கோயிலின் அருகிலே கூடிய கூட்டங்கள் தலையா? கடலலையா? பக்தர் வெள்ளத்தில் திக்குமுக்காடும் திருச்செந்தூர்
தூத்துக்குடி: உலகப் புகழ்பெற்ற திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கந்த சஷ்டி திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் இன்று மாலை கோவில் கடற்கரையில் நடக்கிறது. இதனை காண்பதற்காக லட்சக்கணக்கான பக்தர்கள் கோவிலில் குவிந்து வருகின்றனர். இந்நிலையில், கடலில் புனித நீராடும் பக்தர்கள் பாதுகாப்பிற்காக கடலில் தடுப்புகள் அமைத்து 8 பைபர் படகுடன் கடலோர பாதுகாப்பு குழும போலிசார், மற்றும் நீச்சல் வீரர்கள் உட்பட 80 பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
முத்தமிழ் கடவுளாம் முருகப் பெருமானின் ஆறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் நடைபெறும் திருவிழாக்களில் பிரசித்தி பெற்ற திருவிழாவான கந்த சஷ்டி திருவிழா கடந்த 22-ம் தேதி யாகசாலை பூஜையுடன் தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
7-வது நாளான இன்று கந்த சஷ்டி திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் இன்று மாலை கோவில் கடற்கரையில் நடக்கிறது. இதற்காக கோவில் நடை அதிகாலை 1மணிக்கு திறக்கப்பட்டது. 1.30 விஸ்வரூப தீபாராதனையும், 2 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம் நடைபெற்றது.

கந்த சஷ்டி திருவிழா
காலை 7 மணிக்கு யாகபூஜை தொடங்கியது. 9 மணிக்கு உச்சி கால அபிஷேகம் நடைபெறுகிறது. அதனைத் தொடர்ந்து யாகசாலையில் சுவாமி ஜெயந்திநாதருக்கு தீபாராதனை நடைபெற உள்ளது. இதனையடுத்து 12.45 மணிக்கு சுவாமி ஜெயந்திநாதர் தங்க சப்பரத்தில் எழுந்தருளி சண்முக விலாச மண்டபம் வருகிறார். அங்கு மகா தீபாராதனை நடக்கிறது.
திருச்செந்தூர் சூரசம்ஹாரம்
இதனையடுத்து 2.00 மணிக்கு திருவாவடுதுறை ஆதீனம் சஷ்டி மண்டபத்தில் வைத்து சுவாமி ஜெயந்தி நாதருக்கு மாவு பொடி, மஞ்சள் பொடி, திரவிய பொடி உள்பட பல்வேறு அபிஷேக பொருட்களால் அபிஷேகம் நடைபெற்று அலங்கார தீபாராதனைக்கு பின்னர் 4.30மணிக்கு சுவாமி ஜெயந்தி நாதர் கடற்கரையில் எழுந்தருளுகிறார். அங்கு சுவாமி ஜெயந்திநாதர் தன்னிடம் போரிட வரும் யானை முகம் கொண்ட சூரனையும், அடுத்து சிங்கமுகனையும், மூன்றாவதாக தன் முகம் கொண்ட சூரனையும் தன் வேலால் வதம் செய்கிறார். இறுதியில் மரமாக மாறிய சூரனை சுவாமி ஜெயந்தி நாதர் சேவலாகவும், மயிலாகவும் மாற்றி தன்னோடு ஜக்கியமாக்கி கொள்ளும் நிகழ்ச்சி நடக்கிறது.
பக்தர்கள் கூட்டம்
இதில் பல லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள். இதில் 4000 போலிசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் கடற்கரையில் உயர் கோபுரங்கள், 250 கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது. இரண்டு ஹெலிகேம் கேமரா இவற்றின் மூலம் கண்காணிக்க தனி கட்டுப்பாட்டறை அமைக்கப்பட்டு போலீசார் கண்காணித்து வருகின்றனர். கடலில் புனித நீராடும் பக்தர்கள் பாதுகாப்பிற்காக கடலில் தடுப்புகள் அமைத்து 8 பைபர் படகுடன் கடலோர பாதுகாப்பு குழும போலிசார், மற்றும் நீச்சல் வீரர்கள் உட்பட 80 பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
கண்காணிப்பு தீவிரம்
அவசர தேவைகளுக்காக 14 ஆம்புலன்ஸ்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. 400 கழிவறைகள் அமைக்கப்பட்டுள்ளது. 650 தூய்மை பணியாளர்கள் பணிகள் அமர்த்தப்பட்டுள்ளனர். தமிழகத்தின் பல்வேறு பகுதியிலிருந்து 450 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளது. மூன்று தற்காலிக பேருந்து நிறுத்தங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த தற்காலிக பேருந்து நிறுத்தத்தில் இருந்து கோவிலுக்கு செல்ல 45 இலவச பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
சேலத்தில் விபச்சாரத்தில் தள்ளப்பட்ட 50 பெண்கள்? பல ஆபாச வீடியோக்கள்! தவெக மணிகண்டன் சிக்கியது எப்படி -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
திமுக மகளிரணி கூட்டத்திற்கு வந்து! வரவேற்க யாரும் இல்லாததால் திரும்பிச் சென்ற துரைமுருகன் -
ரூ.115 லட்சம் கோடி சொத்து இருந்து என்ன பயன்.. எலான் மஸ்க் வீட்டை பார்த்தீங்களா.. ஒரு 3BHK வீட்டை விட சிறியது? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது -
விவாகரத்து பேப்பர்களை கிழித்தெறிந்து கணவரை கட்டி பிடித்த மனைவி! கோர்ட் வாசலில் நடந்த உருக்கமான செயல்












Click it and Unblock the Notifications