Maha Shivratri 2026: நாளை மகா சிவராத்திரி! சிவனை வழிபடுவது எப்படி?
சென்னை: மகா சிவராத்திரி எப்போது என்பதை தெரிந்து கொள்ளலாம். மாதந்தோறும் வரும் சிவராத்திரியை விட மகா சிவராத்திரி ஏன் விசேஷம் வாய்ந்தது என்பதையும் பார்க்கலாம்.
சிவனுக்கு 5 சிவராத்திரிகள் உள்ளன. அதாவது யோக சிவராத்திரி, நித்திய சிவராத்திரி, பக்ஷ சிவராத்திரி, மாச சிவராத்திரி, ஆண்டுதோறும் வரும் மகா சிவராத்திரி ஆகும்.

இதில் யோக சிவராத்திரி என்பது யோகி தனக்கென ஒரு இரவை ஒதுக்கி சிவனை வழிபடுவது ஆகும். நித்திய சிவராத்திரி என்பது தினமும் வரும் சிவராத்திரியாகும். பக்ஷ சிவராத்திரி என்பது 15 நாட்களுக்கு ஒரு முறை வரும். மாச சிவராத்திரி மாதாமாதம் வரும். வருட சிவராத்திரி என்பது மகா சிவராத்திரியாகும். சிவனுக்குரிய இரவு என்பதாகும்.
மாசி மாதத்தில் கிருஷ்ணபட்சத்தில் அமாவாசைக்கு முதல் நாள் சதுர்தசியில் வரும். ஐம்புலன்களையும் கட்டுப்படுத்துவதே இந்த சிவராத்திரியின் நோக்கமாகும். உணவையும் தூக்கத்தையும் கட்டுப்படுத்துவது.
இந்த சிவராத்திரி என்பது ஆண்டுதோறும் பிப்ரவரி அல்லது மார்ச் மாதம் கொண்டாடப்படுவதாகும். அதாவது குளிர்காலத்தில் இருந்து வசந்த காலத்திற்கு வருவதை உணர்த்தும் ஒரு பூஜை ஆகும்.
அந்த வகையில் இந்த ஆண்டு சிவராத்திரி எப்போது என்பதை பார்க்கலாம். அதாவது நாளை பிப்ரவரி 15 -ஆம் தேதி மாலை 5.04 மணிக்கு தொடங்கி 16 ஆம் தேதி மாலை 5.34 மணி வரை கொண்டாடலாம்.
மகாசிவராத்திரி தினத்தன்று சிவபெருமான் ஆனந்த தாண்டவம் ஆடுவதாக இந்து சமயத்தவரால் பரவலாக நம்பப்படுகிறது. இந்த புனித நாளில், அனைத்து சிவன் கோயில்களிலும் நான்கு கால சிறப்பு பூஜைகள் விமரிசையாக நடைபெறுகின்றன.
பக்தர்கள் காலையில் நீராடிய பிறகு, உணவு உட்கொள்ளாமல் விரதத்தை மேற்கொள்வார்கள். விரதக் காலத்தில் சிவபெருமானின் நாமங்களை இடைவிடாமல் உச்சரிப்பதுடன், சிவலிங்கத்திற்கு வில்வ இலைகளால் அர்ச்சனை செய்வார்கள். மேலும், பழங்கள், தேன், நெய், இனிப்புகள், பால் போன்ற பல்வேறு புனித நிவேதனங்களை சிவபெருமானுக்கு பக்தியுடன் படைத்து வழிபடுவார்கள்.
இரவு முழுவதும் பக்தர்கள் கோயிலிலேயே தங்கி, சிறப்புப் பூஜைகளில் தீவிரமாகப் பங்கேற்று, சிவபெருமானின் பேரருளைப் பெறுகின்றனர்.
பக்தர்கள் கண்விழித்திருக்கவும், ஆன்மிக சிந்தனையில் நிலைத்திருக்கவும், சிவன் தொடர்பான நாடகங்களும் பரதநாட்டிய நிகழ்ச்சிகளும் பல கோயில்களில் அரங்கேற்றப்படுகின்றன. இந்த விரதமானது நான்கு கால பூஜைகள் முழுமையாக நிறைவடைந்த பின்னரே முடிவடையும்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications