உலகமே வியக்குது.. ஆச்சரியமூட்டும் நெல்லையப்பர் கோயில்.. திருநெல்வேலியில் "சத்தம்" கேட்குதா? அடடடே
நெல்லை: நெல்லையப்பர் திருக்கோயில் இன்றுவரை உலக அதிசயமாக விளங்கி கொண்டிருக்க காரணம் என்ன தெரியுமா?
திருநெல்வேலியில் அமைந்துள்ள நெல்லையப்பர் - காந்திமதி அம்மன் திருக்கோயில், 7ம் நூற்றாண்டுக்கு முன்பே சிறப்பும், பழமையும் வாய்ந்த திருத்தலமாகும். தேவாரம் பாடல் பெற்ற தலங்களில் ஒன்றாக விளங்கி கொண்டிருக்கிறது.

மிகப்பெரிய பரப்பளவில் 2 பெரிய கோயிலாக அமைந்துள்ள இந்த திருக்கோயிலில், கோயிலுக்கு உள்ளே ஒரு குளமும், வெளியே ஒரு குளமும் அமைந்திருக்கிறது. வருடாவருடம் திருவாதிரை, மகா சிவராத்திரி, ஐப்பசி அன்னாபிஷேகம், ஆனித்திருவிழா போன்றவை வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகின்றன.
மூலவர்: இங்குள்ள நெல்லையப்பர் கோவில் மூலவர் சுயம்புலிங்கமாக தோன்றியவர் என்பார்கள்.. அதேபோல, மூலவரின் தலையில் வெட்டுக்காயம் ஒன்றும் காணப்படுகிறது. இதற்கு ஒரு காரணமும் சொல்லப்படுகிறது.
அதாவது, அரண்மனைக்கு பால் ஊற்றும் பால்காரர், ஒருமுறை அந்த வழியாக வரும்போது, அங்கிருந்த கல்லில், அவரது கால் இடறிவிட்டது.. இதில் கையில் வைத்திருந்த பால் அனைத்தும், அந்த கல்லின் மீது கொட்டி விட்டதாம்.. இதுபோலவே, ஒவ்வொருமுறையும், அந்த கல் தடுக்கி, பால் கொட்டியவண்ணம் இருந்தது.
வெட்டுக்காயம்: உடனே மன்னரின் உதவியுடன் அந்த கல்லை அகற்ற முயற்சித்தபோது, அந்த கல்லில் கோடாரி பட்டு, ரத்தம் கொட்டியிருக்கிறது. வானில் ஒலித்த அசரீரியின் படி, தலையின் இடது பக்கம் வெட்டுக்காயத்துடன் சிவலிங்கம் திடீரென வெளிப்பட்டிருக்கிறது. அதனால்தான் மூலவரின் தலையில் வெட்டு காயம் இன்றும் இருப்பதாக சொல்கிறார்கள்.
இத்தனை சிறப்பு வாய்ந்த நெல்லையப்பர் கோவிலில் இன்னொரு அதிசயமும் உள்ளது.. இங்குள்ள கல் தூணை வெறும் கைகளினால் தட்டினால் ச, ரி, க, ம, ப, த, நி என்கிற ஏழு இசை ஸ்வரங்கள் ஒலிக்கின்றன..
இசைத்தூண்கள்: 3 பிரகாரங்களை கொண்ட இந்த கோயிலின், 2ம் பிரகாரத்தில் ஏழிசை சுரங்களை எழுப்பும் இந்த இசைத்தூண்கள் அமைந்திருக்கின்றன.. ஒவ்வொரு தூணிலும் ஒவ்வொரு இசையை எழுப்புகிறது.
பெரிய தூணில் கர்நாடக சங்கீதமும், அதை சுற்றியிருக்கும் சின்ன தூண்களில் மிருதங்கம், கடம், சலங்கை, வீணை மணி போன்ற இசைக்கருவிகளின் சத்தமும் கேட்க முடிகிறது. அந்த காலத்தில் திருவிழாக்களின்போது இசைக்கலைஞர்கள் இந்த தூண்களில்தான் இசைத்திருக்கிறார்கள்.
பாறை தூண்கள்: பொதுவாக, இசை என்பது காற்றை உள்வாங்கி, அதன்மூலம் வெளியாகும் ஒலி வடிவமாகவே கருதப்படுகிறது.. ஆனால், கடினமான இந்த பாறை தூண்களுக்குள் காற்று எப்படி உள்ளே செல்ல முடியும்? வெறும் கல்லுக்குள் எப்படி 7 ஸ்வரங்களும் சத்தம் எழுப்ப முடியும்? அதுவும் தொழில்நுட்ப வசதிகள் எதுவுமே இல்லாத அந்த காலத்தில் இந்த தூண்களை எப்படி உருவாக்க முடியும்? எப்படி வடிவமைத்திருப்பார்கள்? என்பதெல்லாம் இன்றுவரை புரியாத புதிராக, ஆச்சரியமாகவும் விளங்கி கொண்டிருக்கிறது.
ஒருமுறை இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி கழகத்தின் இயற்பியல் பிரிவு விஞ்ஞானிகள், இதுகுறித்து ஆய்வு செய்தார்கள்.. இந்த தூண்களின் வடிவமைப்பு மற்றும் தூண்களிலிருந்து வெளிப்படும் இசை போன்றவற்றை வைத்து இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
இசைத்தூண்கள்: தன்மைக்கு ஏற்ப மாறுபட்டு இசைந்து கொடுக்கும் அலைக்கற்றையினால், இந்த ஒலி உருவாகிறதாக ஆய்வில் தெரியவந்தது. அதாவது, ஒவ்வொரு கல்லையும் ஒவ்வொரு பதத்தில் இழைத்திருந்தால் மட்டுமே இது சாத்தியமாகும் என்கிறார்கள். எனினும், இந்த தூண்கள் குறித்து முழுமையாக கண்டுபிடிக்க முடியவில்லை. ஆனால், இதுபோன்ற இசைத்தூண்கள் உலகில் எங்குமே கிடையாது என்பதே நெல்லையப்பர் கோயிலின் அதிசயமாக விளங்கி கொண்டிருக்கிறது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications