வாஸ்து புருஷன் யாருன்னு தெரியுமா? ஒன்றரை மணி நேரம் தான் விழித்திருப்பார்.. வாஸ்து நாளில் மறக்காதீங்க
சென்னை: வாஸ்து புருஷனை வணங்குவதால், வீட்டிலுள்ள துர்சக்திகள் நீங்கும்.. மனை தொடர்பான சிக்கல்கள் தீரும்.. வாஸ்து பூஜை செய்வதற்கு எப்போதுமே வியாழக்கிழமை மிகவும் உகந்த நாள். இந்த நாளில் புதிய வீடு கட்ட வாஸ்து செய்ய, புதிய மனை வாங்க மிக விசேஷமானது. வீட்டை திருஷ்டி சுற்றி போட்டால் வீட்டில் இருக்கும் எதிர்மறை சக்திகள் நீங்கி நேர்மறை சக்திகள் அதிகரிக்கும் செல்வ வளம் பெருகும். முதலில் வாஸ்து புருஷன் எங்கிருந்து தோன்றினான்? திருஷ்டியை போக்க என்ன செய்ய வேண்டும்? இவைகளை பற்றி சுருக்கமாக பார்ப்போம்.
அண்டகாசுரன் என்ற அரக்கன், தான் செய்த தவத்தாலும் கிடைத்த வரத்தாலும் கர்வத்துடனும் மமதையுடனும் திரிந்தான். அத்துடன், தேவர்களையும் முனிவர் பெருமக்களையும் பாடாய் படுத்தி வந்தான்..

அரக்கனின் துன்புறுத்தலை தாங்க முடியாமல் கலங்கி போன தேவர்களும் முனிவர்களும் ஈசனிடம் ஓடினார்கள்.. அண்டகாசுரன் செய்யும் அக்கிரமத்தையும், அட்டகாசத்தையும் சொல்லி புலம்பினார்கள். இதையடுத்து, அவர்களது வேண்டுகோளை ஏற்ற சிவனார், அண்டகாசுரனுடன் போரிட்டார்.
மனித உருவம் - பூதம்
அப்போது பரமேஸ்வரனின் திருமுகத்தில் இருந்து வியர்வைத்துளியானது விழுந்தது. அந்த துளியில் இருந்து பிரமாண்டமான மனித உருவம் பூதம் போல் கிளம்பி வந்து நின்றது. அந்த உருவம் பசியால் தவித்தது.
பசிக்கிறதே பசிக்கிறதே என்று அரற்றிக்கொண்டே இருந்தது. அண்டகாசுரனை அழித்தொழித்தார் சிவனார், இந்த அரக்கனின் உடலைத் தின்று பசியைப் போக்கிக் கொள் என்றார்.. உடனே அரக்கனின் உடலை தின்றது அந்த உருவம். அப்போதும் பசி அடங்கவில்லை..
இதனால் அந்த பூத உருவம், தேவலோகம் சென்று பசிக்கிறதே என்று கத்தியது.. உணவு எதுவும் கிடைக்காத கண்ணில் பட்ட பொருட்களையெல்லாம் கீழே போட்டு உடைத்தது. தேவர்களையெல்லாம் மிரட்டியது. தேவர்கள் எல்லோரும் சேர்ந்த அந்த உருவத்தைக் கீழே தள்ளினார்கள். தேவலோகத்தில் இருந்த 53 தேவதைகள் குப்புறக்கிடந்த உருவத்தின் மீது ஏறி உட்கார்ந்து கொண்டார்கள்.. இதனால் மேலும் துடித்துடித்துப்போனது அந்த பூத உருவம்.
எப்படியாவது தேவதைகளிடம் இருந்து தன்னை காப்பாற்றுங்கள் என்று பிரம்மாவிடம் பிரார்த்தனை செய்தது.. உடனே படைப்புக்கடவுளான பிரம்மா, மனமிறங்கினார்..
ஹோமம் பொருட்கள்
"பூமியில் பிராமணர்கள் செய்யும் வைவஸ்த ஹோமத்தில் கொடுக்கும் பொருட்களை உன் பசியை போக்கிக் கொள்.. பூமியில் வீடு கட்டுபவர்கள் உனக்கு ஹோமம் செய்வார்கள். வாஸ்து பூஜை செய்வார்கள். அதை நீ சாப்பிட்டுக் கொள்" என்று கூறி, அந்த பூத உருவத்துக்கு பதவியையும் தந்தார்..
அதுமட்டுமல்ல, பூமியின் மீது புதிதாக கட்டிடம் கட்டுபவர்கள் யாராக இருந்தாலும் உன்னை வணங்கியே துவங்க வேண்டும். மனையில் குடியிருப்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்களும் உன்னை வணங்க வேண்டும். அவர்களுக்கு உன் சக்தியை, அருளை தந்து காப்பாயாக என்று அருளினார்.
