தமிழ் புத்தாண்டு: வடபழனி முருகன் கோயிலில் திரண்ட பக்தர்கள்.. அதிகாலை முதலே சாமி தரிசனம்
சென்னை: தமிழகம் முழுவதும் சித்திரைத் திருநாள் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழ் புத்தாண்டை முன்னிட்டு சென்னை வடபழனி முருகன் கோயிலில் இன்று அதிகாலை முதலே பக்தர்கள் திரளாகக் கூடி சாமி தரிசனம் செய்தனர். புத்தாண்டை சிறப்பாக தொடங்கும் வகையில், திரளான பக்தர்கள் கோயிலுக்கு வந்து வழிபட்டனர்.
தமிழ் புத்தாண்டு, ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதத்தின் முதல் நாளில் கொண்டாடப்படுகிறது. புதிய தொடக்கங்கள், நம்பிக்கைகள் மற்றும் வளமான வாழ்க்கைக்கான ஆசைகளுடன் இந்த நாள் சிறப்பாகக் கடைப்பிடிக்கப்படுகிறது. கனி காணுதல் இதில் முக்கிய அம்சமாகும். மா, பலா, வாழை ஆகிய முக்கனிகள், பழ வகைகள், தங்கம், வெள்ளி நகைகள், கண்ணாடி வைத்து காலை கண் திறந்தவுடன் கண்ணாடியில் தன்னையும், அதன் அருகில் வைக்கப்பட்ட வளமான பொருட்களையும் பார்க்கும் போது, ஆண்டு முழுவதும் அதிர்ஷ்டம், செழிப்பு, சந்தோஷம் கிடைக்கும் என்று நம்பப்படுகிறது.

குடும்பத்துடன் சேர்ந்து இந்த திருநாளை கொண்டாடுவது, உறவுகளை மேலும் வலுப்படுத்தும் ஒரு இனிய தருணமாகவும் அமைகிறது. தமிழ்ப் புத்தாண்டை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து கோயில்களிலும் அதிகாலை முதலே காத்திருந்து சுவாமியை வழிபட்டனர். சென்னை வடபழனி முருகன் கோயில் பகுதியில் இன்று அதிகாலை முதலே பக்தர்கள் திரண்டு வழிபட்டனர்.
புத்தாண்டின் முதல் நாளில் சாமி தரிசனம் செய்தால் ஆண்டெங்கும் நலன் கிடைக்கும் என்ற நம்பிக்கையால், குடும்பத்துடன் பலரும் கோயிலுக்கு வந்திருந்தனர். கோயிலில் சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடத்தப்பட்டது. பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களின் வசதிக்காக கூடுதல் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
-
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம்












Click it and Unblock the Notifications