100 வயதில் கன்னி சாமியாக சபரிமலை வந்த பாட்டி.. ஐயப்பனிடம் வைத்த "சர்வதேச அளவிலான" பிரார்த்தனை
சபரிமலை: 100 வயதில் மாலை அணிந்து கன்னிச்சாமியாக சபரிமலைக்கு வந்து ஐயப்பனை தரிசனம் செய்துள்ளார் மூதாட்டி ஒருவர். பாலஸ்தீனம் - இஸ்ரேல் இடையேயான போர் முடிவுக்கு வர வேண்டும் என்று ஐயப்பனிடம் பிரார்த்தனை செய்ததாகவும் அந்த பாட்டி கூறியுள்ளார்.
சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜை காலம் நடைபெற்று வருகிறது. இதற்காக கோவில் நடை நவம்பர் 16ஆம் தேதி திறக்கப்பட்டது. 17ஆம் தேதி முதல் தினசரியும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் இருமுடி சுமந்து வந்து ஐயப்பனை தரிசனம் செய்து வருகின்றனர். இதுவரைக்கும் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் சாமி தரிசனம் செய்துள்ளனர்.

சபரிமலையில் வரும் 27ஆம் தேதியன்று மண்டல பூஜைகள் நடைபெற உள்ளன. இந்த ஆலயத்திற்கு தவழ்ந்து வரும் குழந்தை முதல் 100 வயதானவர்கள் வரை மாலை அணிந்து வருகின்றனர். அந்த வகையில் கேரளாவை சேர்ந்த 100 வயது மூதாட்டி ஒருவர் கன்னிசாமியாக மாலை அணிந்து வந்து சபரிமலை சென்று சாமி தரிசனம் செய்துள்ளார்.
வயநாடு மாவட்டம் மூந்நானக்குழியை சேர்ந்தவர் பாருக்குட்டி அம்மா. அவர் தனது 100 வயதில் மாலையிட்டு விரதமிருந்த அவர் தனது பேரப்பிள்ளைகள் மற்றும் பிள்ளைகளுடன் பம்பை வந்தார். பின்னர் டோலி மூலம் சபரிமலை சன்னிதானம் சென்று சாமி தரிசனம் செய்தார்.
சாமி தரிசனம் செய்த பின்னர் பாருக்குட்டி அம்மா பேசிய போது " முன்பே சபரிமலைக்கு வரவேண்டும் என்று ஆசைப்பட்டேன். ஆனால் அந்த ஆசை நிறைவேறவில்லை. 100 வயதில் தான் சபரிமலைக்கு செல்ல வேண்டும் என்று அப்போது முடிவு செய்தேன். அதன்படி இப்போது சபரிமலைக்கு வந்துவிட்டேன். பதினெட்டாம் படியில் ஏறிச்சென்று பொன்னம்பலத்தை தரிசனம் செய்தேன். பகவானை பார்த்த போது கண்ணும் மனதும் நிறைந்துவிட்டது என்று கூறினார்.
3 தலைமுறைகளை சேர்ந்தவர்களுடன் வந்து 100 வயது பாட்டி சபரிமலையில் சாமி தரிசனம் செய்தது பக்தர்களுக்கு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து பாருக்குட்டி அம்மாவுக்கு சால்வை அணிவித்து மரியாதை அளிக்கப்பட்டது. சாமியே சரணம் ஐயப்பா என்று பக்தர்கள் பலரும் அப்போது முழக்கமிட்டனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications