Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அட்சய திருதியை..குல தெய்வத்திற்கு நீங்கள் வைக்கும் வேண்டுதல்..சகல ஐஸ்வர்யத்தை அளிக்கும்

Subscribe to Oneindia Tamil

சென்னை: அட்சய திருதியை அன்று நாம் எந்த ஒரு காரியத்தை செய்தாலும் அது பலமடங்காக பெருகும் என்பது நம்பிக்கை. ஐஸ்வர்யம் பெருகவும் மகிழ்ச்சியும் மனநிம்மதியும் கிடைக்கவும் அட்சய திருதியை நாளில் குடும்பத்துடன் குல தெய்வத்தை வணங்கலாம். குலதெய்வத்தின் அருள் கிடைப்பதோடு வீட்டில் மகிழ்ச்சியும் மன நிம்மதியும் அதிகரிக்கும்.

பவுர்ணமி அல்லது அமாவாசைக்குப் பிறகு வரும் மூன்றாவது திதி திருதியை. சித்திரை மாதத்தில் அமாவாசைக்கு பின் வரும் வளர்பிறை திருதியையே அட்சயதிருதியை. சயம் என்றால் தேய்தல் என்று பொருள். அட்சயம் என்றால் தேயாது, குறையாது, வளர்தல் என்று பொருள். மகாகவி காளிதாசர் அருளிய உத்திர காலாமிருதம் என்னும் ஜோதிட நூல், திதி நாட்களில் மிகவும் விசேஷமானது திருதியை என்று கூறுகிறது. அட்சய திருதியை இந்த ஆண்டு வரும் 22ஆம் தேதி சனிக்கிழமை கொண்டாடப்படுகிறது.

Akshaya Tritiya 2023: Kuladeiva Prayer for Peace and happiness in your house

அட்சய என்றால் வளர்க என்று பொருள்படும். இந்த நாளில் நாம் வாங்கும் பொருட்கள் பன் மடங்கு பெருகும் என்பது ஐதீகம். நம்மால் தங்கம் வாங்க முடியாவிட்டாலும் நம் வீட்டிற்குத் தேவையான மளிகை சாமான்கள், கல் உப்பு, சர்க்கரை, மஞ்சள் என பல பொருட்களை வாங்கலாம்.

அட்சய திருதியை நாளில் அதிகாலையிலேயே எழுந்து குளித்து விட்டு, பூஜை அறையில் கோலமிடுங்கள். அதன்மேல் ஒரு மனைப் பலகையைப் போட்டு மேலே வாழையிலை ஒன்றினை இடுங்கள். இலையின் நடுவே கொஞ்சம் பச்சரியைப் பரப்பி அதன்மேல் ஒரு செம்பில் நீர் நிரப்பி மாவிலை, மஞ்சள் தடவிய தேங்காய் வைத்து கலசமாக்குங்கள். கலசத்தின் அருகே ஒரு படி, ஆழாக்கு அல்லது ஒரு டம்ளரில் நெல் நிறைத்து வையுங்கள். கலசத்திற்குப் பொட்டு, பூ வையுங்கள்.

பூஜை அறையில் லட்சுமி நாராயணர் படம் இருந்தால் அதனையும் வைத்து அலங்கரியுங்கள். பின்னர் குத்துவிளக்கினை ஏற்றி வையுங்கள். மஞ்சள் பிள்ளையார் பிடித்து வாழையிலையில் வலப்பக்கமாக வையுங்கள். நீங்கள் புதிதாக வாங்கிய பொருளை கலசத்தின் முன்பாக வையுங்கள். கல் உப்பை வாங்கி வைத்தாலே போதும். அஷ்டலட்சுமி அருளும் உங்கள் வீடு தேடிவந்துவிடும்.

