அட்சய திருதியை 2023: பசிப்பிணி நீக்கிய காசி அன்னபூரணி..தலைமுறைக்கும் புண்ணியம் தரும் அன்னதானம்
சென்னை: அட்சய திருதியை நாளில் எவர் ஒருவர் நல்ல காரியங்களை தொடங்குகிறார்களோ, அது இனிதே வளரும் என்று பகவான் மகாவிஷ்ணு ஆசி வழங்கியுள்ளார். நம்முடைய தலைமுறை தலைமுறையாக புண்ணியம் மேலும் சேர நிறைய தானம் செய்யுங்கள். அட்சய திருதியை நாளில் அன்னதானம் செய்தால் நம்முடைய வீட்டில் செல்வம் அள்ள அள்ள குறையாது வளரும்.
சித்திரை மாதம் அமாவாசைக்கு பிறகு வரும் வளர்பிறை திருதியை நாளை நாம் அட்சய திருதியை தினமாகக் கொண்டாடுகின்றோம். அட்சய திருதியை நாளில் செல்வம் பெருக நாம் விரும்பும் பொருட்களை வாங்கலாம். தலைமுறைக்கும் புண்ணியம் மேலும் சேர நிறைய தானம் செய்யலாம். அட்சய திருதியை எப்படி வந்தது என்பது பற்றிய புராண கதை உள்ளது அதைப்பற்றி தெரிந்து கொள்வோம்.

ஒரு சமயம் காசியில் நித்ய வாசம் செய்யும் அன்னபூர்னேஷ்வரி தேவி, இரத்த பிட்சாடணராய் வந்த ஈசனுக்கு உணவளித்து இடர் தீர்த்ததால் தாம் தான் அன்னத்திற்கதிபதி என்று, சிறு கர்வம் கொண்டாள். அந்த கருத்தை போக்குவதற்கு, சிவபெருமான் ஒரு சிவ யோகியாக தோற்றம் கொண்டு அன்னபூர்னேஷ்வரி மாளிகைக்கு வந்து, "தாயே பசி" என்று வேண்டி நின்றார்.
அதைக்கேட்ட அன்னபூரணி தேவி, இலையிட்டு தன்னால் இயன்ற வஸ்துக்கள் அனைத்தையும் பரிமாறினார். சிவ யோகியோ, இன்னும் இன்னும் என்று அனைத்தையும் சாப்பிட்டுக்கொண்டே இருந்தார். அன்னபூரணி கொடுத்த உணவுகள் அனைத்தும் தீர்ந்து போனது.
அன்னபூரணி தேவிக்கு, என்ன செய்வதென்று புரியவில்லை. உடனே, காசியில் பிந்து மாதவன் என்ற திருக்கோலத்தில் சேவை சாதிகின்ற, தன்னுடைய அண்ணனாகிய மஹா விஷ்ணுவிடம் பிரார்த்தனை செய்து அழைத்தார். மகாவிஷ்ணுவாகிய திருமாலும் ஒரு அந்தணர் கோலத்தில் வந்தார்.
உணவு தயார் செய்யும் இடத்திற்கு சென்றால், அங்கு சமைத்த பாத்திரங்கள் அனைத்தும் சுத்தம் செய்து வைக்கபட்டிருந்தது. அன்னபூரணி நடந்த விஷயங்களை கூற, அதை கேட்ட மஹா விஷ்ணு, சுத்தம் செய்து வைக்கபட்டிருந்த பாத்திரத்தின் ஒரு ஓரத்தில் இருந்த பருக்கை அன்னத்தை, அக்ஷயம் என்று சொல்லிக்கொண்டு அவர்தம் தன் திருவாயால் உட்கொண்டார். உடனடியாக அந்த பாத்திரத்தில் அன்ன வகைகள் அனைத்தும் தோன்றின.
அன்னபூரணி தேவி அந்த சிவ யோகிக்கு அருகில் இலையிட்டு மகாவிஷ்ணுவை அமர்த்தினார். மகாவிஷ்ணுவோ, உட்கார்ந்த சிறிது நேரத்தில் திருப்தி என்று கூறி எழுந்து விட்டார். தமக்கு அருகில் உண்பவர் எழுந்து விட்டால் தாமும் எழ வேண்டும் என்ற முறையை பின்பற்றியாக வேண்டிய கட்டாயத்தினால், சிவ யோகியும் தமக்கும் திருப்தி என்று எழுந்து விட்டார். இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து சிரித்துக் கொண்டனர்
அப்போது உண்மையை உணர்ந்த அன்னபூரணி தேவி அந்த சிவ யோகியை வணங்க, சிவ யோகி சிவனாக மாறி காட்சியளித்தார். உமக்கு ஏற்பட்ட கர்வம் கொண்ட எண்ணத்தை மாற்றுவதற்கே நாங்கள் இங்கு வந்தோம். எங்களது கட்டளையின் பேரிலேயே நீ அன்ன பூரணியாய் இங்கு உன் கடமைகளை செய்கிறாய் என்று கூறினார்.
உடனே, மகா விஷ்ணு,"இன்றைய தினம் பாத்திரத்தில் இருந்த உணவு தேவைக்காக எங்ஙனம் வளர்ந்ததோ அது போல எவர் ஒருவர் நல்ல காரியங்களை தொடங்குகிறார்களோ, அது இனிதே வளரும்", என்று கூறி ஆசிர்வாதம் செய்தார்.
அன்று முதல் சித்திரை மாதம், சுக்ல பட்சம் திரிதியை நாம் அட்சய திருதியை திருநாளாக கொண்டாடுகின்றோம். எனவே அன்றைய தினம் விரும்பும் பொருட்கள் மேலும் சேர பொருட்கள் வாங்குங்கள். நம்முடைய தலைமுறை தலைமுறையாக புண்ணியம் மேலும் சேர நிறைய தானம் செய்யுங்கள். செல்வம் அள்ள அள்ள குறையாது வளரும்.
-
Gold Price Today: தங்கம் விலை 2-வது நாளாக இன்றும் உயர்வு.. நகை பிரியர்களுக்கு மீண்டும் ஷாக்! ஒரு சவரன் ரேட் என்ன? -
படக்குனு 10 கிராம் வாங்கி போடுங்க.. சட்டென மாறிய தங்க சந்தை! 6 மாதத்தில் இல்லாத சரிவு! சரியான நேரமா? -
Gold Price Today: தடாலடியாக சரிந்த தங்கம் விலை.. 8 நாளில் 8,000 சரிவு.. குஷியில் நகை பிரியர்கள்! இன்றைய ரேட் என்ன? -
தாமிரபரணி ஆற்றில் ஜாலியோ ஜாலி.. ட்ரோன் கேமராவில் சிக்கிய நவத்திருப்பதி யானைகள் -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு!












Click it and Unblock the Notifications