100 சீர்வரிசை தட்டு.. மொத்த ஊரும் தரையில் தவழ்ந்து.. புதுச்சேரி கன்னியம்மன் கோயில் திருவிழா பூரிப்பு
சென்னை: மதுரை கள்ளழகர் திருவிழா ஒருபக்கம் களை கட்டி கொண்டிருந்தாலும், புதுச்சேரி கோயிலில் திருவிழா ஒன்று இணையத்தில் வியப்பை கூட்டி வருகிறது.. காட்டேரிக்குப்பம் அருள்மிகு கன்னி அம்மன் ஆலயத்தில் நடந்த சித்திரை திருவிழாவின் பிரம்மாண்டமும், விநோத சடங்குகளும் பக்தர்களுக்கு சிலிர்ப்பையும், பூரிப்பையும் தந்து வருகிறது. இந்த விழாவின் வீடியோக்கள், போட்டோக்கள்தான் இணையத்தில் வைரலாகி வருகிறது.
புதுச்சேரி அடுத்த காட்டேரிக்குப்பம் ராஜகுளம் அருள்மிகு கன்னியம்மன் ஆலயமானது, மிகவும் பிரசித்தி பெற்றது.. இந்த கோயிலில் வருடந்தோறும் சித்திரை திருவிழா விமர்சையாக நடைபெறுவது வாடிக்கையாகும்.. காப்பு கட்டுதல் மற்றும் கொடியேற்றம் இரண்டுமே, இந்த திருவிழாவின் துவக்க நிகழ்ச்சியாகும்.

காப்பு கட்டுதல், கொடியேற்றம்
அதன்படியே இந்த வருடமும் காப்பு கட்டுதலும், கொடியேற்றமும் பிரம்மாண்டாக கடந்த 29ம் தேதி விமர்சையாக தொடங்கியது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகமும், ஊர் இளைஞர்கள் ஒன்றுசேர்ந்து முன்னெடுத்திருந்தனர்.
இதற்காக பூஜை செய்து, கொடி கம்பம் நடப்பட்டது.. இந்த கொடி கம்பத்தை அலங்காரம் செய்து பக்தர்கள் எடுத்து வந்தனர்.. ஆண்கள், பெண்கள் என ஊர் மக்கள் அனைவருமே தரையில் தவழ்ந்தபடி "கோவிந்தா கோவிந்தா" என்ற கோஷத்துடன் சுவாமியை சுமந்து வந்தனர். அப்போது சில பக்தர்கள் சாலையில் அங்க பிரதட்சணை செய்து தங்களது வேண்டுதலை நிறைவேற்றி கொண்டனர்.
நேர்த்திக்கடன் - சாட்டையடி
பிறகு, கிராம மக்கள் அனைவரும் ஒன்றுசேர்ந்து, சாட்டையடி வாங்கி, தஙகளது நேர்த்தி கடனை செலுத்தினர்.. அப்போது சாட்டையடி வாங்கி கொண்டே கொடிக்கம்பத்தை நட்டு வைத்து, காப்பு கட்டிக் கொண்டனர்.. இதற்கு பிறகு அலங்கரிக்கப்பட்ட சப்த கன்னிகளுக்கு அபிஷேக ஆராதனைகள் நடத்தப்பட்டன.. தொடர்ந்து சிறப்பு பூஜைகளும், மகா தீபாரதனையும் நடந்தன..
பின்னர் சப்த கன்னிகளுக்கும் சிறப்பு பூஜைகளும் நடைபெற்றது. இதனை ஒட்டி அலங்கரிக்கப்பட்ட சப்த கன்னிகளுக்கு அபிஷேக ஆராதனைகள் நடத்தப்பட்டு சிறப்பு பூஜைகளும் நடத்தப்பட்டன.
சீர் வரிசை தட்டு - நேர்த்திக்கடன்
விழாவின் 9ம் நாளான நேற்று சப்த கன்னிகளில் வீதி உலாநடைபெற்றது.. இந்நிகழ்வில் எப்போதுமே, குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள், கடன் தொல்லையில் சிக்கியிருப்பவர்கள், தீராத நோயினால் பாதிக்கப்பட்டிருப்பவர்கள், குடும்பத்தில் ஒற்றுமையில்லாமல் அவதிப்படுபவர்கள் போன்றோர் திரண்டு வந்து, தங்கள் பிரச்சனைகளை சொல்லி பூஜித்து செல்வார்கள்.
அந்தவகையில், நேற்றைய நிகழ்விலும், பூ பழம் உள்ளிட்ட 50 வகையான பழங்கள், காய்கறிகள் , நவதானிய பொருட்களை சீர்வரிசை தட்டுகளில் எடுத்து வந்து, கன்னிகளுக்கு சிறப்பு பூஜை செய்தார்கள்.. இந்த நேர்த்திக் கடனை செலுத்த, அக்கம் பக்கம் கிராமங்களிலிருந்தும் ஏராளமானோர் திரண்டு வந்து, சாமி தரிசனம் செய்தனர்.
பக்தர்கள் அங்க பிரதட்சணம் செய்து சாட்டையடி வாங்கி காப்பு கட்டி கொடியேற்றும் வினோத நிகழ்வும், சீர்வரிசை தட்டுகளில் சப்த கன்னிமார்களுக்கு நேர்த்தி கடன் செலுத்திய நிகழ்வும்தான், வீடியோவாக இணையத்தில் வெளியாகி பக்தர்களுக்கு பரவசத்தை தந்து வருகிறது.
-
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
சேலத்தில் விபச்சாரத்தில் தள்ளப்பட்ட 50 பெண்கள்? பல ஆபாச வீடியோக்கள்! தவெக மணிகண்டன் சிக்கியது எப்படி -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
திமுக மகளிரணி கூட்டத்திற்கு வந்து! வரவேற்க யாரும் இல்லாததால் திரும்பிச் சென்ற துரைமுருகன் -
ரூ.115 லட்சம் கோடி சொத்து இருந்து என்ன பயன்.. எலான் மஸ்க் வீட்டை பார்த்தீங்களா.. ஒரு 3BHK வீட்டை விட சிறியது? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது -
விவாகரத்து பேப்பர்களை கிழித்தெறிந்து கணவரை கட்டி பிடித்த மனைவி! கோர்ட் வாசலில் நடந்த உருக்கமான செயல் -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை












Click it and Unblock the Notifications