அண்ணி, நாத்தனார் என 2 கர்ப்பிணிகள் ஒரே வீட்டில் இருக்கலாமா? கர்ப்பிணி குலதெய்வம் கோயிலுக்கு போகலாமா?
சென்னை: கர்ப்பிணிகள் கோயிலுக்கு செல்லலாமா? குலதெய்வ வழிபாடுகளை மேற்கொள்ளலாமா? இரண்டு கர்ப்பிணிகள் ஒரே வீட்டில் இருக்கலாமா? ஒரே வீட்டில் இருந்தால் என்ன ஆகும் ? இவைகளை பற்றியெல்லாம் சுருக்கமாக இங்கே நாம் தெரிந்து கொள்வோம்.
கர்ப்பிணிகள் குலதெய்வ கோயிலுக்கு போகலா? வேண்டாமா? என்பதில் நிறைய பேருக்கு சந்தேகம் எழும்.. இதுகுறித்து ஆன்மீக பெரியவர்கள் பல்வேறு விஷயங்களை அர்த்ததுடன் சொல்லி வைத்துள்ளனர்.

குலதெய்வ வழிபாடு: அந்தவகையில் கருவுற்ற முதல் மாதத்தில் குலதெய்வ வழிபாடு செய்யலாம். 2வது மாதத்தில் சூரியன் வழிபாடும், 3-வது மாதத்தில் சந்திரன் வழிபாடும், 3-வது மாதத்தில் சந்திரன் வழிபாடும், 4-வது மாதத்தில் செவ்வாய், 5-வது மாதத்தில் புதன், 6-வது மாதத்தில் குரு, 7-வது மாதத்தில் சுக்கிரன், 8-வது மாதத்தில் சனி வழிபாடும், 9வது மாதத்தில் மறுபடியும் குலதெய்வ வழிபாடும் செய்யலாம். ஆனால், கர்ப்ப காலத்தில் விரதம் இருப்பதை தவிர்க்கலாம்.
கர்ப்பிணிகள் கோவிலுக்கு செல்லக்கூடாது என்று அன்று முன்னோர்கள் சொல்லி வைத்தனர்.. காரணம், போக்குவரத்து வசதி இல்லாத அந்த காலகட்டங்களில் கோயில்களுக்கு நீண்ட தூரம் செல்ல வேண்டிவரும்..
கர்ப்பிணிகள்: சாலைகளும் சீரற்று குண்டும் குழியுமாக காணப்படும்,.. கோவில்கள் பெரும்பாலும், குன்றுகளிலும் மலையிலும் அமைந்திருக்கும். கர்ப்பிணிகள் அவ்வளவு தூரம் நடக்க வேண்டியிருந்ததாலும், கூட்டம் நிறைந்த இடங்களில் நோய் தொற்று ஏற்பட்டுவிடும் என்பதாலும், அல்லது ஏதாவது அசம்பாவிதங்கள் நடந்துவிடக்கூடாது என்பதற்காகவுமே கர்ப்பிணிகளை கோயில்களுக்கு செல்ல வேண்டாம் என்றார்களாம்.
ஆனால், இப்போது காலகட்டம் மாறி, வாகன வசதிகளும் பெருகி உள்ளதால், கர்ப்பிணிகள் தாராளமாக கோயிலுக்கு செல்லலாம்.. கர்ப்பிணி பெண்கள் எல்லா மாதமும் கோவிலுக்கு போகலாம் என்று சாஸ்திரங்களும் கூறுகின்றன. ஆனால், படிக்கட்டு அதிகமாக கோவில்கள், கூட்டம் இல்லாத இடத்தில் வழிபாடு செய்ய வேண்டும் என்று அறிவுறுத்துகிறார்கள்.
பிரதிஷ்டை: அதேபோல, பிரசித்தி பெற்ற கோவில்களில் சுவாமி சிலைக்கு அருகில் எந்திரங்களை பிரதிஷ்டை செய்திருப்பார்கள்.. இந்த எந்திரம் ஈர்ப்பு சக்தியை அதிகமாக கொண்டிருக்கும் என்பதால், இங்கே செல்ல வேண்டாம் என்றும் சிலர் சொல்வார்கள்.
அதேபோல, ஒரே வீட்டில் இரண்டு கர்ப்பிணிகள் இருக்க கூடாது என்பார்கள்.. அதாவது அவர்கள் அண்ணி, நாத்தனார் உறவுகளாக இருக்க கூடாது. காரணம், ஒருவருக்கு ஒருவர் முகத்தை பார்த்து கொள்ளும்போது, யாராவது ஒருவரின் குழந்தையின் ஆரோக்கியத்தில் பிரச்சனை ஏற்படுமாம். அதனால் 2 முறைகளில் உள்ளவர்கள் கர்ப்பமாக இருந்தால் ஒரே வீட்டில் இருப்பதை தவிர்க்க வேண்டும்.. ஆனால், அக்கா, தங்கை அல்லது வேறு உறவு முறையில் உள்ளவர்களை சந்தித்து கொள்ளலாம்.












Click it and Unblock the Notifications