Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மணி பிளாண்டை போலவே சங்கு பூ.. பணத்தை ஈர்க்கும் சூப்பர் செடி.. மகா விஷ்ணுவின் அருளை பெற சங்கு பூக்கள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: வீட்டில் அமைதியும், ஒற்றுமையும், ஆரோக்கியமும், செல்வமும், மகிழ்ச்சியும் தழைத்தோங்க, வாஸ்து செடிகளை வீட்டில் வைத்து வளர்க்கலாம் என்று நிபுணர்கள் அறிவுறுத்துகிறார்கள்.. அந்தவகையில் சில செடிகளை மட்டுமே வளர்க்க சொல்கிறார்கள்.. சில செடிகளை வீட்டிற்கு வெளியேகூட நட்டு வைக்கக்கூடாது என்பார்கள்.. அந்தவகையில், சங்கு பூ செடிகளும் முக்கியமானவை.. இந்த செடியை எங்கே, எப்படி, எந்த திசையில் வைக்க வேண்டும்? வாஸ்துவில் சொல்லப்பட்டுள்ளது என்ன? இதுகுறித்து பார்க்கலாம்.

நீலத்தை தவிர, இளஞ்சிவப்பு, வெள்ளையிலும் சங்கு பூக்கள் உண்டு.. வெண்மை நிறம் சரஸ்வதிக்கு உரியது என்றாலும், இந்த பூக்களை எல்லா கடவுள்களுக்கும் வைத்து போற்றலாம்.

நீல நிற சங்குப்பூ

அதேபோல நீலநிற சங்குப்பூவானது விஷ்ணு பகவானின் மனதுக்கு நெருக்கமான பூ என்பார்கள்.. நீல நிற சங்குப்பூவில் நீலகண்டரான சிவன், ஶ்ரீ கிருஷ்ணர், சனீஸ்வரர் ஆகிய மூன்று தெய்வங்கள் வசிப்பதாக ஐதீகம்.. எனவே இந்த 3 கடவுள்களுக்குமே சங்குப்பூக்களை கொண்டு வணங்கலாம்.சனி தோஷத்தில் சிக்கியிருப்பவர்கள், இந்த சங்குப் பூங்கொடியை வீட்டில் வளர்த்து, அப்பூக்களை சனி பகவானுக்கு சமர்ப்பித்து வழிபட்டு வரலாம்.. இதனால் தோஷம் நீங்கும்..

எந்த காரியத்தை தொட்டாலும் தடங்கல், தடைகள் ஏற்பட்டால், 5 சங்கு பூக்களை நீரில் போட்டு குளித்து வந்தால் பலன்கள் கிடைக்கும்..மணி பிளாண்ட்டிற்கு அடுத்தப்படியாக வீட்டின் செல்வ நிலைமை அதிகரிக்கும் சக்தி இந்த சங்குப்பூவிற்கு உள்ளது என்பதால், பலரும் வீட்டில் வைத்திருப்பார்கள்..

ஒரு பாத்திரத்தில் நீர் நிரப்பி, அதில் 7 சங்கு பூக்களை போட்டு வைக்கலாம்.. ஆனால், வடகிழக்கு மூலையில் வைப்பதே சிறந்தது.. இது குடும்பத்திலுள்ள கடன், பிரச்சனைகளை விரட்டி நேர் மறை ஆற்றலை இழுத்து கொண்டு வரும்..

வீட்டில் வடக்கு திசை

ஒருவேளை செடியாக வளர்ப்பதாக இருந்தால் நீல சங்குப்பூ கொடியை, வீட்டில் வடக்கு திசையில் நட்டு வைத்து வளர்க்க வேண்டும்.. மேற்கு அல்லது தெற்கு திசையில் மட்டும் இந்த கொடியை நடக்கூடாது. அப்படி நட்டு வைத்தால் குடும்பத்திலுள்ளவர்களின் அமைதி, மகிழ்ச்சி குலைந்துவிடும்..

இந்த பூ எங்கிருந்தாலும், அங்கே மகாலட்சுமியின் வாசம் நிச்சயம் இருக்கும்.. எனவே மகாவிஷ்ணுவின் அருளையும், ஆசீர்வாதத்தையும் பெற வேண்டுமானால், இந்த பூக்களை விஷ்ணுவுக்கு சாத்தி வழிபட வேண்டும்.. இதனால் தம்பதிக்குள் பிணக்குகள், கருத்து வேறுபாடுகள் நீங்கி இணக்கமாகும் சூழல் உருவாகும்.. குடும்பத்தில் மகிழ்ச்சி கிடைக்கும்... நிலவிவரும் நெகட்டிவ் எனர்ஜியும் விரட்டியடிக்கப்பட்டுவிடும்.

விஜயதசமி நாளில் சங்கு பூக்களை கொண்டு செய்யும் பரிகாரங்களுக்கு எப்போதுமே வலிமை அதிகம் என்பார்கள்.. எனவே அம்பிகை அந்நன்னாளில் வணங்கி ஆசீர்வாதத்தை பெறலாம்.. அப்படி விஜயதசமி நாளில், லட்சுமிதேவியை சங்கு பூ வைத்து பூஜை செய்து முடித்ததுமே, அந்த பூக்களை உங்களது பர்ஸ், பீரோ, பணபெட்டியில் வைத்து கொள்ளலாம். இது நிதி நிலைமை சரிவில் செல்லாமல் தடுக்கும்.

மருத்துவ நன்மைகள்

இந்த நீலநிற சங்குப்பூக்கள் மனதுக்கு நிம்மதியை தரக்கூடியது. இந்த பூக்களை பார்க்கும்போது மனதிலுள்ள கோபம், குழப்பம் நீங்கும்.. அதேபோல, இந்த செடிக்கு உஷ்ணத்தை போக்கி குளுமையை பரப்பும் தன்மை நிறையவே உண்டு.. எனவே வீட்டு வாசலில் சங்குப்பூ வளர்ப்பதால், வீட்டிற்குள் அனல் அடிக்காது.. இந்த பூவின் வாசத்திற்கு பூச்சிகளும், கொசுக்களும் வீட்டிற்குள் அண்டாது..

சங்குப்பூவிலிருந்து எடுக்கப்படும் சாறு, கல்லீரலை பலப்படுத்துகிறதாம்.. சங்குப்பூவில் பட்டுவரும் காற்றை சுவாக்கும்போது, சுவாச கோளாறுகளு நீங்குவதுடன், இதயமும் ஆரோக்கியமாகும்.. சங்குப்பூவில் ஆண்டி ஆக்சிடண்ட் உள்ளதால், சருமத்துக்கும் ஆரோக்கியம் தருகிறது..

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+