ஆட்சி மாற்றம் ஏற்படும்! அரசியல் கட்சிகளில் அணிமாற்றம்! விசுவாவசு வாக்கிய பஞ்சாங்கத்தில் அதிர்ச்சி

Subscribe to Oneindia Tamil

மதுரை: நாட்டில் ஆட்சி மாற்றம், பதவி மாற்றம் ஏற்படும், தங்கம் நகை வியாபாரம் அதிகரிக்கும் என மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் விசுவாவசு வாக்கிய பஞ்சாங்கம் வாசித்த போது தெரிவிக்கப்பட்டது.

தமிழ் புத்தாண்டையொட்டி நேற்றைய தினம் மதியம் 12.30 மணிக்கு மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் சிறப்பு பூஜை முடிந்தது. கோயிலின் ஸ்தானிக் பட்டர் ஹாலஸ் வாக்கிய பஞ்சாங்கத்தை பக்தர்கள் முன்னிலையில் வாசித்தார்.

panchangam

அதில் விசுவாவசு ஆண்டில் விவசாயம் செழிக்கும். தங்க நகை வியாபாரம் அதிகரிக்கும். நாட்டில் பதவி மாற்றம், ஆட்சி மாற்றம் ஏற்பட வாய்ப்புள்ளது. புதிய வரிவிதிப்பின் மூலம் விலைவாசி உயரும். அதனால் நாட்டில் போராட்டங்கள் ஏற்பட்டு அரசியல்வாதிகளால் அணி மாற்றம் ஏற்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

ராமநாதஸ்வாமி கோயில்

மேலும் ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் உள்ள புண்ணிய ஷேத்திரமான ராமநாதசுவாமி கோயிலில் சிறப்பு பூஜை முடிந்தது. அப்போது கோயில் குருக்கள் சிவமணி புதிய வருடத்திற்கான பஞ்சாங்கத்தை வாசித்தார்.

அன்னிய முதலீடு

இதில் ஏப்ரல் 14, 2025 ஆம் ஆண்டு முதல் ஏப்ரல் 13, 2026 வரை உள்ள முக்கிய விஷயங்கள் குறித்து வாசித்தார். அப்போது அவர் வாசிக்கையில், மருத்துவத்தில் இந்தியா முதலிடம் வகிக்கும். அந்நிய நாடுகளின் முதலீடுகளின் அதிக அளவில் இந்தியாவுக்கு வரும்.

தங்கம் உச்சம் தொடும்

தங்கம், வெள்ளி விலை தற்போது உச்சத்தை தொட்டு வரும் நிலையில் இவை மேலும் உச்சத்தை தொடும். அது போல் மருந்து மாத்திரைகளின் விலையும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. நிலக்கரி, இரும்பு, பெட்ரோலிய கிணறுகளில் விபத்துகள் ஏற்பட வாய்ப்புகள் அதிகம்.

ஆன்லைன் வர்த்தகம்

ரத்தம் சம்பந்தப்பட்ட புதிய நோய்கள் வெளிநாடுகளில் இருந்து இந்தியாவுக்கு பரவ வாய்ப்புள்ளது. உலக அளவில் புதிய நோய் தாக்கும் அபாயம் உள்ளது. இந்த ஆண்டு பருவமழை அதிகமாக இருக்கும். விவசாயம் செழிக்கும். ஆன்லைன் வர்த்தம் அதிகரிக்கும்.

இந்திய எல்லையில் பதற்றம்

அரசியல் கட்சித் தலைவர்களின் நற்பெயருக்கு களங்கம் ஏற்பட வாய்ப்புள்ளது. ரியல் எஸ்டேட் துறை பின்னடைவை சந்திக்கும். மின்சார கட்டணம் உயரும். பொதுமக்களிடையே பணப்புழக்கம் குறையும். இந்திய எல்லையில் பதற்றம் இருக்கும்.

மதகலவரம்

உலகில் ஆங்காங்கே மத கலவரம், போர் மூளும் அபாயம் இருக்கிறது என குறிப்பிடப்பட்டுள்ளது. திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலிலும் பஞ்சாங்கம் வாசிக்கப்பட்டது. மேலும் பல்வேறு கோயில்களில் பஞ்சாங்கம் வாசிக்கப்பட்டது. அதில் பல்வேறு தகவல்கள் தெரிவிக்கப்பட்டன. சித்திரை 1 திங்கள்கிழமை பிறந்ததால் தண்ணீர் பஞ்சம் இருக்காது. வெங்காயம், தக்காளி, பூண்டு, ஏலக்காய், தேங்காய், மாங்காய், புளி உள்ளிட்டவைகளின் விலை உயரும், ஆந்திரா, ஒடிஸா கடலோர பகுதிகளில் சூறாவளி காற்றுடன் கனமழை பெய்யும். தனுஷ்கோடியில் புயல் வீசும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

2019 இல் பலித்தது

கடந்த 2019ஆம் ஆண்டு வாக்கிய பஞ்சாங்கமானது மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் படிக்கப்பட்டது. அப்போது 2020 இல் மோசமான பாதிப்புகள் ஏற்படும் என சொல்லப்பட்டது. அதன்படி கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. அதே போல் அந்த ஆண்டு மழை அதிகம் இருக்காது என்றும் மக்கள் சம்பாதிக்க வழியின்றி இருப்பதை விற்று உண்ண வேண்டி வரும் என கணிக்கப்பட்டது. அதன்படி கொரோனாவால் பலருக்கு வேலை இழப்பு ஏற்பட்டது. இதனால் பணம் சம்பாதிக்க முடியாமல் பலர் தங்கள் வீடு, வாசலை விற்று பிழைப்பை நடத்தினர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+