முதலில் விநாயகரை வேண்டிக் கொள்ளுங்கள். பின்னர் கலசத்தில் மகாலட்சுமியை எழுந்தருளும்படி பிரார்த்தியுங்கள். உங்களுக்குத் தெரிந்த விஷ்ணுலட்சுமி, சிவன்பார்வதி, குபேரன், துதிகளைச் சொல்லுங்கள். அல்லது கேளுங்கள். அட்சய திருதியை நாளில் குசேலரின் கதையைப் படிப்பது, கேட்பதும் சொல்வதும் சிறந்தது.

பூஜை அறையில் அவரவர் வழக்கப்படி தூப தீப ஆராதனைகள் செய்யுங்கள். இந்த பூஜையில் பாயாசம் அல்லது சர்க்கரை கலந்த பால் நைவேத்தியம் செய்வதும் சிறப்பானது. அன்றைய தினம் மாலையில் சிவாலயம், பெருமாள் கோயில் என்று உங்களால் இயன்ற தலத்திற்குச் சென்று தரிசியுங்கள். அதன் பின்னர் மீண்டும் தூப தீப ஆராதனையை கலசத்துக்குச் செய்துவிட்டு, கலசத்தினை வடக்குப் பக்கமாக நகர்த்தி வையுங்கள். கலசத்தில் பயன்படுத்திய அரிசி, கலசத் தேங்காய், மற்ற பொருட்களை மறுநாள் வீட்டு உபயோகத்திற்கு பயன்படுத்திக் கொள்ளலாம்.

அட்சய திதி தினத்தன்று யாருக்கும் பணம் கடனாக கொடுக்க வேண்டாம், நீங்களும் யாரிடம் இருந்தும் பணம் கடன் வாங்க வேண்டாம். தானமாக கொடுங்கள். உங்களுக்கு புண்ணியம் அதிகரிக்கும். வீட்டில் சண்டை போடாதீர்கள். கூடுமானவரை நல்ல வார்த்தைகளையும் நேர்மறை எண்ணங்களை அதிகரிக்கும் வார்த்தைகளையும் பேசுங்கள். நன்மைகள் அதிகரிக்கும்.

Akshaya Tritiya 2023: Kuladeiva Prayer for Peace and happiness in your house

இதே போல அட்சயதிருதியை நாளில் குலதெய்வத்தை வணங்கி வேண்டுதல் வைத்து சின்ன பரிகாரம் செய்யலாம். இதன் மூலம் சகல ஐஸ்வர்யங்களும் பெருகும் என்பது நம்பிக்கை. சிகப்பு நிற துணியை எடுத்து அதில் 11 ஏலக்காய், சோம்பு 11, கிராம்பு 11 சிறிதளவு பச்சை கற்பூரம் இவை அனைத்தையும் வைத்து, குலதெய்வத்தை வேண்டிக் கொண்டு, மொத்தமாக ஒரு பச்சைக் கலர் நூலில் கட்டிக் கொள்ளுங்கள். அதன் பின்பு அதை உங்கள் வீட்டு பூஜை அறையில் குலதெய்வ படத்தின் முன்பு வைத்து மனதார, குலதெய்வத்தை நினைத்து பிரம்ம முகூர்த்த நேரத்திலேயே உங்கள் வீட்டு பீரோவில் வைத்துவிடுங்கள்.

இந்த சின்ன பரிகாரத்தை உங்கள் வீட்டில் செய்வதன் மூலம், பெரிய பலனடையலாம். பிரம்ம முகூர்த்த வேளையில் நீங்கள் கட்டும் இந்த முடிச்சின் மூலம் மகாலட்சுமியின் ஆசீர்வாதமும், குலதெய்வத்தின் அனுகிரகமும் கட்டாயம் கிடைக்கும். குறிப்பாக அட்சய திருதியை நாளில் இந்த பரிகாரத்தை நீங்கள் செய்வதன் மூலம் உங்களது குடும்பம் 16 வகையான செல்வங்களையும் பெற்று, சிறப்படையும் என்பது நிச்சயம். நம்பிக்கையுடன் செய்யுங்கள் சகல ஐஸ்வர்யங்களும் உங்களை நாடி வரும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+