஞ்சிப்போச்சு.. டிரம்ப் அறிவித்த 'அந்த' ஒரு விஷயம்.. ஈரான் செம ஹேப்பி! -
“அதிமுக என்ற கட்சியே இருக்காது.. இன்னும் பல MLAக்கள் தவெகவுக்கு வருவார்கள்” - அமைச்சர் செங்கோட்டையன் -
பாரதிராஜா வேண்டுமென்றே இறந்தார்! 6 மாதத்தில் நடந்தது என்ன? சிகிச்சை அளித்த மருத்துவர் வேதனை -
பெரிய தலக்கட்டு..திமுகவுக்கு தாவும் மூவரணி! வேதனையில் எடப்பாடி! சைக்கிள் கேப்பில் புகுந்த அறிவாலயம்!












Click it and Unblock the Notifications