பித்தளையின் பலபல பயன்கள்.. இந்த 2 பொருள் இருந்தாலே போதும், தங்கம் போல பூஜை சாமான்கள் ஜொலிஜொலிக்கும்

Subscribe to Oneindia Tamil

சென்னை: பூஜை பொருட்கள் பித்தளை பாத்திரங்களாக பயன்படுத்துவது ஏன் தெரியுமா? பித்தனை பாத்திரங்களை உபயோகப்படுத்துவதால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன? பித்தளை பாத்திரங்களை பளிச்சென் சுத்தம் செய்வது எப்படி? சுருக்கமாக பார்ப்போம்.

பூஜை செய்வதற்கு வெள்ளி பாத்திரங்களை பயன்படுத்த கூடாது என்கிறது சாஸ்திரம்... அதேபோல, பூஜைகளில் மண் பானையும் பயன்படுத்தக்கூடாதாம்.. இரும்பு பாத்திரங்களையும் பயன்படுத்தக்கூடாதாம். காரணம், அரிக்கும் தன்மையை கொண்டது இரும்பு.. அதுவும் இல்லாமல் அது தூய்மையான உலோகம் கிடையாது. அதனால்தான் பூஜைகளில் இரும்பு பொருட்களை பயன்படுத்தக்கூடாது என்கிறார்கள்.

spirituality

சனி பகவான்: வேண்டுமானால், சனி பகவானை வழிபடும்போது மட்டும், இரும்பு பாத்திரங்களை பயன்படுத்தலாம். காரணம், இரும்பு சனி கடவுளுக்குரியதாகும்.. அதேபோல, எஃகு, அலுமினியம் போன்ற உலோகங்களையும் வழிபாட்டில் பயன்படுத்தக் கூடாது.. அந்தவகையில், பித்தளை, வெண்கலம் இந்த உலோகங்களை வழிபாட்டிற்கு பயன்படுத்தலாம்.

இதற்கு காரணம், பித்தளை ஒரு "சாத்விக்" உலோகமாக கருதப்படுகிறது.. தூய்மையான உலோகமாகும்.. பித்தளை பூஜை பாத்திரங்களை பயன்படுத்துவது நேர்மறை ஆற்றலை ஈர்க்கக்கூடியது..

என்ன காரணம்: இந்த பித்தளைகளை பூஜைகளில் பயன்படுத்தும்போது, இணக்கமான சூழலை உருவாக்குவதாகவும் நம்பப்படுகிறது... இது எல்லாவற்றையும்விட முக்கியமாக, கடவுளுக்கு மிகவும் பிடித்தமான உலோகமாக பித்தளை கருதப்படுகிறது. பித்தளையால் பூஜை பொருட்களை பார்க்கும்போது, பூஜையறையே நிறைந்ததுபோல பிரம்மாண்டமாக இருக்கும்.

அதனால்தான் பெண்களுக்கு சீர்வரிசை என்றாலே, அதில் முதன்மையானதாக பித்தளை பாத்திரங்கள் இன்றுவரை உள்ளது.. மேலும், பித்தளை பாத்திரத்தில் தண்ணீர் குடிப்பது உடலுக்கு மிகவும் நல்லது.. பித்தளை பாத்திரத்தில் தாமிரம் கலப்பதன் மூலம், இதில் தண்ணீர் ஊற்ற குடிக்கும்போது, நம்முடைய உடல் செயல்பாட்டிற்கு ஊக்கம் தருகிறது. உடல் சூட்டையும் இந்த பித்தளை பாத்திரத் தண்ணீர் முற்றிலுமாக தணிக்க செய்கிறது..

உடலுக்கு நல்லது: செரிமானம் மற்றும் நோயெதிர்ப்பு அமைப்பு, அழற்சி எதிர்ப்பு பண்புகள், எலும்புகளை வலுப்படுத்துதல் போன்றவற்றின் மிகச்சிறந்த செயல்பாட்டிற்கு உதவுவதாக கண்டறியப்பட்டுள்ளது.. அதனால்தான், நம்முடைய முன்னோர்கள், இந்த பித்தளை பாத்திரத்திரங்களுக்கு அந்த அளவுக்கு முக்கியத்துவம் தந்து வந்திருக்கிறார்கள்.. இந்த பித்தளை பொருட்களை, பளிச்சென சுத்தம் செய்வது என்பது சவாலான விஷயமே.

வழக்கமாக, புளி உள்ளிட்ட பொருட்களை பயன்படுத்தி சுத்தம் செய்வார்கள்.. அதேபோல, எலுமிச்சம் சாறு, பேக்கிங் சோடா இந்த இரண்டையும் ஒன்றாக கலந்து பித்தளை பாத்திரங்களை தேய்த்து கழுவலாம். அல்லது பீதாம்பரியுடன், ஜெல் அல்லது டூத் பேஸ்டை கலந்தும் பித்தளையை தேய்க்கலாம்.

எலுமிச்சை, டிஷ்வாஸ், மற்றும் உப்பு இவைகளை கலந்து வைத்துக் கொண்டும் தேய்க்கலாம். இந்த கலவையால் பித்தளை பொருட்களை தேய்த்து 10 நிமிடங்கள் அப்படியே வைத்துவிட்டு, பிறகு வெதுவெதுப்பான தண்ணீரில் சுத்தம் செய்ய வேண்டும்.

மினுமினுப்பு: அதேபோல, கடலை மாவுடன் வினிகரை கலந்தும் தேய்க்கலாம். கெட்ச் அப்களை கொண்டும் பித்தளை பாத்திரங்களை சுத்தம் செய்யலாம். பித்தளை பாத்திரங்களை இப்படி ஏதாவது ஒன்றின்மூலம் கழுவியபிறகு, சுத்தமான துணிகளை கொண்டு துடைத்துவிட வேண்டும். பிறகு வெயிலில் காயவைத்து எடுத்தாலே, பித்தளையின் பளபளப்பு மேலும் கூடுதலாகும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+