Tirupati: திருப்பதிக்கு மே மாசம் போறீங்களா? ரூ 300 தரிசன டிக்கெட் இன்று காலை 10 மணிக்கு ரிலீஸ்!
திருப்பதி: திருப்பதி ஏழுமலையானை மே மாதத்தில் தரிசனம் செய்வதற்கான ரூ 300 சிறப்பு தரிசன டிக்கெட் இன்று வெளியாகிறது. இதை தேவஸ்தானத்தின் இணையதளத்தில் போய் முன்பதிவு செய்யலாம்.
திருப்பதி ஏழுமலையானை நாள்தோறும் ஆயிரக்கணக்கானோர் தரிசனம் செய்து வருகிறார்கள். இன்று கூட்டம் இருக்கும், இருக்காது என சொல்ல முடியாத அளவுக்கு திருமலை திருப்பதி உள்ளது.

திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்ய மாதந்தோறும் பல்வேறு வகையான டிக்கெட்டுகள் வெளியிடப்படுகின்றன. அதிலும் ரூ 300 சிறப்பு தரிசன டிக்கெட்டுகள் 90 நாட்களுக்கு முன்பே முன்பதிவு செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. நினைத்த நேரத்தில் திருப்பதி செல்ல வேண்டுமென்றால் இலவச தரிசனத்தில் செய்யலாம். இல்லாவிட்டால் 90 நாட்கள் காத்திருக்க வேண்டும்.
இதை விட்டால் ஏழுமலையானை இலவச தரிசனத்திலோ அல்லது நடைபாதை வழி தரிசனத்திலோ சேவிக்கலாம். அந்த வகையில் தற்போது மே மாதத்திற்கான டிக்கெட்டுகள் கடந்த 21 ஆம் தேதி முதல் தேவஸ்தானம் வெளியிட்டு வருகிறது.
அந்த வகையில் மே மாதம் திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க ஆர்ஜித சேவைகளான சுப்ரபாதம், தோமாலை, அர்ச்சனை, அஷ்டதள பாத பத்மாராதனை சேவை உள்ளிட்டவைகளுக்கு கடந்த 19ஆம் தேதி ஆன்லைனில் டிக்கெட்டுகள் வெளியிடப்பட்டன.
அது போல் பிப்ரவரி 21 ஆம் தேதி காலை 10 மணிக்கு மின்னணு குலுக்கல் மூலம் ஏழுமலையானை தரிசனம் செய்ய ஆன்லைனில் டிக்கெட்டுகள் வெளியாகின. இதில் குலுக்கலில் தேர்வு செய்யப்பட்ட பக்தர்கள் குறிப்பிட்ட நாளுக்குள் பணம் செலுத்தி டிக்கெட் பெற்றுக் கொண்டனர்.
கல்யாண உற்சவம், ஊஞ்சல் சேவை, ஆர்ஜித பிரம்மோற்சவம், சஹஸ்ர தீப அலங்கார சேவை மற்றும் வசந்தோற்சவம் ஆகியவற்றுக்கான டிக்கெட்டுகள் 22ம் தேதி காலை 10 மணிக்கு ஆன்லைனில் டிக்கெட் வெளியானது. இந்த சேவைகளில் பங்கேற்காமல் சாமி தரிசனத்திற்கு மட்டும் செல்ல 22 ஆம் தேதி மாலை 3 மணிக்கு ஆன்லைனில் டிக்கெட் வெளியானது.
அது போல் அங்கப்பிரதட்சணம் செய்ய நேற்று காலை 10 மணிக்கு டிக்கெட் வெளியானது. மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள், நாள்பட்ட நோய்கள் உள்ளவர்கள் சுவாமி தரிசனம் செய்ய இலவச சிறப்பு தரிசன டோக்கன்களும் நேற்று பிற்பகல் 3 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்பட்டது.
இந்த நிலையில் ரூ 300 சிறப்பு தரிசன டிக்கெட்டுகள் இன்று காலை 10 மணிக்கு ஆன்லைனில் வெளியாகிறது. இந்த டிக்கெட்டை புக் செய்தவர்கள் மட்டும் திருமலை அல்லது திருப்பதியில் தேவஸ்தானத்திற்கு சொந்தமான அறைகளை மாலை 3 மணிக்கு ஆன்லைனில் புக் செய்யலாம்.
லட்சக்கணக்கில் டிக்கெட்டுகள் வெளியானாலும் அறையின் எண்ணிக்கை மிகவும் குறைந்தே காணப்படும் என்பதால் முதலில் பதிவு செய்வோருக்கு முன்னுரிமை அடிப்படையில் அறைகள் கிடைக்கும். இதற்கான கட்டணம் வெறும் 100 ரூபாய் ஆகும். ரூ 500 டெபாசிட் தொகை. இது நீங்கள் அறையை காலி செய்துவிட்டு சாவியை ஒப்படைத்த ஒரு வாரத்திற்குள் உங்கள் வங்கிக் கணக்கில் வந்து சேரும்.
ஒரு வேளை அறை கிடைக்காவிட்டால், கீழ் திருப்பதியில் விடுதிகளில் அறைகளை புக் செய்து கொள்ளலாம். எனவே தரிசன டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய https://ttdevasthanams.ap.gov.in என்ற இணையதளத்திலோ TTD செயலியிலோ புக் செய்து கொள்ளலாம்.
-
பணிகள் கிட்டத்தட்ட ஓவர்.. இனி 4 வழி இல்லை.. சென்னையின் முக்கிய பகுதியில் மிகப்பெரிய 6 வழி சாலை -
அலர்ட்..! 10000 ரூபாய்க்கு மேல் பணம் அனுப்பினால் 'லாக்'.. ஆர்பிஐ கொண்டு வரும் புது ரூல்ஸ்! -
தங்கத்தை மிஞ்சப்போகும்.. பலரின் வீட்டிலேயே இருக்கும் ஒரு குட்டி உலோகம்.. அடிக்குது ஜாக்பாட்! -
தென்னிந்திய தர்காக்கள் மற்றும் பள்ளி வாசல்கள் சங்கம் அதிமுகவிற்கு ஆதரவு! -
கடலூரில் நாளை விஜய் பிரச்சாரத்தால் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரத்திற்கு அனுமதி மறுப்பு.. நடந்தது என்ன? -
ஐடி ஊழியர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த TCS.. மாச மாசம் பணம் சொளையா வரப்போகுது! -
சிறகடிக்க ஆசை: மீனாவிடம் முத்து மறைக்கும் உண்மை! விஜயா பற்றி அண்ணாமலைக்கு தெரிந்த பெரிய ரகசியம்! -
அமெரிக்காவை அலறவிட்ட பிரான்ஸ்! 129 டன் தங்கத்தை மீட்க "கோல்டன்" ஸ்கெட்ச்.. அப்போ இந்தியா பிளான் என்ன -
விஜய்யுடன் சேர்ந்து முதல்வராக முயன்ற எடப்பாடி! நான்தான் முறியடித்தேன்.. போட்டு உடைத்த செங்கோட்டையன் -
சிறகடிக்க ஆசை: விஜயாவின் மாற்றம்! முத்து, மீனாவை பெருமையாக பேசுறாங்களே! குடும்பத்தில் கொண்டாட்டம் -
ஈரான் வேலையை காட்டியது.. ஹார்முஸ்-ல் கப்பல் செல்ல அனுமதி மறுப்பு.. அமெரிக்கா ஷாக்! -
ரஷ்யா மாஸ்டர் பிளான்: இந்தியாவுக்கு ஜாக்பாட்.. சீனா உதவி.. ஒன்று கூடிய BRICS நாடுகளால் டிரம்ப் ஷாக்!












Click it and Unblock the Notifications