இதெல்லாம் உங்க வீட்டில் நடக்குதா? இந்த அறிகுறி தெரிந்தாலே கெட்டது நடக்க போகுதுனு அர்த்தமாம்.. உஷார்
சென்னை: ஒருசில அறிகுறிகளை வைத்து, நமக்கு வரும் தீயவை, மற்றும் நல்லவைகளை அறிந்து கொள்ளலாம் என்கிறார்கள்.. இதுகுறித்தும் ஆன்மீகத்தில் தெளிவாக சொல்லப்பட்டுள்ளது.
கண் திருஷ்டி மட்டும் ஒருவருக்கு வந்துவிடக்கூடாது என்பார்கள்.. மிகவும் மோசமான இந்த கண் திருஷ்டியை உரிய பரிகாரத்தை கொண்டு விரட்டிவிட வேண்டும்.

குடும்ப உறுப்பினர்கள்: குடும்ப உறுப்பினருக்கு திடீரென உடல்நிலை சரியில்லாமல் போய்விடும்.. அல்லது வேலையில் பிரச்சனைகள், பண நெருக்கடிகள், மன அழுத்தம், தீராத கடன் என ஒவ்வொரு கஷ்டமாக வந்து கொண்டேயிருக்கும். இப்படியெல்லாம் தொடர்ந்து நடப்பது குடும்பத்துக்கு கெட்ட அறிகுறிகளாக கருதப்படுகின்றன.
அதேபோல, வீட்டை சுற்றி அடிக்கடி நாய்கள் அழுவதை கேட்கக்கூடாதாம்.. அப்படி நாய்கள் அழுவதை கேட்டால் இதனாலும் குடும்பத்தில் ஏதோ கெட்டது நடக்க போகிறது என்று அர்த்தம்..
பூஞ்சைகள்: வீட்டில் பூஞ்சைகள் காணப்பட்டால், விரைவில் நீங்கள் கஷ்டப்பட போகிறீர்கள் என்று அர்த்தமாம்... பூஞ்சைகளால் எதிர்மறை சக்தியும் அதிகரித்துவிடுமாம். எனவே பூஞ்சைகளை கண்டால், அதை உடனே அகற்றி வீட்டை சுத்தம் செய்வதுவிட வேண்டும். வீட்டை சுற்றி வெளவ்வால் பறக்கக்கூடாது.. ஏதோ பெரிய பிரச்சனை விரைவில் வரப்போகிறது என்று அர்த்தமாம்..
வீட்டிலுள்ள கண்ணாடி பொருட்கள் தொடர்ந்து உடைந்து கொண்டே இருக்கக்கூடாது.. அப்படி உடைந்தால், மிகப்பெரிய நெருக்கடிக்கு நீங்கள் ஆளாக போகிறீர்கள் என்று அர்த்தம்.. கண்ணாடி உடைவது உறவுகளுக்குள் விரிசல் வருவதன் அறிகுறியாக பார்க்கப்படுகிறது. அப்படியே கண்ணாடி உடைந்தாலும், அந்த உடைந்த கண்ணாடியை உடனே அப்புறப்படுத்திவிட வேண்டும்.
வீண் செலவு: அதேபோல, குழாயில் தண்ணீர் சிந்தக்கூடாது.. தண்ணீரை போல, உங்களிடமுள்ள பணமும் வீணாக செலவாகுமாம்.. எனவே, குழாய் ரிப்பேர் என்றாலும் அதை உடனே செய்ய வேண்டும்.
அதிகாலை 3 மணிக்கு அடிக்கடி முழிப்பு வந்தால், எதிர்மறை ஆற்றலால் நீங்கள் சூழப்பட்டுள்ளீர்கள் என்று அர்த்தமாம்.. அதனால், அப்படியொரு விழிப்பு வந்துவிட்டால், உடனே தெய்வத்தை மனதார வணங்கி விட்டு தூங்க வேண்டும். அதேபோல, தங்க நகைகளும், பணமும், வீட்டில் தொடர்ந்து தொலைந்து போவது, பொருளாதாரம் சிக்கலை உணர்த்தும் அறிகுறியாகவே பார்ரக்கப்படுகிறது..
பணப்பிரச்சனை: வீட்டிலுள்ள துளசி செடி, துளசி இலைகள் வாடிப்போய் விட்டால், நேரம் சரியில்லை, பணக்கஷ்டம் வரப்போகிறது என்று அர்த்தமாம்.. அதேபோல, மணி பிளான்ட்டையும் காய விடக்கூடாது.. அப்படி காய்ந்துவிட்டால், வீட்டில் பண பிரச்சனை வரப்போகிறது என்று அர்த்தமாம்.












Click it and Unblock the Notifications