சுவாமி சரணம் ஐயப்பா..சபரிமலையில் 27ல் தேதி மண்டல பூஜை! நாளை சபரிக்கு புறப்படுகிறது ஐயனின் தங்க அங்கி
திருவனந்தபுரம்: உலகப் புகழ் பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில் மகரவிளக்கு மற்றும் மண்டல பூஜைக்கான சீசன் தற்போது நடைபெற்று வருவதால் லட்சக்கணக்கான பக்தர்கள் சபரிமலையில் குவிந்து வருகின்றனர். இந்த நிலையில் இந்த சீசனின் சிகர நிகழ்ச்சியான மண்டல பூஜை வரும் 27ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்காக நாளை தங்க அங்கி ஊர்வலம் தொடங்குகிறது.
உலகப் புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜை மற்றும் மகரவிளக்கு திருவிழாவுக்கான சீசன் தற்போது முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. ஆண்டுதோறும் நடைபெறும் இந்த புனித காலகட்டத்தில், நாடு முழுவதும் மட்டுமல்லாமல் வெளிநாடுகளிலிருந்தும் லட்சக்கணக்கான ஐயப்ப பக்தர்கள் சபரிமலைக்கு வந்து தரிசனம் செய்து வருகின்றனர்.

இந்த ஆண்டு சீசனிலும் பக்தர்களின் வருகை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மண்டல பூஜை மற்றும் மகரவிளக்கு விழாவை முன்னிட்டு, கடந்த 16ஆம் தேதி சபரிமலை ஐயப்பன் கோவிலின் நடை திறக்கப்பட்டது.
ஐயப்ப பக்தர்கள் யாத்திரை
அதனைத் தொடர்ந்து, 41 நாள் விரதத்தை கடைப்பிடித்து மாலை அணிந்த ஐயப்ப பக்தர்கள் சபரிமலைக்கு யாத்திரையாக வந்து கொண்டிருக்கிறார்கள். "ஸ்வாமியே சரணம் ஐயப்பா" என்ற சரண கோஷம் மலையும், வனப்பகுதியும் முழுவதும் ஒலித்து வருகிறது. இந்த புனித யாத்திரை ஐயப்பனின் பக்தி, ஒழுக்கம் மற்றும் சமத்துவத்தை வெளிப்படுத்தும் அடையாளமாக கருதப்படுகிறது.
சபரிமலை மண்டல பூஜை
இந்த சீசனின் மிக முக்கியமான நிகழ்ச்சியாக கருதப்படும் மண்டல பூஜை வரும் 27ஆம் தேதி நடைபெறும் என்று சபரிமலை தேவசம்போர்டு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. மண்டல பூஜை சபரிமலை ஐயப்பன் கோவிலில் மிக முக்கியமாக அனுசரிக்கப்படும் ஒரு புனித விழாவாகும். 41 நாட்கள் நீடிக்கும் இந்த மண்டல பூஜை, மலையாள மாதமான விருச்சிகத்தின் முதல் நாளில் தொடங்கி, தனு மாதத்தின் 11 அல்லது 12ஆம் நாளில் நிறைவடைகிறது. இந்த காலகட்டத்தில் பக்தர்கள் கடுமையான விரத முறைகளை பின்பற்றி, தங்கள் வாழ்க்கை முழுவதும் ஒழுக்கம் மற்றும் தூய்மையை கடைப்பிடித்து ஐயப்பனை வழிபடுகின்றனர்.
தேவசம்போர்டு அறிவிப்பு
இந்த ஆண்டு மண்டல பூஜை, டிசம்பர் 27ஆம் தேதி காலை 10.10 மணிக்கும் 11.30 மணிக்கும் இடைப்பட்ட சுப முகூர்த்தத்தில் நடைபெற உள்ளது. அன்றைய முக்கிய தீபாராதனை 11.30 மணிக்கு நடைபெறும் என்றும் தேவசம்போர்டு தெரிவித்துள்ளது. இந்த நேரத்தில் நடைபெறும் பூஜையை காண்பது பெரும் புண்ணியமாக கருதப்படுவதால், அந்த நாளில் பக்தர்களின் கூட்டம் அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆரண்முள தங்க அங்கி
மண்டல பூஜைக்காக ஐயப்பனுக்கு அணிவிக்கப்படும் தங்க அங்கி ஊர்வலமும் பக்தர்களிடையே மிகுந்த ஆன்மீக முக்கியத்துவம் பெற்றதாகும். இந்த தங்க அங்கி ஊர்வலம், டிசம்பர் 23ஆம் தேதி ஆறன்முள பார்த்தசாரதி கோவிலிலிருந்து தொடங்குகிறது. பல கிராமங்கள் மற்றும் கோவில்களை கடந்து செல்லும் இந்த ஊர்வலம், டிசம்பர் 26ஆம் தேதி மாலை தீபாராதனைக்கு முன்பாக சபரிமலை சந்நிதானத்தை வந்தடையும். அதன் பின்னர் ஐயப்பனுக்கு தங்க அங்கி அணிவிக்கப்பட்டு, அன்று மாலை 6.30 மணிக்கு சிறப்பு தீபாராதனை நடைபெறும்.
மகர ஜோதி விழா
அடுத்த நாள், 27ஆம் தேதி மதியம் மீண்டும் தங்க அங்கி அணிவித்து முக்கிய தீபாராதனை நடைபெறும். அதனைத் தொடர்ந்து, இரவு 11 மணிக்கு ஹரிவராசனம் இசைக்கப்பட்டு கோவில் நடை அடைக்கப்படும். மண்டல பூஜை முடிந்த பிறகு, மகரவிளக்கு ஜோதி தரிசனம் மற்றும் திருவிழாவிற்காக டிசம்பர் 30ஆம் தேதி மாலை மீண்டும் நடை திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஜனவரி 15ஆம் தேதி மகரவிளக்கு பூஜையும், மகர ஜோதி தரிசனமும் நடைபெற உள்ளது.
-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications