வீட்டில் சிவலிங்கங்களுக்கு அன்னாபிஷேகம் செய்ய உகந்த நேரம் எது? ஜென்மத்திற்கும் உணவு பஞ்சம் வராது!
சென்னை: ஐப்பசி மாதம் பவுர்ணமியையொட்டி இன்று அன்னாபிஷேகம் நடைபெறும் நிலையில் உங்கள் வீட்டில் உள்ள சிலைகளுக்கு அன்னத்தால் அபிஷேகம் செய்ய நல்ல நேரம் என்ன என்பதை தெரிந்து கொள்ளலாம். ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே் நடக்கும் முக்கிய நிகழ்வு இது.
இந்த நன்னாளில் சிவலிங்கத்திற்கு சார்த்தப்படும் ஒவ்வொரு அன்னமும் ஒவ்வொரு சிவலிங்கங்களாக பாவிக்கப்படுகின்றன. அன்னாபிஷேகத்தை தரிசித்தால் அந்த பக்தரின் தலைமுறைக்கே உணவு தட்டுப்பாடு வராது என்கிறார்கள்.

ஐப்பசி மாத பவுர்ணமியும் அஸ்வினி நட்சத்திரமும் இணைந்து வரும் நாளில்தான் இந்த அன்னாபிஷேகம் செய்யப்படுகிறது.இன்று கோயிலுக்கு சென்று சிவனுக்கு சாத்தப்படும் அன்னாபிஷேகத்தை நேரில் காண முடியாதவர்கள், வீடுகளிலேயே செய்யலாம்.
வீட்டில் சிவலிங்கம் இருந்தால் பால், தயிர், பன்னீர், விபூதி, சந்தனம், விபூதி, இளநீர் உள்ளிட்ட பொருட்களால் அபிஷேகம் செய்துவிட்டு அன்னத்தால் அபிஷேகம் செய்யப்பட வேண்டும். இன்றைய தினம் பவுர்ணமியன்று காலை 6 மணி முதல் 10.20 மணி வரையும், பகல் நேரத்தில் 12.10 மணி முதல் மதியம் 1.10 மணி வரையும் மாலை வேளைகளில் 4.35 மணி முதல் 6 மணி வரையும் வீட்டு சிவலிங்கங்களுக்கு அன்னாபிஷேகம் செய்யலாம்.
வீட்டில் இருக்கும் சிவலிங்கத்தை எடுத்து ஒரு தாம்பாள தட்டிலோ அல்லது வாழை இலையிலோ வைக்க வேண்டும். அதற்கு மேற்கண்ட பொருட்களாக அபிஷேகம் செய்துவிட வேண்டும். பிறகு பச்சரிசியால் செய்யப்பட்ட அன்னத்தை ஆறவைத்து கைகளால் லேசாக பிசைந்து லிங்கத்தின் மேலிருந்து கீழாக சாத்த வேண்டும்.
இந்த அன்னத்துடன் காய்கறிகள், பழங்களையும் அலங்காரம் செய்யலாம். இந்த நாளில் வீட்டை சுத்தமாக பெருக்கி துடைத்து வீடு முழுவதும் சாம்பிராணி புகை போட வேண்டும். சிவனுக்கு அன்னாபிஷேகம் செய்யும் போது வேறு எதையும் நினைக்காமல் அந்த சிவபெருமானை நினைத்து துதி பாட வேண்டும்.
சிவனுக்கு ஏராளமான ஸ்தோத்திரங்கள் உள்ளன. இவற்றை எல்லாம் சொல்ல முடியாவிட்டாலும் அவருக்கு மிகவும் பிரசித்தியான மந்திரமான ஓம் நமசிவாய என சொல்லிக் கொண்டே இருக்கலாம். இல்லாவிட்டால் 108 முறை சொல்லலாம்.தனது அன்னத்தில் சிவபெருமான் வந்து தங்கள் குடும்பத்திற்கு அருள் செய்ய வேண்டும் என வேண்டிக் கொள்ளுங்கள்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications