தப்பித் தவறி இந்த வார்த்தை சொல்லிடாதீங்க.. வீட்டில் செல்வம், மகிழ்ச்சி தழைக்க.. ஆன்மீகம் சொல்வதென்ன
சென்னை: மந்திரத்துக்கு எப்படி மகிமை உள்ளதோ, அதுபோல நாம் உதிர்க்கும் வார்த்தைகளும் சிலசமயம் சத்திய வாக்காக மாறிவிடுமாம்.. நாம் பேசும் வார்த்தைகளை வைத்துகூட வீட்டின் நிலைமை மாறலாம்.. எனவே, பேசும் பேச்சுடன், சில முக்கியமான செயல்களையும் வீட்டில் செய்துவரும்போது, அது குடும்பத்தில் இணக்கமான சூழலையும், செல்வ வளத்தையும் பெற்றுத் தரும் என்று நம்பப்படுகிறது. அந்தவகையில், ஒருசிலவற்றை பற்றி இங்கு பார்ப்போம்.
வீட்டில் தெய்வ கடாட்சம் பெருக வேண்டுமானால், நாட்டு மருந்து கடைகளில் சிகப்பு நிற சந்தன சக்கையை வாங்கி, ஒரு வெள்ளை நிற துணியில் வைத்து, அதனுடன் 6 ஏலக்காய்களையும் பொடித்து போட்டு, ஒரு முடிச்சு போல கட்டி கொண்டு, வீட்டின் நிலை வாசலில் உட்புறமாக கட்டி தொங்கவிட வேண்டும். இதனை மாதம் ஒருமுறை மாற்றினால் மாற்றினால் போதும்..

அர்ச்சனை பொருட்கள்
அதேபோல, வீட்டு பூஜையில் கற்பூர தீபம் தானே குளிர்ந்து விடவேண்டுமே தவிர நாமாக அணைக்கக் கூடாது. அதேபோல கோயிலில் அர்ச்சனை பொருட்களை இடது கையால் எடுத்து செல்லக்கூடாது...
எப்போதுமே நல்ல விஷயத்தை பற்றி யோசிக்க வேண்டுமானால், கடவுள் சன்னிதி போன்ற தெய்வீக அலை உள்ள இடத்தில் யோசிப்பது சிறந்த பலனை பெற்றுத்தரும்.
காலையும் மாலையும் விளக்கேற்றி தினமும் பூஜை செய்தாலும்கூட, பேச்சுக்களில் அமங்கல சொற்கள் இல்லாமல் பேச வேண்டும்.. ஏனென்றால், நம்மை சுற்றிலும் அஷ்ட தேவதைகளும், முனிவர்களும், சித்தர்களும், முன்னோர்களும் இருக்கிறார்களாம்.. இவர்கள் அனைவரும் நம்மை ஆசீர்வாதம் செய்து கொண்டும் இருப்பார்களாம்..
ததாஸ்து ததாஸ்து
அப்படி அவர்கள் நம்மை ஆசீர்வதிக்கும்போது, 'ததாஸ்து.. ததாஸ்து' என்று சொல்லிக் கொண்டே இருப்பார்களாம்... நாம் எந்த வார்த்தை சொன்னாலும், 'ததாஸ்து' என்று என்று சொல்லிவிடுவார்கள். எனவே கெட்ட வார்த்தை தவறியும் வந்துவிடாமல் கவனமுடன் பேச வேண்டும் என்கின்றன சாஸ்திரங்கள்..
.
பூஜையறையில் விளக்கை அணைக்க வேண்டும் என்ற அமங்கல சொல்ல கூடாதாம்.. விளக்கை அமர்த்துதல் அல்லது மலையேற்றுதல் என்றே சொல்ல வேண்டும்.. எப்போதுமே நல்ல காரியங்கள் பற்றிப் பேசும்போது, எள் அல்லது எண்ணெய் பற்றிப் பேசக் கூடாது... அப்படி பேசினால் செய்யக்கூடிய காரியத்தில் தடங்கல் ஏற்படுமாம்.
நல்ல வார்த்தைகள்
வீட்டில் பேசும்போது, இல்லை என்ற பெயரை பெரும்பாலும் உபயோகிக்க கூடாது என்பார்கள்.. குறிப்பாக உணவு பொருட்களில் இல்லை என்பதை பயன்படுத்தாமல், அந்த குறிப்பிட்ட மளிகை பொருள் வாங்க வேண்டும் என்று சொல்ல வேண்டுமாம்.. அதிலும், உப்பு, ஊறுகாய், அரிசி குறைவின்றி நிறைந்திருக்க வேண்டும்.
எப்போது பார்த்தாலும் கஷ்டங்களை சொல்லி, அழுது கொண்டேயிருக்கக்கூடாது.. அதிலும் பெண்கள் சண்டை போடுவதை தவிர்க்க வேண்டும்.. வாக்குவாதம் செய்வதை தவிர்க்க வேண்டும்.. காரணம், அமங்கல சொற்களை அறியாமல் வந்துவிடுவதும், குடும்பத்துக்கு ஆகாது என்பார்கள்.
பிறரை பெண்கள் மரியாதையுடன் நடத்துவதுபோல, பெண்களையும் வீட்டிலுள்ளவர்கள் கவுரவம் குறையாமல் நடத்த வேண்டும்.
மனநிறைவு, மகிழ்ச்சி, செழிப்பு
சிரித்த முகத்தோடு கலகலப்பாக மகிழ்ச்சியோடு குடும்ப உறுப்பினர்களுடன் அனைவரும் பேசிக் கொள்ள வேண்டும். எந்த வீட்டில் மகிழ்ச்சி நிறைந்திருக்கிறதோ அந்த வீட்டில், மன நிறைவோடு மகாலட்சுமி இருப்பார்..
வீடு என்றில்லை, நாம் வேலை பார்க்கும் இடத்திலும், தொழில் செய்யும் இடத்திலும் நல்ல வார்த்தைகளை பயன்படுத்துவதே சிறந்தது.. எந்த வார்த்தைகளை உதிர்க்கிறோமோ, அதற்கான பலன்கள் கிடைத்துவிடும் என்று ஞானநூல்கள் கூறுகின்றன.. நல்லதையே நினைத்து, நல்லதையே பேசுவது, நல்ல பலனையே பெற்றுத்தரும்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications