Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Vaikunta Ekadasi 2025: திருப்பதியில் வைகுண்ட துவார தரிசன டிக்கெட்டுகளை வெளியிட்ட தேவஸ்தானம்

Subscribe to Oneindia Tamil

திருப்பதி: திருப்பதி ஏழுமலையானை வைகுண்ட துவாரம் வழியாக தரிசனம் செய்வதற்கான முன்பதிவு இன்று காலை 10 மணிக்கு தேவஸ்தானம் வெளியிட்டது. லக்கி டிப் முறையில் முதல் 3 நாட்களுக்கான முன்பதிவு டோக்கன்களை பக்தர்கள் பெறலாம்.

உலக புகழ்பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தினசரி ஆயிரக்கணக்கானோர் தரிசனம் செய்கிறார்கள். அது போல் விசேஷ நாட்களில் இந்த எண்ணிக்கை லட்சத்தை தாண்டும். திருப்பதியில் பக்தர்கள் கூட்டம் புரட்டாசி மாதத்திலும் வைகுண்ட ஏகாதசியிலும்தான் கூட்டம் அதிகமாக இருக்கும்.

tirupati tirumala vaikunta ekadasi 2025

ஒவ்வொரு ஆண்டும் பெருமாள் கோயில்களில் இராப்பத்து, பகல் பத்து என வைகுண்ட ஏகாதசி விமரிசையாக கொண்டாடப்படும். அந்த வகையில் இந்த ஆண்டு வைகுண்ட ஏகாதசி டிசம்பர் 30ஆம் தேதி கொண்டாடப்படுகிறது.

இந்த நாளில் வைகுண்ட வாசல் வழியாக பெருமாளை தரிசிக்கலாம். ஸ்ரீரங்கம், திருப்பதி, காஞ்சிபுரம் வரதராஜர் கோயில், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில், முகப்பேர் சந்தான சீனிவாச கோயில் உள்ளிட்ட கோயில்களில் வைகுண்ட துவாரம் என தனியே ஒரு வழி இருக்கும்.

இந்த வழி ஆண்டு முழுவதும் மூடப்பட்டிருக்கும். வைகுண்ட ஏகாதசி அன்று மட்டும் திறக்கப்படும். அன்று முதல் 10 நாட்களுக்கு இந்த வழி வழியாக பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்வர். அந்த வழியில்தான் உற்சவர் உலா வந்திருப்பார். வைகுண்ட ஏகாதசியில் பெருமாளை தரிசிப்பது புண்ணியம்.

அந்த வகையில் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் டிசம்பர் 30, 31, ஜனவரி 1 ஆகிய மூன்று தேதிகளில் லக்கி டிப் முறையில் மட்டுமே ஆன்லைனில் தரிசன டிக்கெட் புக் செய்ய முடியும். மற்ற நாட்களில் ஆன்லைன் தரிசனங்கள், சேவைகள் ஆகியன ரத்து செய்யப்படுகிறது.

வைகுண்ட துவார தரிசனத்திற்கு சாதாரண பக்தர்களுக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் முதல் 3 நாட்களும் நேரடி சர்வ தரிசனம் மூலம் மட்டுமே அனைத்து பக்தர்களும் அனுமதிக்கப்படுவார்கள்.

ஜனவரி 2ஆம் தேதி முதல் ஜனவரி 8ஆம் தேதி வரை ரூ 300 சிறப்பு தரிசன டிக்கெட்கள் மூலம் பக்தர்கள் வைகுண்ட துவாரம் வழியாக சென்று ஏழுமலையானை தரிசனம் செய்யலாம். வைகுண்ட துவார தரிசனத்திற்கான லக்கி டிப் நவம்பர் 27ஆம் தேதி காலை 10 மணிக்கு தொடங்கப்படுகிறது.

இந்த லக்கி டிப்பில் ஒரு மொபைல் எண்ணை வைத்து அதிகபட்சமாக 4 பேருக்கு டிக்கெட் புக்கிங் செய்யலாம். லக்கி டிப் முறையில் வைகுண்ட துவார தரிசனம் செய்ய தேர்வு செய்யப்பட்டவர்கள் குறித்த விவரம் டிசம்பர் 2ஆம் தேதி வெளியிடப்படுகிறது. இதில் தேர்வு செய்யப்பட்டவர்கள், தங்களுக்கான கட்டணத்தை செலுத்தி, டிக்கெட்டை பெற்றுக் கொள்ளலாம்.

2026 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்திற்கு லக்கி டிப் புக் செய்தவர்களும் கூட வைகுண்ட துவார தரிசனத்திற்கான லக்கி டிப் தரிசனத்திற்கு முன்பதிவு செய்யலாம் என திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

வைகுண்ட துவார தரிசனத்திற்கான டிக்கெட்களை திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம், அவர்களின் மொபைல் ஆப் மற்றும் வாட்ஸ்ஆப் ஆகிய மூன்று முறைகளை பயன்படுத்தி புக் செய்து கொள்ளலாம்.

ஜனவரி 2 முதல் 8 வரை வைகுண்ட துவார தரிசனத்திற்கான ரூ.300 சிறப்பு தரிசன டிக்கெட் புக்கிங் டிசம்பர் 5ம் தேதி பகல் 3 மணிக்கு (ஒரு நாளைக்கு 15,000 டிக்கெட்கள் வெளியீடு) வெளியிடப்படும்.

அதே போல் ஜனவரி 2 முதல் 8 வரையிலான நாட்களுக்கான ஸ்ரீவாணி விஐபி பிரேக் தரிசன டிக்கெட் புக்கிங் டிசம்பர் 5ம் தேதி காலை 10 மணிக்கு (ஒரு நாளைக்கு 1000 டிக்கெட்கள் வெளியீடு) வெளியிடப்படும்.

மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள், கைக்குழந்தைகள் உள்ள பெற்றோர், பாதுகாப்புப் பணியாளர்கள் மற்றும் வெளிநாடுவாழ் இந்தியர்களுக்கான அனைத்து சிறப்புரிமை தரிசனங்களும் டிசம்பர் 30-ஆம் தேதி முதல் ஜனவரி 8-ஆம் தேதி வரை ரத்து செய்யப்படுகின்றன.

உயர் பொறுப்புகளில் உள்ள குறிப்பிட்ட பிரமுகர்களுக்கு மட்டுமே விஐபி பிரேக் தரிசனம் வழங்கப்படும். விஐபி தரிசனத்திற்கான அனைத்து பரிந்துரை கடிதங்களும் ரத்து செய்யப்படுகின்றன. அது போல் அனைத்து ஆர்ஜித சேவைகளும் ரத்தாகிறது என தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+