கட்டில், பீரோவுக்கடியில் இதை வையுங்க.. ஆமா, கண்ணாடி டம்ளர் தண்ணீரில் எலுமிச்சையை போட்டால் என்னாகும்
சென்னை: பாசிட்டிவ், நெகட்டிவ் என இருவகையான ஆற்றல்களுக்குமே தகுந்தவாறு மாறும் தன்மை உடையது தண்ணீர்.. இதில், நேர்மறை ஆற்றல் வீட்டிற்குள் அதிகமாக வேண்டுமானால் எலுமிச்சம் பழமும் தேவைப்படும்.. அந்தவகையில், எலுமிச்சம் பழம், தண்ணீர் இவைகளை கொண்டு, எதிர்மறை ஆற்றலை எப்படி விரட்டுவது? கண்ணாடி டம்ளர் நீரில் எலுமிச்சையை போட்டு வைத்தால் என்னாகும்? சுருக்கமாக இங்கே பார்க்கலாம்.
ஆண்டிபயாடிக் தன்மை கொண்ட எலுமிச்சைகள், கண் திருஷ்டியையும் போக்கக்கூடியது..
எதிர்மறை ஆற்றலை விரட்டக்கூடிய சக்தி எப்போதுமே எலுமிச்சைக்கு உண்டு. மந்திரங்களை கிரகிக்கும் சக்தியும் எலுமிச்சைப்பழத்துக்கு நிறையவே இருக்கிறது. எலுமிச்சை இருந்தாலே வீட்டிற்குள் பாசிட்டிவ் சக்தியை வீட்டிற்குள் அதிகரிக்கும் என்பார்கள்..

நோய், கடன் தொல்லை, இன்னல்கள், போன்றவைகள் நெருங்க காரணமாக உள்ள எதிர்மறை ஆற்றலையும் வீட்டிலிருந்தே விரட்டக்கூடியது.. அதனால்தான், எலுமிச்சம்பழத்தை 4 துண்டுகளாக நறுக்கி, ஒரு தட்டில் கல் உப்புடன் சேர்த்து பீரோ, கட்டிலுக்கு அடியில் வைப்பார்கள்.. பழம் நிறம் மாறியதும், உப்பு, பழம் இரண்டையும் வேறு மாற்றி வைப்பார்கள்.. இதனால் வீட்டிலுள்ள நெகட்டிவ் எனர்ஜிகள் வெளியேறும் என்பது நம்பிக்கையாகும்.
தண்ணீரின் மாண்பு
அதேபோல தண்ணீருக்கும் தன்னை சுற்றியுள்ள ஆற்றலுக்கு தகுந்தாற்போல் மாறும் தன்மை
உள்ளது.. எனவேதான், கோவில்களில் தீர்த்தமாகவும் வழங்கப்படுகிறது.. பிறரை சபிக்கவும், உறவை துண்டித்து தலைமுழுகவும் தண்ணீர் பயன்படுத்தப்படுகிறது.
எனவே, சரியான முறையில் தண்ணீரை பயன்படுத்த வேண்டும்.. வீட்டில் குறிப்பிட்ட இடங்களில் தண்ணீரை வைப்பதன் மூலம், பாசிட்டிவ் எனர்ஜியை வீட்டிற்குள் அதிகரிக்க செய்யலாம்.. அவ்வளவு ஏன்? தண்ணீரையும் கல் உப்புடன் சேர்த்து வீட்டை துடைத்தால், வீட்டிற்குள் நிலவும் எதிர்மறை சக்தி வெளியேறிவிடும்.
புது வீட்டில் குடியேறினால்
ஒரு டம்ளர் நீரில் உப்பு வைத்தால், வீட்டில் பணக்கஷ்டங்களும் மனக்குழப்பங்களும் தீர்ந்துவிடும் என்று பெரியவர்கள் சொல்வார்கள்.. அதேபோல, மண்பானை அல்லது தாமிரம் பாத்திரத்தில், பூஜையறையில் தண்ணீர் வைக்க வேண்டும். இதில் இந்த தண்ணீரில் துளசி இலை, அல்லது ஏதாவது பூக்களை போட்டு வைக்கலாம்
அதேபோல புதிய வீட்டுக்கு குடி போவதாக இருந்தால், கண்டிப்பாக எலுமிச்சம் பழத்தின் துணை அவசியம்.. காரணம், பழைய வீட்டிலுள்ள பொருட்களை எடுப்பதற்கு முன்பு, எலுமிச்சம் பழத்தை வலது கையில் வைத்து, பூஜையறையில் விளக்கேற்றி வைக்க வேண்டும். குடிபோகும் புதிய வீட்டிற்குள் ஆரோக்கியம், அதிர்ஷ்டம், மகிழ்ச்சி அத்தனையும் நீடிக்க வேண்டும், குல தெய்வமும், காவல் தெய்வமும், இஷ்ட தெய்வமும் புது வீட்டிற்கும் வந்து பாதுகாக்க வேண்டும் என்று பிரார்த்திக்க வேண்டும்.
எலுமிச்சம் பழம் மூட்டை
பின்னர், அந்த எலுமிச்சம் பழத்தை மஞ்சள் துணியில் முடிச்சு கட்டி தனியாக வைத்து கொள்ள வேண்டும். புதிய வீட்டில் பொருட்களை அடுக்கி வைத்து, பூஜை அறையை சுத்தம் செய்து விளக்கேற்றியதுமே, எலுமிச்சம் பழத்தை பூஜையறையின் அலமாரியில் வைத்து வேண்டி கொள்ளலாம். இதனால் அங்குள்ள காவல் தெய்வங்கள் புதிய வீட்டிலும் காப்பார்கள்.
டம்ளர் நீர் + எலுமிச்சை
அதேபோல ஒரு கண்ணாடி டம்ளர் தண்ணீரில், எலுமிச்சையை போட்டு வைப்பதால் பல நன்மைகள் உண்டு.. பிறரது திருஷ்டி அதிகமாக இருந்தாலோ அல்லது வியாபாரத்தில் மந்த நிலைமை ஏற்பட்டாலோ, அத்தனையையும் விரட்டக்கூடிய சக்தி, இந்த தண்ணீர், எலுமிச்சைக்கு உண்டு..
எனவே, கண்ணாடி டம்ளரில் தண்ணீர் வைப்பதாக இருந்தால் வெள்ளிக்கிழமையை தேர்ந்தெடுக்கலாம். ஒருவாரம் கழித்து, அடுத்த வெள்ளிக்கிழமையில் மாற்றிக் கொள்ளலாம். இந்த நீரை மனிதர்கள் கால் படாத இடம் அல்லது சமையலறை சிங்க்கில் கொட்டி விட்டு, மீண்டும் புதிய நீரில், புதிய எலுமிச்சையை போட்டு வைக்கலாம். இதனால் கண்திருஷ்டியும் கழியும், பொருளாதார முன்னேற்றம், வியாபார விருத்தியும் உண்டாகும்.












Click it and Unblock the Notifications