தொடர் விடுமுறை! வண்டியை திருப்பதிக்கு விட்ட பக்தர்கள்! ! ஒரு நாள் உண்டியல் வருமானம் எவ்வளவு?
திருப்பதி: தொடர் விடுமுறை எதிரொலியால் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. நெரிசல் ஏற்படாத வண்ணம் அங்குள்ள பாதுகாப்பு படையினரும் தேவஸ்தான நிர்வாகிகளும் பக்தர்களை பாதுகாப்பாக சுவாமி தரிசனம் செய்ய வைக்கிறார்கள்.
திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சுவாமி தரிசனம் செய்கிறார்கள். அது போல் விசேஷ நாட்களில் லட்சக்கணக்கானோர் திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு வருகை தருகிறார்கள்.

நாளை பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதனால் பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் சனி, ஞாயிறு, திங்கள் ஆகிய 3 நாட்கள் தொடர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையொட்டி மக்கள் திருப்பதிக்கு சென்றுவிட்டனர். ஏராளமானோர் திருப்பதி சென்றுவிட்டதால் அங்கு கூட்டம் அலைமோதுகிறது. வைகுண்டம் க்யூ காம்ப்ளஸில் உள்ள அனைத்துக் கம்பார்ட்மென்டுகளிலும் பக்தர்கள் நிரம்பினர். இது தவிர நாராயணகிரி தோட்டத்தில் உள்ள அனைத்து ஷெட்டுகளிலும் கூட்டம் நிரம்பி வழிகிறது.
திருமலையில் உள்ள கல்யாண வேதிகா மண்டபம் வரை பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கிறார்கள். பக்தர்கள் கூட்டம் கடந்த 13 ஆம் தேதி இருந்தே அதிகரித்து வருகிறது. நாளை இரவு வரை திருப்பதியில் பக்தர்கள் கூட்டம் இருக்கும் என்றும் தேவஸ்தான் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தரிசன வரிசையில் சென்ற பக்தர்களுக்கு ஸ்ரீவாரி சேவா சங்க தொண்டர்கள் அன்னப்பிரசாதம், குடிநீர், டீ , காபி ஆகியவற்றை வழங்கி வருகிறார்கள், குழந்தைகளுக்கும் பால் வழங்கப்படுகிறது. கோயிலில் நேற்று முன் தினம் 66,782 பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். கல்யாண கட்டாவில் 36,229 பக்தர்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினர்
அன்றைய தினம் ஒரு நாள் உண்டிகை காணிக்கை ரூ 3 கோடியே 71 லட்சம் கிடைத்துள்ளதாக தேவஸ்தான் அதிகாரிகள் தெரிவித்தனர். தொடர் விடுமுறையையொட்டி சுற்றுலா தலங்களிலும் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது.
தொடர் விடுமுறையையடுத்து ரயில்கள், பஸ்களிலும் கூட்டம் அதிகரிக்கும் என்பதால் சென்னையிலிருந்து பல்வேறு இடங்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.
திருப்பதி மலைமேல் உள்ள ஏழுமலையான் திருவுருவச்சிலை எப்போதும் 110 டிகிரி ஃபாரன்கீட் வெப்பத்தில் இருக்கிறது. திருமலை 3000 அடி உயரத்தில் உள்ள குளிர்பிரதேசம். அதிகாலை 4.30 மணிக்கு குளிர்ந்த நீர், பால் மற்றும் திரவியங்களால் அபிஷேகம் செய்கிறார்கள். ஆனால், அபிஷேகம் முடிந்தவுடன் ஏழுமலையானுக்கு வியர்க்கிறது. பீதாம்பரத்தால் வியர்வையை ஒற்றி எடுக்கிறார்கள். வியாழக்கிழமை அபிஷேகத்திற்கு முன்னதாக, நகைகளைக் கழற்றும் போது, ஆபரணங்கள் எல்லாம் சூடாகக் கொதிப்பதாக கூறப்படுகிறது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications