மே மாதம் திருப்பதிக்கு போக திட்டமா? வெளியானது "ரூ 300"-க்கான தரிசன டிக்கெட்! வேகமாக புக்கிங்!

Subscribe to Oneindia Tamil

திருப்பதி: மே மாதம் திருப்பதிக்கு செல்ல ரூ 300 சிறப்பு தரிசன டிக்கெட்டுகள் கிடைக்கவில்லையா, கவலை வேண்டாம், இன்று காலை 10 மணிக்கு சீனிவாச திவ்ய அனுகிரக ஹோமத்திற்கான டிக்கெட்டுகளை திருமலை திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ளது.

திருமலை திருப்பதிக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கிறார்கள். அது போல் விசேஷ நாட்களில் லட்சக்கணக்கானோர் வருகை தருகிறார்கள். இந்த நிலையில் ஏழுமலையானை தரிசிக்க மாதந்தோறும் 24 ம் தேதி ரூ 300 தரிசன டிக்கெட்டுகளும் சேவா டிக்கெட்டுகளும் ரிலீஸ் செய்யப்படுகின்றன.

tirupati spirituality

அதாவது 90 நாட்களுக்கு முன்பு முன்பதிவு செய்தால் மட்டுமே ஏழுமலையானை கட்டண தரிசனத்திலோ சேவையிலோ தரிசிக்கலாம். இல்லாவிட்டால் நடைபாதை தரிசனம் அல்லது இலவச தரிசனத்தில்தான் செல்ல முடியும்.

இந்த ஆண்டு மே மாதத்திற்கு டிக்கெட்டுகள் விற்கப்பட்டுவிட்டன. இந்த நிலையில் ஜூலை மாதத்திற்கான டிக்கெட்டுகளின் அட்டவணை கடந்த 21 ஆம் தேதி வெளியிடப்பட்டது. இந்த நிலையில் ஜூலை மாதத்திற்கான ரூ 300 சிறப்பு தரிசன டிக்கெட் நேற்று வெளியானது.

மொத்தம் 4.09 லட்சம் டிக்கெட்டுகள் ரிலீஸ் செய்து அத்தனையும் 10 நிமிடங்களுக்குள்ளாக விற்றுத் தீர்ந்தன. இதைத் தொடர்ந்து மாலை 3 மணிக்கு அறைகள் புக்கிங் நடந்தது.

அதிலும் 37 ஆயிரத்து சொச்சம் எண்ணிக்கையிலான அறைகள் திருமலையில் மட்டும் ரிலீஸ் ஆனது. அவையும் சில நிமிடங்களில் விற்றுத் தீர்ந்தன. எனவே இனி திருப்பதிக்கு செல்ல வேண்டுமானால் இலவச தரிசனம், இலவச தரிசன டோக்கன், நடைபாதை தரிசனம் போன்றவற்றில்தான் செல்ல வேண்டும் என நீங்கள் நினைத்தால் தவறு.

மே மாதம் ரூ 300 தரிசன டிக்கெட்டில் செல்லலாமே! எப்படி தெரியுமா? அதாவது ஸ்ரீனிவாச திவ்ய அனுகிரக விசேஷ ஹோமம் என்பது அலிபிரி அருகே இருக்கும் கோயிலில் நடைபெறும். இதற்கு ஒரு மாதத்திற்கு முன்பே ஆன்லைனில் புக் செய்ய வேண்டும். இதற்கு ஒவ்வொரு மாதமும் 24 அல்லது 25 தேதிக்கு புக்கிங் செய்யப்படுகிறது.

