திருப்பதி ஏழுமலையானுக்கு அபிஷேக பொருட்களை கொடுக்கும் கிராமம்! யாருமே செல்ல முடியாத மர்மம்!
திருப்பதி: திருப்பதி ஏழுமலையானுக்கு தினந்தோறும் சமர்ப்பிக்கப்படும் அபிஷேக பொருட்கள் அருகில் உள்ள கிராமத்திலிருந்து கொண்டு வரப்படுகிறது. ஆனால் அந்த கிராமத்தின் பெயர் என்னவென தெரியவில்லை. இது ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது.
மேலும் அந்த கிராமத்திற்கு அங்கிருப்பவர்களை தவிர வேறு யாரும் வெளியாட்கள் செல்ல அனுமதி கிடையாது என்கிறார்கள். இது மிகச் சிறிய கிராமமாக இருந்தாலும் அதை யாருமே பார்த்ததில்லையாம். எத்தனை அற்புதம் பாருங்கள்.

திருப்பதி ஏழுமலையான் என்றாலே அற்புதங்களை நிகழ்த்துபவர் என்று பொருள். அந்த வகையில் திருப்பதி கோயிலில் பல்வேறு அதிசயங்கள் நடந்து வருகின்றன. அதாவது திருப்பதி ஏழுமலையான் கர்ப்ப கிரகத்தில் ஓரமாக இருக்கிறார். ஆனால் நாம் பார்ப்பதற்கு கருவறையின் மைய பகுதியில் இருப்பதாக தெரியும்.
அது போல் பெருமாளின் சிலையில் இருப்பது அச்சு அசலான முடி. இது எப்படி வந்தது என்றே இன்னும் நிறைய பேருக்கு தெரியவில்லை. அது போல் பெருமாளின் சிலையில் எங்கு காது வைத்து கேட்டாலும் ஓயாத அலை ஓசை கேட்கும். இது நம்ப முடியாததாக இருந்தாலும் இது உண்மை என்கிறார்கள்.
பெருமாளுக்கு முன் மண் விளக்கு ஒன்று எப்போதும் எரிந்து கொண்டே இருக்கும். இது யார் எப்போது ஏற்றி வைத்தார்கள் என்று யாருக்கே தெரியாது. ஆனாலும் அது பாட்டுக்கு எரிந்து கொண்டே இருக்கிறது. 19ஆம் நூற்றாண்டில் பெருமாளே திருப்பதிக்கு நேரில் வந்தாராம். திருப்பதியை ஆண்ட மன்னர் ஒருவர் கொடூர குற்றம் புரிந்து 12 பேருக்கு மரண தண்டனையை விதித்தாராம்.
அந்த 12 பேரும் மன்னரின் உத்தரவின் பேரில் தூக்கில் தொங்கவிடப்பட்டனர். இதையடுத்து அந்த சடலங்கள் வெங்கடேஸ்வர சுவாமி கோயிலில் சுவற்றில் தொங்கவிடப்பட்டது. அப்போது பெருமாள் நேரில் தோன்றினார் என்கிறார்கள். அது போல் திருப்பதி ஏழுமலையான் சிலைக்கு பின்னால் எப்போதும் ஈரப்பதம் இருந்துக் கொண்டே இருக்குமாம்.
இதை உலர வைக்க பட்டாச்சாரியர்கள் என்னென்னவோ செய்து பார்த்தனர். ஆனாலும் ஈரப்பதத்தை அகற்ற முடியவில்லையாம். அது போல் திருப்பதி கோயில் விதிகளின்படி காலை, மாலைகளில் சாற்றப்பட்ட மாலைகளை கர்ப்ப கிரகத்திற்கு வெளியே எடுத்து வரக் கூடாது. இதனால் அந்த மாலைகள் பின்னால் இருக்கும் நீரோடையில் சேர்த்துவிடுகிறார்கள். இந்த மாலைகள் திருப்பதியில் இருந்து 20 கி.மீ. தொலைவில் உள்ள வேர்பேடு என்ற இடத்தில் தேங்கி நிற்பதை காண முடியும்.
எல்லாவற்றுக்கும் மேல் திருப்பதி ஏழுமலையானுக்கு மலர்கள், வெண்ணெய், பால், தயிர், துளசி உள்ளிட்ட பொருட்கள் அனைத்தும் ஒரு குறிப்பிட்ட கிராமத்தில் இருந்து மட்டுமே கிடைக்கின்றன. திருப்பதி அருகில் உள்ள இந்த கிராமம் மிகவும் பாதுகாக்கப்பட்டது. சிறிய கிராமத்தை இதுவரை யாரும் பார்த்ததில்லை. அந்த கிராமத்தில் இருப்பவர்கள் தவிர வேறு வெளியாட்கள் யாரும் அங்கு சென்றது கிடையாதாம். அந்த கிராமத்தின் பெயர், விவரங்கள் கூட யாருக்கும் தெரியாதாம்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications