ஆந்திராவில் உள்ள ஞானசரஸ்வதி கோயில் மீதுள்ள மஞ்சளை சாப்பிட்டால் போதும்! வியக்க வைக்கும் ஆலயம்
சென்னை: ஆந்திர மாநிலம், ஆதிலாபாத், பஸாராவில் உள்ள ஞானசரஸ்வதி கோயிலில் சிலை மீதுள்ள மஞ்சளை உட்கொண்டு கல்வி கற்கும் திறன் அதிகரிக்கும் என நம்பப்படுகிறது.
இதுகுறித்து ரத்தினம் வடிவேல் சேகர் என்பவர் கூறியிருப்பதாவது: நமது நாட்டில் சரஸ்வதி தேவிக்கென அமைந்துள்ள மிகச் சில கோயில்களில் இதுவும் ஒன்று. இங்குள்ள கோயில் கருவறையில் ஞான சரஸ்வதி தேவி வீணை, அட்சமாலை, ஏடு தாங்கி அருள்புரிகிறாள். இவள் அருகிலேயே மகாலட்சுமி காட்சி தர, மகா காளி தனிச் சன்னதியில் ஆலயப் பிரகாரத்தில் வீற்றிருப்பது சிறப்பு.

ஆலயத்தின் முன்புள்ள மூன்று நிலை ராஜகோபுரம் தாண்டி கொடி மரத்தைத் தரிசித்துவிட்டு உள்ளே நுழையும்போது, அங்கு சூர்யேஸ்வர சுவாமி சிவலிங்க ரூபத்தில் உள்ளார். இந்த லிங்கத்தின்மேல் தினமும் சூரிய கிரகணங்கள் படுவதாலேயே, சூரியன் வழிபடும் சிவபெருமான் என்ற பொருளில் இவருக்கு ஸ்ரீ சூர்யேஸ்வர சுவாமி என்ற பெயர் ஏற்பட்டுள்ளது.
சாளுக்கிய மன்னர்கள் காலத்தில் கட்டப்பட்டதாகக் கருதப்படும் இந்த பஸாரா ஆலயத்தைச் சுற்றி எட்டு புனித தீர்த்தங்கள் உள்ளன. அவை இந்திர, சூர்ய, வியாச, வால்மீகி, விஷ்ணு, விநாயக, புத்ர, சிவ தீர்த்தங்களாகும். வால்மீகி முனிவர் இத்தலத்து சரஸ்வதி தேவியை வழிபட்ட பின்னரே ராமாயணத்தை எழுத ஆரம்பித்தாராம். ஆலயத்தில் வால்மீகி முனிவரின் சன்னதியும், அருகில் அவரது சமாதியும் உள்ளன.
இந்த ஆலயத்தில் முப்பெரும் தேவியர் இருப்பினும், இங்கு முக்கியமாக வணங்கப்படுபவள் ஞான சரஸ்வதி தேவியே! இவளை வணங்க கல்வியும் ஞானமும் கைகூடுமென்று பக்தர்கள் நம்புகின்றனர். எப்பொழுதும் மஞ்சள் காப்புடன் இருக்கும் சரஸ்வதி தேவி சிலையில் உள்ள மஞ்சளே பக்தர்களுக்குப் பிரசாதமாக வழங்கப்படுகிறது. இதைச் சிறிதளவு எடுத்து உண்டால் கல்வி கற்கும் திறன் அதிகரிக்கும் என்று பக்தர்கள் நம்புகின்றனர்.
வியாச முனிவருக்கு முதன்முதலில் தேவி முப்பெரும் தேவியரின் அம்சமாகக் காட்சி கொடுத்து, குமராஞ்சலா மலைப் பகுதியில் தேவி ஆவிர்பவித்தபடியால், இந்த ஞான சரஸ்வதி தேவிக்கு கௌமாராச்சல நிவாசினி என்னும் திருநாமமும் உண்டு.
