கட்டுக்கட்டாய் பணம்.. 4 கோடிப்பே! காட்டூர் மாரியம்மனை பார்க்க திரண்ட கூட்டம்! அதென்ன தன அலங்காரம்?
கோவை: சித்திரை முதல் நாளை ஒட்டி, காட்டூர் அம்பால் முத்துமாரியம்மன் கோயிலில் ரூ.4 கோடி மதிப்பிலான ரூபாய் நோட்டுகள் மற்றும் தங்க நகைகளை வைத்து அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. கோவில் மூலஸ்தானம் முழுவதும் 100 ரூபாய், 200 ரூபாய் மற்றும் 500 ரூபாய் நோட்டுக்களால் அலங்கரிக்கபட்ட நிலையில், முத்துமாரி அம்மனுக்கு தங்க நகைகளால் தன அலங்காரம் செய்யப்பட்ட நிலையில், பக்தர்கள் நீண்ட நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.
சித்திரை ஒன்றாம் தேதியான இன்று தமிழகம் முழுவதும் உள்ள கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகிறது சித்திரை 1 தமிழ் புத்தாண்டாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில் ஒரு சிலர் தை ஒன்றுதான் தமிழ் புத்தாண்டு என கூறுகின்றனர்.
இது ஒரு புறம் இருக்க தமிழகம் முழுவதும் இன்று பல்வேறு கோவில்களில் சித்திரை முதல் நாளை முன்னிட்டு பக்தர்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. குறிப்பாக திருச்செந்தூர், பழனி, திருத்தணி உள்ளிட்ட முருகன் கோவில்களிலும் சமயபுரம் மாரியம்மன் கோவில் உள்ளிட்ட புகழ்பெற்ற அம்மன் கோவில்களிலும் பக்தர்கள் கூட்டம் வழக்கத்தை விட அதிகமாக இருந்தது.

பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு இருக்கும் நிலையில் பக்தர்கள் எண்ணிக்கை கட்டுக்கடங்காத அளவு இருந்தது. பெரும்பாலான கோவில்களில் ஒரு மணி நேரம் முதல் நான்கு மணி நேரம் வரை காத்திருந்து தரிசனம் செய்ய வேண்டிய நிலை இருந்தது. சிறப்பு அலங்காரத்தில் சுவாமிகள் பக்தர்களுக்கு காட்சியளித்தனர்.
அந்த வகையில் கோவையில் நான்கு கோடி ரூபாய் மதிப்பிலான ரூபாய் நோட்டுகள் மூலம் அம்மன் தரிசனம் நடைபெற்றது. கோவையில் சித்திரை முதல் நாளை முன்னிட்டு அனைத்து கோவில்களிலும் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. அந்த வகையில் புகழ்பெற்ற கோவை காட்டூர் பகுதியில் உள்ள முத்து மாரியம்மன் கோவிலில் தான் மாரியம்மன் நான்கு கோடி ரூபாய் மதிப்பிலான பணம் மற்றும் தங்க நகைகளால் அலங்காரம் செய்து வழிபாடு நடத்தப்பட்டது.
கோவில் மூலஸ்தானம் முழுவதும் 100 ரூபாய், 200 ரூபாய், மற்றும் ₹500 நோட்டுகளால் அலங்கரிக்கப்பட்டது. முத்துமாரியம்மன் தங்க நகைகளால் தன அலங்காரம் செய்யப்பட்டது. நான்கு கோடி ரூபாய் மதிப்புள்ள ரூபாய் நோட்டுகள் மற்றும் தங்க நகைகளுடன் தன அலங்காரத்தில் காட்சியளித்த முத்துமாரியம்மனை ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்து நின்று தரிசனம் செய்தனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
-
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
ஸ்டாலினின் எச்சரிக்கை.. பதறிப்போய் ஆளை தூக்கிய விஜய்.. பயத்தில் அவசர அவசரமாக வியூகம்.. நடந்தது என்ன? -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு!












Click it and Unblock the Notifications