தினமும் சாமி கும்பிடுறீங்களா? 10 விஷயங்களை மறக்காமல் மனசுல வச்சுக்கோங்க!
சென்னை: தினந்தோறும் சாமி கும்பிடுறீங்களா? அப்படியென்றால் இந்த 10 விஷயங்களை மறக்காமல் மனசுல நிறுத்திக்கோங்க. அவை என்ன தெரியுமா? கோயிலுக்கு சென்றாலும் சரி, வீட்டில் பூஜைகள் செய்தாலும் சரி எதுவாக இருந்தாலும் முறைப்படிதான் செய்ய வேண்டும்.
இதுகுறித்து குவோராவில் ரத்தினம் வடிவேல் சேகர் என்பவர் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:

தினந்தோறும் சாமி கும்பிடுறீங்களா.. இந்த 10 விஷயத்தை மறக்காம மனசுல வெச்சுக்கோங்க...
கோயிலுக்குச் சென்று இறைவனை வழிபடுகிறோம். வீட்டிலும் பூஜைகள் செய்து வழிபடுகிறோம். ஆனால் இவை எல்லாவற்றையும் முறையாகத் தான் செய்கிறோமா? சில விதிமுறைகள் இருக்கின்றன. உங்களுக்கு தெரியாத சில ஆன்மிக குறிப்புகளை சொல்கிறோம்.
1. காயத்ரி மந்திரத்தை பயணத்தின்போது, சொல்லக் கூடாது. சுத்தமான இடத்தில் தான் காயத்ரி மந்திரத்தை ஜெபிக்க வேண்டும்.
2. கற்பூரம் ஏற்றி கடவுளுக்கு காட்டும் பொழுது, இறைவனின் காலிற்கு நான்கு தடவை சுற்றிக் காண்பிக்க வேண்டும். தொப்புளுக்கு இரண்டு தடவை சுற்றிக் காண்பிக்க வேண்டும். முகத்துக்கு ஒரு தடவையும், முழு உருவத்துக்கும் மூன்று தடவையும் காண்பித்து வழிபட வேண்டும்.
3. நமது வீட்டு வாசலில் கோலம் போடாமலும், வீட்டில் விளக்கேற்றாமலும் அருகில் இருக்கும் ஆலயங்களுக்குச் செல்லக் கூடாது. அப்படிச் செல்வதால் பலன்கள் கிடையாது.
4. விளக்கு எரிந்துக் கொண்டிருக்கும் பொழுது, அதில் இருக்கும் எண்ணெய் அல்லது நெய்யை கையால் தொடுவதும் அதன் பிறகு அதைத் தலையில் தடவிக் கொள்வதும் கூடாது.
5. சிவன் அர்ச்சனைக்கு உகந்தது வில்வ இலை. விஷ்ணுவிற்கு உகந்தது துளசி. விநாயகர் வழிபாட்டிற்கு உகந்தது அருகம்புல். அதே போல் பிரம்மாவிற்கு உகந்தது அத்தி இலை. இவற்றை மாற்றி, மற்ற தெய்வங்களுக்கு வைத்து வழிபடக் கூடாது.
6. கலச பூஜை செய்கிறோம். கலசத்தின் அா்த்தங்கள் தெரியுமா? கலசத்தை தான் சரீரம் என்கிறோம். கலசத்தின் மேல் சுற்றியிருக்கும் நூல் தான் நம் உடம்பில் இருக்கும் நாடி, நரம்புகள். கலசத்தின் உள்ளே இருக்கும் தீா்த்தம் தான் இரத்தம். கலசத்தின் மேல் உள்ள தேங்காய், தலையாக கருதப்படுகிறது. கலசத்தின் மேல் உள்ள தேங்காயைச் சுற்றியிருக்கும் மாவிலையை, சுவாசமாகப் பார்க்கிறோம். கலசத்தின் அடியில் இருக்கும் அரிசியும், இலையும் தான் மூலாதாரம். அதில் இருக்கும் கூர்ச்சம் தான் மூச்சாக கருதப்படுகிறது. உபசாரத்தை பஞ்ச பூதங்களாக வழிபடுகிறோம்.
7. பெண்கள் வேல் மற்றும் சிவலிங்கத்தை அபிஷேகம் செய்யகூடாது.
