உடையும் வெண் பூசணிக்காய்.. திருஷ்டி கழிக்கும்போது இது முக்கியம்.. ஆன்மீகம், அறிவியல் காரணம் இதுதான்

Subscribe to Oneindia Tamil

சென்னை: எத்தனையோ காய்கறிகள் இருந்தாலும், திருஷ்டி கழிக்க எதற்காக பூசணிக்காயை பயன்படுத்த வேண்டும்? புதுமனை புகுவிழாக்களில் பூசணியை பயன்படுத்த என்ன காரணம்?அல்லது புது வீட்டின் முன்பாக பூசணியை தொங்கவிட என்ன காரணம்? திருஷ்டிக்காக உபயோகப்படுத்தும்போது பூசணிக்காயை எப்படி பயன்படுத்த வேண்டும்? இவைகளை பற்றியெல்லாம் இங்கே சுருக்கமாக பார்ப்போம்.

பூசணிக்காயை பயன்படுத்துவதற்கு புராண கதை ஒன்று சொல்லப்படுகிறது.. கூச்மாண்டன் என்ற அசுரன், தேவர்களை பல காலமாக துன்புறுத்தி வந்துள்ளான்.. அவனது இன்னலை தாங்க முடியாத தேவர்கள், திருமாலிடம் சென்று முறையிட்டிருக்கிறார்கள்.

Spirituality Pumpkin thirushti drishti

புராண காரணம்

உடனே கூச்மாண்டனுடன் திருமால் போரிட்டு தோற்கடித்தார்.. இறுதியில் தன்னுடைய புகழ் என்றும் நிலைத்திருக்கும் வரம் வேண்டும் என்று கூச்மாண்டன் கேட்டுள்ளான்.. அதாவது செத்தும் பிறருக்கு உபயோகமாக வாழ்வதற்கான வரத்தை கேட்டுள்ளான். அதன்படியே, பூசணிக்காயாக பிறந்து, பிறரது கண்திருஷ்டியை நீக்க பயன்படுவாய் என்று வரம் தந்தாராம்.

திருஷ்டிகளை ஈர்த்துக்கொண்டு, அந்த இடத்தை தூய்மையாக்கும் சக்தி பூசணிக்காய்க்கு உண்டு என்பார்கள். அதனால்தான், வாசலின் நுழைவு வாயிலில் கட்டி விடுகிறார்கள்.

உயிர்சக்தி காய்கறி

அதிகமான உயிர்சக்தி கொண்ட ஒருசில உணவுகளில் முதன்மையானது வெண் பூசணியாகும். ஏராளமான சத்துக்கள் இந்த பூசணியில் உள்ளதால்தான், வெளிநாடுகளில் சமையலில் தவிர்க்க முடியாத இடத்தில் வெண்பூசணி உள்ளது.. அனைத்துவிதமான சூப்களில் வெண்பூசணி சேர்க்கப்படுகிறது. நம்முடைய முன்னோர்களும் வீடுகளில் கட்டாயம் வெண்பூசணியை வளர்த்து வந்துள்ளனர்.

ஆரோக்கியத்தில் மட்டுமல்ல, ஆன்மீகத்திலும் வெண்பூசணிக்கு முக்கியத்துவம் உண்டு.. இதற்கு காரணம், அங்கு ஏதாவது எதிர்மறை சக்திகள் இருந்தாலும், வெண்பூசணி அவைகளை அகற்றிவிடுமாம். அதுமட்டுமல்ல, ஏழைகளுக்கு வெண்பூசணியை தானம் தருவது, புண்ணியத்தை பெற்றுத்தரும் என்பார்கள்..

எண்ண அலைகள்

பூசணிக்காய்க்கு அதிகளவு பிராண சக்தி இருக்கும் என்பதால்தான், வீட்டின் கதவின் அருகில் தொங்க விடப்படுகிறது.

பூசணிக்காயில் எண்ண அலைகளை காந்த அலைகளாக மாற்றி சேமித்து வைத்துக்கொள்கின்றன. அவைகளின் ஈர்ப்பு வட்டம் அருகிலுள்ள எண்ணம் எதுவானாலும் எண்ணங்கள் தரும் அதிர்வுகளை ஈர்த்து சேமித்துக் கொள்கின்றன.. பூசணி மட்டுமல்ல, தேங்காய், எலுமிச்சை, படிகாரம், கல்லுப்பு, ஸ்படிகம் போன்ற பொருட்களுக்கும் இந்த சக்தி உண்டு. ஏராளமான நேர்மறை ஆற்றல் வெண்பூசணியில் உள்ளது.. புதிதாக வீடு கட்டி குடியேறும்போது, வெண்பூசணியை வீட்டின் முன்பு கட்டி தொங்கவிடுவது பழக்கமாக உள்ளது.

எப்படி திருஷ்டி சுற்ற வேண்டும்

திருஷ்டிக்கு பூசணிக்காயைவிட பெஸ்ட் வேறில்லை.. எப்போதுமே திருஷ்டி சுற்றும்போது, பூசணிக்காயை முழுமையாக சுற்ற வேண்டும் என்பார்கள்..

சிலர் காயை வாங்கியதுமே, அதன் மேல்பகுதியை கத்தியால் வெட்டியெடுத்து, அதற்குள் குங்குமம், சில நாணயங்களை கொட்டி, பிறகு திருஷ்டி சுற்றுவார்கள்.. இப்படி செய்யக்கூடாது.. கத்தியால் அறுபடும்போதே, காயிலுள்ள உயிர் சத்து வெளியேறிவிடும். அத்துடன் திருஷ்டியும், சுற்றும் முன்பே வெளியேறிவிடும்.

சிதறும் விதைகள்

பூசணிக்காயை வாங்கி தரையில் வைத்து, நான்கு திசைகளிலிருந்தும் தாண்ட வேண்டும். வலது கால் முன்னிருந்துதான் எடுத்து வைத்து ஒவ்வொருமுறையும் தாண்ட வேண்டும்.. அப்போதுதான் நாலாபக்கமுள்ள திருஷ்டி முழுமையாக கழியும்.. பூசணிக்காயை தாண்டி விட்டு, பிறகுதான், திருஷ்டி சுற்ற வேண்டும். அமாவாசை நாட்களில் கண்டிப்பாக திருஷ்டி கழிக்க வேண்டும்.

பூசணிக்காயை உடைக்கும் போது, அதில் உள்ள விதைகளை வெளியேற்றும் போது, அவை புதிய வாழ்க்கையை ஆரம்பிப்பதை குறிப்பதாகும்.. அதனால்தான், எந்தவொரு நல்ல காரியம் துவங்கினாலும், பூசணிக்காய் முதன்மையானதாக பயன்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+