ஆவணி பிறந்தது! ஆடி மாதத்தில் குழந்தை பிறந்தால் ஆட்டி படைக்குமா? உண்மை என்ன?
சென்னை: ஆடி மாதத்தில் குழந்தை பிறந்தால் ஆட்டி படைக்குமா, சித்திரையில் குழந்தை பிறந்தால் சீரழியுமா? உண்மைதான் என்ன? ஆடி மாதத்தில் ஏன் எந்த நல்ல காரியங்களையும் செய்யாமல் இருக்கிறார்கள் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்
இதுகுறித்து குவோராவில் ரத்தினம் வடிவேல் சேகர் என்பவர் கூறியிருப்பதாவது: ஆடி மாதத்தில் குழந்தை பிறந்தால் ஆட்டிப் படைக்குமா? ஆடி மாதம் ஆகாதது ஏன்? தெய்வீகப் பண்டிகைகள் தொடங்குகிற மாதம் ஆடி மாதம். அம்மனுக்கு உரிய மாதமாகவும் இது போற்றப்படுகிறது. பூமாதேவி பூமியில் அம்மனாக அவதரித்த மாதமும் ஆடி மாதம் தான்.

ஆனால், ஆடி மாதத்தில் சுபகாரியங்கள் ஏன் செய்வதில்லை? அதுமட்டுமின்றி ஆடி மாதத்தை ஆகாதது என்று சொல்வது ஏன்? ஆடி மாதத்தில் திருமணங்கள் செய்வதில்லை ஏன்? ஆடி மாதம் இறைவழிபாட்டிற்கு உகந்த மாதமாக போற்றப்படுகிறது. பொதுவாக இந்த மாதத்தில் விரதங்கள், வழிபாடுகள், விழாக்கள், பெரிய உற்சவங்கள் தொடர்ந்து வந்துக்கொண்டே இருக்கும். ஆன்மிகத்திலும், இறை வழிபாட்டிலும் மனம் ஈடுபட வேண்டும் என்பதற்காக ஆடி மாதத்தில் திருமணங்கள் செய்வதில்லை.
மேலும், ஆடி மாதத்தில் சுபகாரியங்களை தவிர்த்து ஆவணியில் தொடங்கினார்கள். ஆடி மாதத்தில் குழந்தை பிறந்தால் ஆட்டிப் படைக்குமா?
வருடத்தில் எந்த மாதம் வேண்டுமானாலும் குழந்தை பிறக்கலாம். இதில் எந்தவிதமான சிக்கலும் இல்லை.
ஆடி மாதத்தில் பிறந்த பல நபர்கள் அரசு பதவிகளிலும், அதிகார பதவிகளிலும் சிறப்பாக செயல்பட்டு கொண்டு இருப்பது கவனிக்கத்தக்கது.
ஒருவரது வாழ்க்கையை பிறந்த மாதமோ, நட்சத்திரமோ, ராசியோ, கிழமையோ நிர்ணயம் செய்வதில்லை.
ஆடி மாதத்தில் ஆண் குழந்தை பிறந்தால் ஆட்டிப் படைக்கும் என்பது எதுகை, மோனையுடன் அமைந்த பேச்சு வழக்காகும். ஆடி மாதத்தில் தம்பதியரை பிரித்து வைப்பது ஏன்? ஆடிமாதம் வந்தாலே புதியதாய் திருமணமான தம்பதிகளுக்கு ஆகாத மாதமாகிவிடும். வீட்டில் உள்ள பெரியவர்கள் ஒன்று சேர்ந்து புதுமணத் தம்பதிகளை பிரித்து பெண்ணை அம்மா வீட்டிற்கு அனுப்பிவிடுவார்கள்.
காலம்காலமாக நடந்து வரும் இந்த பழக்கம் சமூக ரீதியாக மட்டுமின்றி அறிவியல் ரீதியாகவும் நன்மை தரக்கூடியதுதான் என்று நிரூபிக்கப்பட்டுள்ளது.
ஆடி மாதம் புதுமண தம்பதிகள் இணையும் போது, கரு உண்டாகி அடுத்த பத்தாவது மாதமான சித்திரையில் குழந்தை பிறக்கலாம். சித்திரை அக்னி நட்சத்திரம் என்னும் கடுமையான வெப்பம் நிறைந்த மாதம். இம்மாதத்தில் குழந்தை பிறந்தால் எளிதில் சின்னம்மை போன்ற வெப்பத்தால் உண்டாகும் நோய்கள் குழந்தையை பாதிக்கும். உடல் நலிவடையும்.
குழந்தைகள் அடிக்கடி நோய்வாய்ப்படுவர் என்பதால்தான் 'சித்திரையில் குழந்தை பிறந்தால் சீரழியும்' என்ற சொல் வழக்கு உள்ளது. இதை காரணமாக கொண்டு தான் ஆடிமாதத்தில் தம்பதியர் சேர்வது நல்லதல்ல என்கின்றனர். எனவே, பிறக்கும் குழந்தையின் ஆரோக்கியத்திற்கு ஏற்றதல்ல என்ற காரணத்திற்காகவே தம்பதியரை பிரித்து வைக்கின்றனர். இவ்வாாறு அவர் தெரிவித்துள்ளார்.
-
வைகாசி விசாகம் 2026: எப்படி விரதம் இருந்தால் முருகனின் அருளை பெற முடியும்? -
Vaikasi Visagam: வைகாசி விசாகம் 2026! திருவண்ணாமலையில் இன்று கிரிவலம் செல்ல உகந்த நேரம் எது? -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்!












Click it and Unblock the Notifications