tirupati spirituality

ரூ 1600 செலுத்தி ஹோமத்தில் கலந்து கொள்ளலாம். ரூ 1000 ஹோமத்திற்கு போக மீதமுள்ள ரூ 600 இல் இரு ரூ 300 சிறப்பு தரிசன டோக்கன்கள் வழங்கப்படும். இந்த ஹோமத்தில் கண்டிப்பாக கலந்து கொண்டால் மட்டுமே ஏழுமலையானை தரிசிக்க அனுமதிக்கப்படுவார்கள். இந்த ஹோமமானது தினமும் காலை 7 மணி முதல் 11 மணி வரை நடைபெறுகிறது. அந்த வகையில் இந்த ஹோமத்திற்கான டிக்கெட் இன்று காலை 10 மணிக்கு திருமலை திருப்பதி தேவஸ்தான இணையதளத்தில் வெளியானது. மே மாதம் பள்ளிகளுக்கு விடுமுறை என்பதால் டிக்கெட்டுகள் வேகமாக புக்காகி வந்தது. காலை 9 மணிக்கு மட்டுமே புக்கிங் செய்ய முடியும். ஒரு நாளை 150 முதல் 170 டிக்கெட்கள் வீதம் 4650 முதல் 5270 டிக்கெட்டுகள் வரை விற்பனைக்கு வந்துள்ளது.

இந்த டிக்கெட்டுகளை புக் செய்து கொண்டால் மே மாதத்திற்கான ரூ 300 தரிசன டிக்கெட்டுகள் கிடைக்கும். இவற்றை கொண்டு நீங்கள் செல்லும் தினத்தில் மாலை 3 மணிக்கு நேராக ரூ 300 தரிசனத்திற்கு செல்லும் வரிசையில் நின்றுவிடலாம்.

டிக்கெட் கட்டணம்: ₹1,600 (இது இரண்டு நபர்களுக்கானது).

பிரிப்பு: ஹோமத்திற்கு ₹1,000 + இரண்டு பேருக்கான சிறப்பு நுழைவு தரிசனத்திற்கு (SED) ₹600 (தலா ₹300).

தரிசன வசதி: இந்த டிக்கெட்டிலேயே திருமலை ஸ்ரீவாரி சிறப்பு நுழைவு தரிசனமும் (Rs.300 Special Entry Darshan) அடங்கும். எனவே தரிசனத்திற்கு தனியாக டிக்கெட் எடுக்க வேண்டிய அவசியமில்லை.

ஆன்லைன்: ஒவ்வொரு மாதமும் குறிப்பிட்ட தேதியில் (பொதுவாக 25 முதல் 27-ஆம் தேதிக்குள்) அடுத்த மாதத்திற்கான கோட்டா TTD-ன் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் (ttdevasthanams.ap.gov.in) வெளியிடப்படும்.

நேரடி முன்பதிவு (Offline): அலிபிரியில் உள்ள கோ மந்திர் கவுன்டர்களில் நேரடி டிக்கெட்டுகள் வழங்கப்படுகின்றன. ஆனால், இவை மிகக் குறைந்த எண்ணிக்கையிலேயே (சுமார் 50 டிக்கெட்டுகள்) ஒதுக்கப்படுவதால், முன்கூட்டியே செல்வது நல்லது.

tirupati spirituality

முக்கிய விதிகள் மற்றும் நேரம்

நேரம்: ஹோமம் தினமும் காலை 9:00 மணி முதல் 11:00 மணி வரை நடைபெறும்.

ஆடை கட்டுப்பாடு: கட்டாயம் பாரம்பரிய உடையில் வர வேண்டும்.

ஆண்கள்: வேட்டி, சட்டை அல்லது மேல் துண்டு.

பெண்கள்: புடவை, தாவணி அல்லது துப்பட்டாவுடன் கூடிய சுடிதார்.

அடையாள அட்டை: முன்பதிவு செய்த அசல் அடையாள அட்டை (ஆதார் கார்டு) கட்டாயம் வைத்திருக்க வேண்டும். இந்த ஹோமத்தில் கணவன் மனைவியாகத்தான் கலந்து கொள்ள வேண்டும் என்றில்லை, உங்கள் உறவினர்கள், நண்பர்களுடனும் கலந்து கொள்ளலாம். ஒரு ஐடியில் 1 டிக்கெட் மட்டுமே புக் செய்ய முடியும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+