சிம்மத்தில் ஆட்சி பெறும் சூரியன்.. திருவோணம்.. கோகுலாஷ்டமி.. ஆவணியில் என்னென்ன விழாக்கள்
சென்னை: ஆவணி மாதம் சிம்ம மாதம் என மலையாளத்தில் அழைக்கப்படுகிறது. தமிழகத்தில், சித்திரை மாதம் புத்தாண்டாக இருப்பதுபோல, கேரளத்தில் ஆவணி எனப்படும் சிம்ம மாதமே புத்தாண்டு துவக்க மாதமாக இருக்கிறது. இந்த மாதத்தில் என்னென்ன பண்டிகைகள் கொண்டாடப்படுகிறது என்று பார்க்கலாம்.
தமிழகத்தில், ஆவணி மாதம் விவசாயத்திற்கு முக்கியமான காலமாகும். ஆடியில் விதைத்து, ஆவணியில் கண்போல பயிரை பாதுகாத்து வளர்க்கின்றனர் விவசாயிகள். கிராமப்புறங்களில் உள்ள தங்களது காவல் தெய்வத்திற்கு ஆனி, ஆடி மாதங்களில் படையல் முடித்து, கொடைவிழா நடத்தும் மக்கள், இம்மாதத்தில் தாங்கள் செய்யும் தொழிலுக்கு அங்கீகாரம் கிடைக்கும் என நம்புகிறார்கள். ஆடி மாதம் போய் ஆவணி வந்தால் ஆயிரம் நன்மைகள் தேடி வரும் என்பார்கள். ஆவணியில் அத்தனை நாட்களும் மங்கல நாட்களே என்பது ஆன்றோர் வாக்கு. பெருமைமிகு இந்த மாதத்தில் தான் கணநாதர், கண்ணபிரான் திருஅவதாரங்கள் நடைபெற்றன. ஆவணி மாதத்தில் என்னென்ன முக்கிய பண்டிகைகள் உள்ளன என்றும் ஆவணி மாதத்தின் சிறப்புகளைப் பற்றியும் பார்க்கலாம்.

ஆவணி மாத சிறப்புகள்: தமிழ் மாதங்களில் ஆவணி ஐந்தாம் மாதமாக வருகின்றது. கேரளத்தில் இதுவே முதல் மாதமாகவும் சிம்ம மாதமாகவும் கொள்ளப்படுகின்றது. சிரவண நட்சத்திரம் என்று வடமொழியில் அழைக்கப்படும் திருவோணத்தில் பௌர்ணமி நாள் வருவதால் இது சிரவண மாதம் என்றும் சிறப்பிக்கப்படுகிறது. 'மாதங்களுக்கு எல்லாம் அரசன்' என்று இதற்குப் பொருள். சிங்க மாதம், வேங்கை மாதம் என்ற பெயர்களும் ஆவணிக்கு உண்டு. ஆவணி மாதத்தின் சிறப்பு பற்றி அகத்தியர் குறிப்பிடுகையில், 'சிங்கத்திற்கு (ஆவணிக்கு) இணையான மாதமும் இல்லை; சிவபெருமானைவிட மேம்பட்ட இறைவனும் இல்லை' என்கிறார்.
ஆவணி ஞாயிறு சூரிய வழிபாடு: ஆவணி மூலம், ஆவணி ஞாயிறு உள்ளிட்ட பல விரத நாட்களும் இந்த மாதத்தில் வருகின்றன. மேலும் ஆவணி மாத செவ்வாய், வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளும் விரத முக்கியத்துவம் வாய்ந்த நாட்கள் என்கிறார்கள். புதிதாக திருமணமான பெண்கள் மாங்கல்ய பலம் பெற ஆவணி மாத செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் மங்கள கெளரி விரதம் அனுஷ்டிப்பார்கள். ஆவணி மாதம் சிவபெருமானை வழிபடுவதற்கு ஏற்ற மாதம் என்பதால் திங்களும் வியாழனும் சைவர்களுக்கு இன்றியமையாத நாட்கள் ஆகும். ஆவணி மாத ஞாயிற்றுக்கிழமை சூரிய வழிபாட்டுக்கு ஏற்ற நாள். அதேபோல் அன்றிலிருந்து சூரிய நமஸ்கார வழிபாட்டைத் தொடருவதும் நல்லது. இந்த மாதத்தில் புதுமனை புகுந்தால் அந்த வீட்டில் சிறப்பான வாழ்க்கை அமையும். இந்த மாதத்தில் திருமணம் செய்தால் வாழ்க்கை இன்பமாக அமையும் எனற நம்பிக்கையும் உள்ளது.
ஆவணி மூலம் திருவிழா: ஆனி மாதம் வரும் மூலம் நட்சத்திரத்தை, 'ஆனி மூலம் அரசாளும்' என்று சிறப்பித்துச் சொல்வார்கள். அதுபோன்று, ஆவணி மாதம் வரும் மூலமும் சிறப்பு பெற்றதுதான். மதுரை மீனாட்சி- சுந்தரேஸ்வரர் கோயிலில், ஆவணி மூலத் திருவிழா பெரிய அளவில் கொண்டாடப்படுகிறது. கருங்குருவிக்கு உபதேசம் செய்தது, நாரைக்கு முக்தி கொடுத்தது, தருமிக்கு பொற்கிழி அளித்தது, பிட்டுக்காக மண் சுமந்தது, நரிகளைப் பரிகளாக்கியது, வளையல் விற்ற லீலை என, மதுரை மண்ணில் சிவபெருமான் நிகழ்த்திய திருவிளையாடல்கள் இந்த விழாவில் இடம்பெறும். விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக, சொக்கநாதருக்குப் பட்டாபிஷேகம் செய்யப்படும். மாணிக்கவாசகருக்காக இறைவன் குதிரைகளைக் கொண்டு வந்து மதுரையம்பதியில் ஒப்படைத்த ஆவணி மூல விழாவும் இந்த மாதத்தில் சிறப்பு. இந்த ஆண்டு ஆவணி 9ஆம் தேதி ஆவணி மூலம் திருவிழா கொண்டாடப்படுகிறது.
திருவோணம் திருவிழா: கேரள மக்களால் கொண்டாடப்படும் உலகப் புகழ் பெற்ற திருவிழா ஓணம் பண்டிகை. ஆவணி மாதத்தில் வரும் திருவோண நட்சத்திரம் தான் மலையாள மக்களால் ஓணம் பண்டிகையாகக் கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு ஆவணி 12ஆம் தேதி திருவோணம் திருவிழா கொண்டாடப்படுகிறது. ஆவணி மாதத்தில் தான், இளையான் குடி மாறனார், குலச்சிறையார், திருநீலகண்டர், அதிபத்தர் ஆகிய நாயன்மார்களின் குருபூஜை விழாக்கள் கொண்டாடப்படுகின்றன. ஸ்ரீஹயக்ரீவ ஜெயந்தியும் கொண்டாடப்படுகிறது.
மகாபலி மன்னன்: அரசர்களில் சிறந்தவரான மகாபலி மன்னன், வாமன மூர்த்திக்கு மூன்றடி தானம் கொடுத்தது இந்த ஆவணி மாத சிரவண துவாதசி நாளில்தான். சிரவண தீபம் என்று போற்றப்படும் ஆவணி மாத திருவோண நட்சத்திரத்தில் ஏற்றப்படும் இந்த தீபம் வேண்டுதலை நிறைவேற்றக் கூடிய அற்புத வழிபாடு என்பர். இந்த நாளில் திருமலை திருப்பதியில் உற்சவரான மலையப்ப சுவாமி ஊஞ்சல் மண்டபத்தில் திருச்சேவை சாதிப்பார். அப்போது அங்கே ஆயிரத்தெட்டு திரிகளைக் கொண்ட நெய் விளக்கு ஏற்றப்பட்டு அந்த பகுதியே ஒளிவெள்ளத்தில் மிதக்கும். இதை சஹஸ்ர தீபாலங்கார சேவை என்பர்.
ஆவணி மாத பண்டிகை நாட்கள்: ஆவணி மாதத்தில் வரக்கூடிய முக்கிய விஷேசங்களைப் பார்த்தால் ஆவணி 1ஆம் தேதி விஷ்ணுபதி புண்ணியகாலம் ஆரம்பமாகிறது. ஆவணி 3 நாக சதுர்த்தி, ஆவணி 4 நாக பஞ்சமி கருட பஞ்சமி, ஆவணி 6 வாஸ்துநாள்,7 ஆவணி முழக்கம், 8 வரலட்சுமி விரதம், ஆவணி 9 ஆவணி மூலம், ஆவணி 10 புத்திரத ஏகாதசி, ஆவணி 11 சோம பிரதோஷம், ஆவணி 12 திருவோணம், ஆவணி 13 பௌர்ணமி ஆவணி அவிட்டம், 14 கல்கி ஜெயந்தி, செவ்வாய் ஜெயந்தி. ஆவணி 16ஆம் தேதி மகா சங்கடஹர சதுர்த்தி, ஆவணி 20 கோகுலாஷ்டமி விரதம், 21 சனி ஜெயந்தி, 22 சட்டமுனி சித்தர் ஜெயந்தி, 23 காமிகா ஏகாதசி, 28 சர்வ அமாவாசை. ஆவணி 31 கல்கி ஜெயந்தி, செவ்வாய் ஜெயந்தி.
-
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ் -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
பெங்களூர் மாணவியிடம் கிட்ட நெருங்கிய ஆசிரியர்! அந்த பயங்கர காட்சி.. உடனே செருப்பை கழட்டி! என்னாச்சு -
எடப்பாடி பழனிசாமி வைத்த பொறி.. சிக்கிய அண்ணாமலை.. சல்லி சல்லியாக உடைந்த பர்னிச்சர் -
செங்கோட்டையனுக்கு பதில் கோபியில் பிரபு! 127 வேட்பாளர்களை அறிவித்தார் எடப்பாடி பழனிசாமி












Click it and Unblock the Notifications