சொந்த வீடு, மனை நிலம் வாங்குவோருக்கு.. வாஸ்து ரொம்ப அவசியம்.. யோகம் தரும் இல்லம் இப்படி இருக்கணும்
சென்னை: எப்போதுமே வீடு கட்டும்போது வாஸ்து பார்த்து கட்ட வேண்டும் என்பார்கள்.. பஞ்சபூதங்களான காற்று, நீர், நெருப்பு, பூமி ., வானம் போன்றவை அனைத்துமே சமநிலையில் இருக்கும்போது, அந்த வீட்டில் அனைத்து செல்வங்களும் தங்கியிருக்கும் என்பது நம்பிக்கையாகும். அந்தவகையில், பஞ்சபூதங்களின் செய்யக்கூடாத தவறுகள் என்னென்ன? நிலம் அல்லது மனையை தேர்ந்தெடுக்கும்போது கவனிக்க வேண்டிய வடிவங்கள் என்னென்ன? சுருக்கமாக பார்ப்போம்.
எப்போதுமே நாம் நிலம் அல்லது மனையைத் தேர்வுசெய்யும்போது, அந்த இடத்தின் வடிவம் சீராக இருக்க வேண்டும்.. சீரற்ற நீள, அகலங்கள் இருந்தால், அதை கட்டிடத்தைக் கட்டும்போது பல சிக்கல்கள் எழலாம்.

சதுரமான அளவுகள்
எனவே, நீங்கள் வாங்க போகும் மனை, சதுரமான அளவுகளில் அமைந்திருப்பது முக்கியம். அதாவது நான்கு புறமும் சமமாக இருக்க வேண்டும். வடக்கு அல்லது தெற்குப் பார்த்து அமைந்த மனைகளில் வசிப்பவர்கள் மென்மையான போக்கை கொண்டிருப்பார்கள்.. கிழக்கு அல்லது மேற்குப் பார்த்த இடங்களில் வசிக்கக்கூடியவர்கள், ஆண் தன்மையுடன், கறார் தன்மையுடன் இருப்பார்களாம். பெரும்பாலும் இவர்கள் அரசுத்துறை அல்லது முக்கியப் புள்ளியாக இருப்பார்கள்.
செவ்வக வடிவமான மனை
அதேபோல, செவ்வக வடிவமான இடமும் சிறந்த இடமாகும்.. இருமடங்கு நீளமும், ஒரு மடங்கு அகலம் அல்லது இருமடங்கு அகலமும் ஒரு மடங்கு நீளமும் கொண்டவையாகும். கிழக்கு, மேற்கு நீளம் கொண்ட மனைகள் சிவத் தத்துவம் பொருந்திய ஆண் மனை என்றும், தெற்கு, வடக்கு நீளம் கொண்ட மனைகள் சக்தியின் அம்சம் என்றும் கருதப்படுகிறது. இதனால் ஆண், பெண் வெற்றிகள் இந்த வீட்டின் மனைகளை பொறுத்து அமையும்.
சதுரம், செவ்வகம் தவிர, வட்ட வடிவத்தில் மனைகளை தேர்ந்தெடுக்க கூடாது.. இதுபோன்ற மனைகளில் ஈசானி, அக்னி, வாயு, நிருதி மூலைகள் வடிவமைப்பில் வராமல், வளைந்து காணப்படும். இதனால் பஞ்சபூத சக்திகள் சமஅளவில் வீட்டிற்குள் பரவாது.. விளையாட்டு அரங்குகள், பூங்காக்கள், கோவில்கள், பொதுக்கட்டிடங்கள் போன்றவை வேண்டுமானால், வட்ட வடிவ மனைகளில் இருக்கலாமே தவிர, வீடுகள் அந்த வடிவத்தில் இருக்கக்கூடாது என்பார்கள்.
தெற்கு மேற்கு பகுதிகள்
மனை இடத்தின் தெருக்குத்து மற்றும் தெரு தாக்கம் இருக்கக்கூடாது. கட்டிடம் கட்டும்போது தெற்கு மற்றும் மேற்கு பகுதியைவிட வடக்கு மற்றும் கிழக்கு பகுதியில் அதிக காலியிடம் இருத்தல் வேண்டும். அதேபோல, வீட்டில் பூஜை அறை, வட கிழக்கு பகுதியில் இருக்க வேண்டும்.. கடவுள் படங்கள் கிழக்கு திசை நோக்கி பார்க்கும்படி வைக்க வேண்டும். விளக்குகள் கிழக்கு நோக்கி ஏற்ற வேண்டுமே தவிர, தெற்கு நோக்கி ஏற்றக்கூடாது..
அதேபோல, படுக்கை அறை., வீட்டின் தெற்கு அல்லது தென் மேற்கு திசையில் இருப்பது நல்லது... தென் கிழக்கு பகுதயை அக்னி மூலை என்பார்கள்.. எனவே, தென் கிழக்கு பகுதியில் கிச்சன் இருப்பது நல்லது.. அப்படியானால், சமைப்பவர்கள், கிழக்கு நோக்கி நின்று சமைக்க வேண்டும்.
ஈசானிய மூலை
வீட்டின் வடக்கு அல்லது கிழக்கு பகுதிகளில் பால்கனி அமையலாம். மழைநீர் ஈசானிய மூலை வழியாக வெளியேற வேண்டும். ஈசானிய மூலை நீண்டு இருந்தால் குடும்பத்துக்கு நல்லது. ஈசானிய மூலை காலியாக இருந்தால் பஞ்சபூத ஆற்றல் கிடைக்கும்..
வீட்டுக்கு தெற்கு, தென்மேற்கு, மேற்கு திசையில் மலை, குன்று இருப்பது நல்லது. வீட்டுக்கு வடக்கு, வடகிழக்கு, கிழக்கு திசையில் ஓடை, கால்வாய், ஏரி, ஆறு இருந்தால் நல்லது... மனையில் வீடு கட்டும்போது வடக்கு, வடகிழக்கு, கிழக்கு பகுதியில் கிணறு அல்லது பம்ப் அமைத்து தண்ணீர் எடுத்து பயன்படுத்தலாம்.. ஆனால், வீட்டின் நடுவிலோ அல்லது மற்ற திசைகளிலோ அமையும் கிணறு, பம்ப் கெடுதலையே தரும்.
வீட்டின் வடக்கு, கிழக்கு பகுதிகளில் அதிக கதவுகள், ஜன்னல்கள் இருக்க வேண்டும். ஆனால், அவைகள் இரட்டைப்படையில் இருக்கும்படி கவனிக்க வேண்டும் என அறிவுறுத்துகிறார்கள் வாஸ்து நிபுணர்கள்.
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
தமிழ்நாட்டுக்கு பெரிய அடி.. ஆந்திராவுக்கு கைமாறிய மசாகான் டாக் திட்டம்! தொழில் அமைச்சருக்கு சிக்கல்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
கும்கி படம் எடுத்த தேனி கொட்டக்குடி கிராமத்தின் 56 வருட கனவு.. நிறைவேற்றிய தமிழக அரசு -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி












Click it and Unblock the Notifications