8. கோவில்களில் சூடம் மற்றும் தீபத்தை கைகளில் ஏற்றி காண்பிக்க கூடாது.
9. பூஜைக்குப் பயன்படுத்திய தேங்காயை சமையலில் சேர்த்து, பின்னர் அந்த உணவை மீண்டும் சாமிக்கு நிவேதனம் செய்யக் கூடாது.
10. அமாவாசை விரதமிருப்பவர்கள் அன்று, வீட்டில் தான் சாப்பிடவேண்டும். வெளியே சமைத்ததை சாப்பிடக் கூடாது. முடிந்தால் அமாவாசை அன்று பசியுடன் இருப்பவர்களுக்கு உணவு தரலாம். அமாவாசை தினங்களில் வீட்டு வாசலில் கோலம் போடக் கூடாது.
இவ்வாறு அவர் தனது பதிவில் தெரிவித்துள்ளார்.
அது போல் கோயிலுக்கு செல்லும் போது முதலில் கோபுரத்தை வணக்க வேண்டும். கோபுர தரிசனம் கோடி புண்ணியம் என்பார்கள். அது போல் கொடி மரத்தையும் தவறாமல் வழிபட வேண்டும். எந்த தெய்வ சிலைகளையும் கைகளால் தொட்டு வணங்கவே கூடாது. கோயிலில் சுவாமி பெயருக்கு அர்ச்சனை செய்ய கூடாது, உங்கள் குடும்பத்தினர், குடும்ப உறுப்பினர்களின் பெயர்களுக்கு மட்டுமே அர்ச்சனை செய்ய வேண்டும். அதுவும் முறையாக பெயர், நட்சத்திரம், கோத்திரத்துடன் சொல்ல வேண்டும்.
-
நகைக்கடன் தள்ளுபடி கூட்டுறவு வங்கியின் சர்ப்ரைஸ் வரட்டும்! ஊழியர்களுக்கு ரூ.8000 ஏறிய ஊதியம் பாருங்க -
விஜய்க்கு எதிராக வெளியான வீடியோ.. அதிர்ந்து போன நடிகை அம்பிகா! ஆதங்கத்துடன் பதிலடி -
2020ல் ஒரு கோடிக்கு 'இதை' வாங்கியிருந்தால் இன்று 75 கோடி லாபம்.. எஸ்பிஐயில் 6 கோடி.. தங்கம் 4 கோடி -
எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தி! திமுகவில் இணைந்த முன்னாள் எம்எல்ஏ இளையக்கண்ணு! -
தமிழ்நாட்டின் ஹிட்லர்.. மனைவி, மகளை விரட்டிவிட்டு மகளிர் தின விழாவா! விஜய்யை சாடிய இயக்குநர் அமீர் -
ஸ்டாலின் காதுக்கு எட்டிய பெயர்.. உளவுத்துறைக்கு உடனே உத்தரவு.. சென்னை சுவரில் தோன்றிய நாடார் சங்கம் -
NDA கூட்டணியில் தவெக? துணை முதல்வராகிறாரா விஜய்? சாணக்கியத்தனத்தை சொல்லி கொடுத்த பிரபல நடிகர் -
வீட்டுப் பெண்களை நினைக்காமல் அவதூறு பரப்பி.. தவெக நிகழ்ச்சியில் பேசிய பெண்! ஒரு நொடி முகம் மாறிய விஜய் -
இந்தியாவுக்கு ஆப்பு வைக்கும் ரஷ்யா.. கச்சா எண்ணெய் விலையில் இனி சலுகை இல்லை? நேரம் பார்த்து அடிக்கும் புதின் -
Sani Peyarchi: விருச்சிக ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. இனி பொற்காலம் ஆரம்பம் -
விஜய்க்கு தான் பிரச்சனை! அடுத்த அடி, அதிரடி காட்டும் மகன் ஜேசன் சஞ்சீவ்! இதுதான் கெத்து.. குவியும் பாராட்டு -
“OPS சிரிப்பே அவருக்கு பிரச்சனை”.. ஸ்டாலின் பேச பேச.. மேடையிலேயே குலுங்கி குலுங்கி சிரித்த ஓபிஎஸ்!












Click it and Unblock the Notifications