பூஜை அறையில் கல் உப்பு வைக்கலாமா? அடகு வைத்த தங்க நகையை மீட்க கல்லுப்பு பரிகாரம் இதுதான்..அடேங்கப்பா
சென்னை: கல் உப்புக்களை பூஜையறையில் வைக்கலாமா? கல்லுப்பு பரிகாரம் என்றால் என்ன? அடகுவைத்த நகைகளை மீட்க முடியாமல் இருந்தால், அதற்கான எளிமையான கல் உப்பு பரிகாரம் என்ன தெரியுமா? சுருக்கமாக இங்கே பார்க்கலாம்.
கல் உப்பு மிகச்சிறந்த கிருமி நாசினியாகும்.. வீட்டின் எதிர்மறை ஆற்றல்களை வெளியேற்றி நேர்மறை ஆற்றல்களை வீட்டிற்குள் கொண்டுவரக்கூடியது கல் உப்புக்கள்.

மகாலட்சுமியின் அம்சம்
பாற்கடலை கடையும் போது மகாலக்ஷ்மி அவதரித்தார். அவர் அவதரித்த கடலில்தான் உப்பு இருக்கிறது என்பதால், கல் உப்பு சகல செல்வங்களின் ஐஸ்வர்யமாக பார்க்கப்படுகிறது. கல் உப்பை எப்போதுமே மண் பாத்திரம் அல்லது பீங்கான் பாத்திரத்தில் வைக்க வேண்டும்..
எப்போதுமே வலதுகை பக்கத்தில் உப்பு ஜாடி இருக்க வேண்டும்.. உயரத்தில் வைக்காமல், கையை நீட்டி எடுக்கும் அளவுக்கு அருகிலேயே உப்பு இருக்க வேண்டும். மகாலட்சுமியின் அம்சம் என்பதால், உப்பு ஜாடியின் மீதுகூட அழுக்கு படியாமல் பார்த்து கொள்ள வேண்டும். அழுக்கு படியாத கைகளில்தான் உப்பு எடுக்க வேண்டும். மாலை 6 மணிக்கு மேல் உப்பு ஜாடியை கழுவக்கூடாது. வெள்ளி மற்றும் செவ்வாய்களில் உப்பு ஜாடியை கழுவலாம்..
சிவப்பு துணியில் கல் உப்பு
வீட்டில் உலாவும் தீய சக்தியை, எதிர்மறை ஆற்றல் விலக வேண்டுமானால், வீடு துடைக்கும்போது, அந்த தண்ணீரில் ஒரு கைப்பிடி கல் உப்பை போட்டு துடைப்பது நல்லதாகும். சிவப்பு துணியில் கல் உப்பை கட்டி, முடிச்சு போல கட்டி வாசலில் தொங்கவிடலாம்... இதனால், தீய சக்திகள் வீட்டிற்குள் அண்டாது..
அதேபோல, ஒரு புதிய தட்டில் கல் உப்பை பரப்பி, அதன் மீது ஒரு சிறிய துண்டு பச்சை கற்பூரத்தை வைத்தும் ஏற்றலாம். கல் உப்பை சிறிய கிண்ணத்தில் நிரப்பி பூஜையறையில் வைக்கலாம்.. இது செல்வத்தை ஈர்க்கும் என்று சொல்லப்படுகிறது. அல்லது ஒரு சிறிய மண் குவளையில் கல் உப்பை நிரப்பி, அந்த உப்பிற்கு நடுவே சிறிய அளவு வசம்பு துண்டினை வைக்கலாம்.
வருமான தடைகள்
கல் உப்பு தீபம் ஏற்றி வழிபட்டு வந்தால் குடும்பத்தில் உள்ள சிக்கல்கள் தீரும் என்பார்கள்.. குறிப்பாக, பௌர்ணமி நாட்களில் கல் உப்பு தீபம் ஏற்றினால், தொழில் தடை, வருமான தடைகள் போன்றவை 48 நாட்களுக்குள் விலகிவிடும் என்பது நம்பிக்கையாகும்.
அதேபோல, ஒரு கண்ணாடி பாத்திரத்தில், கல் உப்பு, எலுமிச்சை, 4 காய்ந்த மிளகாய்களை போட வேண்டும், இந்த பாத்திரத்தை 4 மூலைகளிலும் வைத்து, தலைவாசல் கதவின் உட்புற பகுதியில் வைத்துவிட வேண்டும். வாரம் ஒருமுறை இந்த உப்பு, மிளகாயை மாற்றிவிட புதிதாக வைத்து வரும்போது, எப்பேர்ப்பட்ட திருஷ்டியும், கெட்ட சக்தியும் நீங்கிவிடுமாம்.
கல் உப்பு, மஞ்சள், குங்குமம்
அதேபோல, அடகு வைத்த நகையை மீட்க முடியாத சூழல், தடங்கல் இருந்தால், அதற்கும் கல் உப்பு பரிகாரம் உதவுகிறது.. இதனை காலை 10 மணிக்கு முன்பு அல்லது மாலை 6 மணிக்கு பின்பு செய்ய வேண்டும்.
அதாவது, பூஜையறையில் ஒரு கண்ணாடி கிண்ணத்தில், புதிதாக வாங்கிய கல் உப்பை நிறைத்துக்கொள்ள வேண்டும். அதன் மீது சிறிதளவு மஞ்சள் தூள், குங்குமத்தை தூவ வேண்டும். இந்த கல் உப்பு நிறைந்த கிண்ணத்தை பூஜை அறையில் மகாலட்சுமியின் படத்திற்கு அருகில் வைத்துவிட்டு, 2 மணி நேரம் கழித்து அதனை எடுத்து பீரோவில் நகை வைக்கும் இடத்தில் வைத்துவிட வேண்டும்.
இதில் கல் உப்பு, மஞ்சள், குங்குமம் என அனைத்துமே மகாலட்சுமியின் அம்சங்களாகும். இதனை செய்யும்போது, மனதிற்கள் மனதார உங்கள் கோரிக்கையை சொல்ல வேண்டும். இதனால், அடகு வைத்த நகை விரைவில் உங்கள் கைக்கு வந்து சேரும்.












Click it and Unblock the Notifications