பீரோவுக்கு அடியில் இதை மட்டும் வெச்சு பாருங்க.. அடுத்து வீட்டில் நடக்கும் மேஜிக் பாருங்க! அருமை
சென்னை: ஆன்மீகத்தில் எலுமிச்சம் பழத்துக்கு உள்ள முக்கியத்துவம் என்னென்ன? வீட்டில் இந்த பழத்தை வைத்திருப்பதால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன? எதிர்மறை ஆற்றலை விரட்டும் தன்மையை கொண்ட இந்த எலுமிச்சம் பழத்தினை எப்படியெல்லாம் பயன்படுத்தலாம்? இவைகளை பற்றி சுருக்கமாக இங்கே பார்ப்போம்.
எலுமிச்சை அமிலத்தன்மைக் காரணமாக ஒரு இயற்கையான கிருமிநாசினியாகும்.. பாக்டீரியா எதிர்ப்புப் பொருளாகும்.. எல்லாக் காலங்களிலும் கிடைக்கக்கூடிய அதியப்பழமாகும்.. வைட்டமின்C-ல் ஏராளமான மருத்துவ குணங்கள் உள்ளன.

முக்கியத்துவம் என்னென்ன
ஆன்மீகத்தில் முக்கியத்துவம் வாய்ந்த கனியாகும்.. புதன், சந்திரனுடன் எலுமிச்சை தொடர்புடையதாக கருதப்படுகிறது. எலுமிச்சம் பழத்திலுள்ள புளிப்பு, புதன் கிரகத்தை சரிசெய்யக்கூடியது.. அதேபோல, எலுமிச்சம் சாறு சந்திரனின் அடையாளமாக அறியப்படுகிறது.
தேவ கனி என்று சொல்லக்கூடிய எலுமிச்சம் பழமானது, தெய்வங்களுக்கு உகந்த கனியாகும்.. வேத சாஸ்திரங்களை பொறுத்தவரை, எலுமிச்சம் பழத்திற்கும் உயிர் இருப்பதாகவே கருதப்படுகிறது. மந்திரங்களை கிரகிக்கும் சக்தி எலுமிச்சைக்கு உள்ளதுடன், நேர்மறை ஆற்றலை வீட்டிற்குள் பெருக்கும் தன்மையும் இதற்கு உண்டு. அதனால்தான், தெய்வ வழிபாட்டில் தவிர்க்கவே முடியாத பழமாகிவிட்டது.
துஷ்ட சக்திகளை நம்மீது விழாமல் தனக்குள் கிரகித்துக் கொள்கிறது எலுமிச்சை.. உறவுகளுக்குள் தேவையில்லாத சிக்கல்களும் எழும்.. எனவே, நேர்மறை ஆற்றலை பெருக்க எலுமிச்சம் பழங்கள் உதவுகின்றன.
எலுமிச்சை - கவனிக்க வேண்டிய விஷயங்கள்
இந்த அளவுக்கு முக்கியத்துவம் இருப்பதால்தான், எலுமிச்சம்பழத்தை மட்டும், யாரிடமும் கடனாக வாங்கக்கூடாது என்பார்கள், அதிலும், தீய எண்ணங்கள் கொண்டவர்களிடமிருந்தும் எலுமிச்சம்பழம் வாங்கவேக்கூடாது.. ஏற்கனவே பரிகாரத்திற்கு பயன்படுத்தப்பட்ட எலுமிச்சையை தொடக்கூடாது. எதிர்மறை தன்மையை குறைக்கும் சக்தி, எலுமிச்சம் பழங்களுக்கு உள்ளதால்தான், திருஷ்டியில் தவிர்க்க முடியாத பழமாகிவிட்டது.
கோயிலிலிருந்து பிரசாதமாக தரும் எலுமிச்சையை திருஷ்டி சுத்தி போட பயன்படுத்தக் கூடாது. திருஷ்டிக்கு தனி எலுமிச்சையை வாங்கி பயன்படுத்த வேண்டுமாம். திருஷ்டி கழித்து வீசப்படும் எலுமிச்சையை காய்ந்துபோகும் வரை காலால் மிதிப்பதோ, கையால் தொடுவதோ கூடாது.. மற்றவர்கள் காலும் அதில் மிதிபடக்கூடாது.. வீட்டில் எலுமிச்சையால் கண்டிப்பாக தீபம் ஏற்றக்கூடாது..
திரிசூலம் - குழந்தை பாக்கியம்
எலுமிச்சம்பழத்தை 2 துண்டுகளாக வெட்டி குங்குமமும் மஞ்சளும் தடவி வீட்டு வாசலின் முன்புறத்தின், இரண்டு முனையிலும் வைத்துவிட்டால், கண் திருஷ்டியும், தீய சக்திகளும் விலகி செல்லும்.
பத்ரகாளி போன்ற உக்ரமான தெய்வங்களுக்கு எலுமிச்சம் பழத்தை மாலையாக கட்டி அணிவித்தால், பலகாலம் தடைபட்ட காரியங்கள் நிறைவேறும்.. சுபகாரியத்திற்கு செல்லும்முன்பு, 3 எலுமிச்சம் பழங்களை அம்மன் கோவில் வாசலின் முன்புறமுள்ள திரிசூலத்தில் சொருகி விட்டு சென்றால் உங்களது காரியம் வெற்றிபெறும்.. குழந்தை பாக்கியம் கிடைக்க தம்பதியர்கள் எலுமிச்சம் பழ மாலையை அம்மனுக்கு வேண்டி சாற்றலாம்.
பீரோவுக்கு, கட்டிலுக்கு அடியில்
குடும்பத்தில் ஏற்படும் வீண் விரைய செலவுகளை தடுக்கவும், கண் திருஷ்டியை போக்கவும், வீட்டில் தட்டுப்பாடின்றி பணவரவு ஏற்படவும், ஒரு தட்டில் கல் உப்பு பரப்பி, அதில் எலுமிச்சம் பழம் வைத்து, பீரோவுக்கு அடியில் வைக்க வேண்டும். ஆனால், யாருக்கும் தெரியாமல் பீரோவின் கால்களுக்கு நடுவில் உட்புறமாக வைத்துவிட்டு, ஒருவாரம் கழித்து இந்த தட்டிலுள்ள உப்பு, பழத்தை மாற்ற வேண்டும். இதனால், பீரோவிலுள்ள பணம் செலவாகாமல், பெருகும் என்பது நம்பிக்கையாகும்.
அதேபோல, ஒரு எலுமிச்சையை நான்கு பகுதிகளாக வெட்டி, உப்பு பரப்பிய தட்டின் நடுவே வைத்து, கட்டிலுக்கு அடியில் வைத்துவிட வேண்டும். மறுநாள் காலையில் அந்த எலுமிச்சையை கைகளால் தொடாமல், ஒரு பிளாஸ்டிக் கவரில் உப்புடன் சேர்த்து போட்டு தூக்கி வீசிவிட வேண்டும். இதனால் வீட்டிலுள்ள அத்தனை கெட்ட சக்திகளும் அடியோடு விலகிவிடும் என்பது நம்பிக்கையாகும்.












Click it and Unblock the Notifications