மகாலட்சுமி அருளால் கடன் தொல்லை நீங்கி.. பண மழை கொட்டப் போகுது! உங்கள் வீட்டில் இதைப் பண்ணுங்க!
சென்னை: எட்டு வகை செல்வங்களை வாரி வழங்குபவள் மகாலட்சுமி. திருமகளின் அடையாளங்களான ஐந்து வகைப் பொருள்களை வீட்டில் வைத்து வழிபடுவதன் மூலம் கடன் தொல்லை நீக்கும், செல்வம் பெருகும், பண மழை கொட்டும். மகாலட்சுமி உங்களுடைய வீட்டில் நிரந்தரமாக வாசம் செய்ய என்னென்ன செய்ய வேண்டும் என்று தெரிந்து கொள்ளலாம் வாங்க..
மகாலட்சுமியை தனலட்சுமி, தான்யலட்சுமி, தைரியலட்சுமி, ஜெயலட்சுமி, வீரலட்சுமி, சந்தானலட்சுமி, கஜலட்சுமி, வித்யாலட்சுமி என எட்டு லட்சுமிகளாகப் பிரித்துள்ளனர். திருமகள் என்று அழைக்கப்படும் லட்சுமி மிகவும் பொறுமை மிக்கவள் என்றும், அனைவருக்கும் நன்மையே தருவாள் என்றும் அதர்வண வேதத்தில் கூறப்படுகிறது. நித்திய சுமங்கலியாக, மஞ்சள் பட்டுடுத்தி காட்சிதரும் லட்சுமி பெண்களுக்கு வரும் பிரச்சினைகளைப் போக்குபவதில் வல்லவள்.

லட்சுமியை அனுதினமும் மனதார வேண்டிவர சுமங்கலித்துவமும், செல்வ வளமும் பெருகும். இனிப்பு என்பது மகாலட்சுமிக்கு உகந்ததாகும். திருமணம் நடக்கும் இடங்கள், யாகசாலைகள் ஆகியன லட்சுமியின் இருப்பிடங்கள். எனவே, இந்த இடங்களுக்கு வருபவர்களுக்கு இனிப்பு வழங்குவதை முன்னோர்கள் வழக்கமாகக் கொண்டிருந்தனர். இதன் மூலம் வாழ்க்கை தித்திப்பாக அமையும் என்பது ஐதீகம்.
பால், தேன், தாமரை, தானியக் கதிர், நாணயங்கள் ஆகிய ஐந்தும் மகலாட்சுமியின் அடையாளங்கள் என்று ஞானநூல்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஐந்து பொருள்களும் இருக்கும் வீட்டில் லட்சுமி குடியேறி நிரந்தரமாக வாசம் செய்வாள். கடலில் இருந்து பிறந்த உப்பும் லட்சுமிக் கடாட்சம் நிறந்ததாகும். யானைகள், வில்வம், பசுக்கள் ஆகியவையும் திருமகளின் அருள் நிறைந்த செல்வங்களாகப் பார்க்கப்படுகின்றன. இந்தப் பொருள்கள் அனைத்தும் சுபிக்ஷத்தை பறைசாற்றுகின்றன.
திருமகளின் அடையாளங்களான இந்த ஐந்து பொருள்களையும் வீட்டில் வைத்து மகலாட்சுமியை வழிபட்டு வர கடன் தொல்லை நீங்கி, அந்த வீட்டில் சுபிக்ஷம் உண்டாகும். செல்வ வளம் பெருகும் என்று கூறப்படுகிறது. வீட்டில் தினந்தோறும் தீபங்களை ஏற்றி வழிபட்டு வர லட்சுமி கடாட்சம் உண்டாகும். லட்சுமி ஸ்தோத்திரத்தை தினமும் கூறி திருமகளை வழிபட்டால் உள்ளத்தில் எழுந்தருளுவாள் மகாலட்சுமி. இதன் வாயிலாக வாழ்க்கையில் இருந்த அனைத்துப் பிரச்னைகளும் நீங்கி சகல செல்வங்களும் பெற்று பெருவாழ்வு வாழலாம்.
லட்சுமி ஸ்தோத்திரம்: கமலவாஸின்யை நாராயண்யை நமோ நம. கிருஷ்ணப்பிரியாயை ஸததம் மஹாலஷ்ம்யை நமோ நம. பதம்பத்ரேக்ஷணாயை ச பத்மாஸ்யாயை நமோ நம. பத்மாஸனாயை பத்மின்யை வைஷ்ணவ்யை ச நமோ நம. எனும் திருமகள் ஸ்தோத்திரத்தை தினமும் கூறி வர மகலாட்சுமியின் அருள் கிட்டும்.
அதேபோல, மகலாட்சுமி அருளும் தலங்களை வழிபட்டு வந்தால் வளமான வாழ்க்கையைப் பெறலாம். சிவன் ஆலயங்களில் வடமேற்கில் மகலாட்சுமியின் சந்நிதி அமைந்திருக்கும். திருவையாறு ஐயாறப்பர் கோயிலில் திருமகளுக்கென தனி சிறு ஆலயமே உள்ளது. இவரது அருகிலேயே சரஸ்வதி சந்நிதியும் உள்ளது. இந்த ஆலயத்தில் முன் மண்டபத்தில் துர்கையும் உள்ளார். எனவே, முப்பெருந்தேவியையும் ஒன்றாக தரிசிக்கும் வாய்ப்பு இக்கோயிலில் உள்ளது.
வீட்டுக்கு வரும் உறவினர்களுக்கு மஞ்சள், குங்குமம், பூ போன்ற மங்கலப் பொருள்களை வழங்குவதன் மூலம் எதிர்மறையான எண்ணங்கள் தோன்றும் என்பதும் ஐதீகம்.
-
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’












Click it and Unblock the Notifications