வாஸ்து புருஷன் - மனையின் தலைவன்
பிரம்மாவும் மற்றவர்களும் அந்த உருவத்துக்கு, வாஸ்து புருஷன் என்று பெயரிட்டனர்... வாஸ்து புருஷன் என்றால், மனையின் தலைவன் என்று அர்த்தமாம்.. அப்போதிருந்து வீடு, மனை என அனைத்துக்குமே வாஸ்து புருஷனே கடவுளாக திகழ்ந்து வருகிறார் என்று புராணங்கள் கூறுகின்றன.
வாஸ்து என்பவர் வருடத்துக்கு 8 முறை மட்டுமே கண்விழிப்பாராம்.. அதுவும் ஒன்றரை மணி நேரம் மட்டுமே விழித்திருப்பாராம்.. ஒவ்வொரு முறை வாஸ்து புருஷன் கண்விழிக்கும் தருணங்களில் மட்டுமே வீடு கட்டும் பணியை துவங்க வேண்டும்.. இதைத்தான் வாஸ்துநாள், வாஸ்து நேரம் என்கிறார்கள் ஜோதிட வல்லுநர்கள்.
எனவே, வாஸ்து புருஷன் என்பவர் கட்டிடங்கள் கட்டப்படும் நிலத்தின் உயிர்ப்பு சக்தியாகக் கருதப்படும் ஒரு தெய்வீக உருவமாகும்.. பிரம்மாவிடம் இருந்து தோன்றியவர் என்றும், கட்டிட நிலத்தை ஆக்கிரமிக்கும் தேவதைகளை நீக்குபவர் என்றும் நம்பப்படுவதால்தான், வாஸ்து புருஷனை வணங்க சொல்கிறார்கள்.
மனை தொடர்பான பிரச்சனைகள்
ஒன்பது கட்டிடங்களில் கால்களை நீட்டிக்கொண்டு வாஸ்து மண்டலத்தில் படுத்தபடி காட்சி தருவார் வாஸ்து பகவான்.. இந்தப் படத்தை, பூஜையறையில் வைத்து வழிபட்டு வந்தால், பூமி சம்பந்தமான பிரச்சனைகள் விரைவில் நீங்கும் என்பது நம்பிக்கையாகும்..
அதுமட்டுமல்ல, வாஸ்து புருஷனை வணங்கி வந்தால், வீட்டிலுள்ள திருஷ்டிகள் நீங்கும்.. வீடு கட்டியிருப்பதில் ஏதாவது குறைபாடுகள் என்றாலும், வாஸ்து புருஷனை தொடர்ந்து வழிபட்டு வந்தால், குடும்பத்தில் சகல செளபாக்கியங்களும் உண்டாகும்.. துர்சக்திகள், துர்தேவதைகளை துரத்தி வாஸ்து புருஷனும் உங்களுக்கு அருள் புரிவார் வாஸ்து புருஷன்.
வாஸ்து குறை - திருஷ்டி
வீட்டிலுள்ள துஷ்ட சக்திகள், எதிர்மறை எண்ணங்கள் நீங்கி வீட்டில் சுபிட்சம் ஏற்பட, வாஸ்து நாள் என குறிப்பிடப்பட்டுள்ள நாட்களில் வீட்டை திருஷ்டி சுற்றி போடுவதால் தீமை நீங்கி நன்மை உண்டாகும்.
தேங்காய், எலுமிச்சை அல்லது பூசணிக்காய் வைத்து வீட்டை திருஷ்டி கழிக்கலாம் அல்லது ஒரு கற்பூரத்தால் வீட்டை திருஷ்டி கழித்து வீட்டின் வாசல் முன்பு கொளுத்தலாம்..
வீட்டில் வாஸ்து குறை இருந்தால் இந்த மந்திரத்தை தினமும் 12 முறை உச்சரிக்க பாதிப்பு நீங்கி நலம் உண்டாகும்.. அதேபோல, வெள்ளிக்கிழமைகளில் பசுவின் கோமியம் தெளிக்கலாம். தண்ணீரில் மஞ்சள், கல் உப்பு கலந்து வீட்டை சுற்றியும், வீட்டின் உள்ளேயும் வெளிப்புறத்திலும் தெளிக்கலாம்.
வாஸ்து குறை நீக்கும் ஸ்லோகம்
ஓம் வாஸ்து புருஷாய நம:
ஓம் ரத்தலோசனாய நம:
ஓம் க்ருஷ்யாங்காய நம:
ஓம் மஹா காயாய நம:
-
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா?












Click it and Unblock the Notifications