இந்தியாவின் பல பாகங்களிலிருந்தும் பக்தர்கள் இந்த திவ்ய தலத்துக்கு வந்து வழிபடுகின்றனர். குழந்தைகளுக்கு கல்வி ஆரம்பிக்க அதிக அளவில் மக்கள் வந்து கூடுகின்றனர். குறிப்பாக சரஸ்வதி பூஜை நாளன்று இந்த ஆலயம் விழாக் கோலம் பூணுகிறது. பக்தர்கள் சரஸ்வதி தேவியை வழிபட்டுவிட்டு, வியாச முனிவர் தவம் செய்த குகையிலுள்ள வியாச பகவானையும் வழிபட்டுச் செல்கின்றனர். இவரை வழிபட புண்ணிய பலன்கள் கிட்டும் என்ற நம்பிக்கை இப்பகுதி மக்களிடையே பரவியுள்ளது.
இந்த ஊரில் தத்தாத்ரேயருக்கு ஆலயம் இருப்பதால், பஸாரா கிராமம் தத்ததாம் எனப்படும் தத்தாத்ரேயர் தலமாகவும் கருதப்படுகிறது. சிருங்கேரி மடத்தைச் சேர்ந்த ஸ்ரீ ந்ருஸிம்ம பாரதி (14-ஆம் நூற்றாண்டு) சுவாமிகள் பாத யாத்திரையாக இங்கு வந்தபோது தத்தாத்ரேயரைப் பிரதிஷ்டை செய்தாராம். இந்த தத்தாத்ரேயரை வணங்க ஞானம் கைகூடுமென்று நம்பப்படுகிறது.
புராண காலத்தில் வேத வியாச மகரிஷி கோதாவரி நதி தீரத்துக்கு வந்து தவம் செய்து கொண்டிருந்தபோது, சரஸ்வதி தேவி அவர்முன் தோன்றி, முப்பெரும் தேவியரான லட்சுமி, பார்வதி, சரஸ்வதிக்கு ஆலயம் அமைக்குமாறு கட்டளையிட்டாளாம். அதன்படி வியாசர் மூன்று சிலைகள் அமைத்துப் பிரதிஷ்டை செய்ததாகக் கூறப்படுகிறது. முதலில் அவர் பெயராலேயே வியாசபுரி என்று வழங்கப்பட்டு, பின்னர் வஸாரா என்று மாறி தற்போது பஸாரா என்று அழைக்கப்படுகிறது. இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
-
விஜய்க்கு எதிராக பெரம்பூர், திருச்சியில் கிழக்கில்.. களமிறங்கும் திமுக, அதிமுக வேட்பாளர்கள் யார்? -
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்! -
அரசியலன்னா இதுதான்.. எப்போ என்ன நடக்கும்னே தெரியாது.. ஸ்டாலின் டிக் அடித்த பெயர்.. பலர் ஷாக் -
இதுவரை திமுக ஜெயிக்காத.. கோவை தெற்கு தொகுதியைத் கேட்டு வாங்கிய செந்தில் பாலாஜி.. என்ன காரணம்? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு -
அழகே அழகு அப்டேட்: திமிரா பேசிய சுரேஷுக்கு சரியான பதிலடி கொடுத்த அழகுமதி.. ஒன்று சேர்ந்த குடும்பம் -
ஜெயலலிதா ஸ்டைலை பின்பற்றும் விஜய்! ‘டபுள் தொகுதி’ ஃபார்முலாவை கையில் எடுத்தது ஏன்? இதுவரை யார் யார்? -
திமுக தேர்தல் அறிக்கை LIVE: மகளிர் உரிமை தொகை, புதுமைப்பெண், தமிழ்ப்புதல்வன் தொகை உயர்வு! -
மத்தி, சென்னையை கிளீன் ஸ்வீப் செய்யும் திமுக! தெற்கு, வடக்கில் ட்விஸ்ட்! அப்போ அரியணை? வெளியான சர்வே -
சிக்சர் அடித்த ஸ்டாலின்.. இந்தியாவிலேயே முதன்முறை! பெண்களுக்காக ஸ்டாலின் கொண்டு வரும் மெகா திட்டம்! -
விஜய்க்கு சத்தமின்றி எடப்பாடி வைத்த செக்.. சம்பவம் பண்ணிட்டாரே.. ஸ்டாலினும் விடலையே.. கேம் ஓவர்? -
பெரம்பூர், திருச்சி கிழக்கு தொகுதிகளில் சி. ஜோசப் விஜய்.. 2 தொகுதிகளில் போட்டியிடும் தவெக தலைவர்!












Click it and Unblock the Notifications