வாசலில் வலம்புரிச் சங்கு இருக்கா? வீட்டில் திருஷ்டி நீங்கி பணம் வரும்.. வலம்புரி சங்கை பெண் தொடலாமா?
சென்னை: வலம்புரி சங்குகள் ஆன்மீகத்தில் முக்கிய இடத்தை பிடிக்க என்ன காரணம் தெரியுமா? வலம்புரி சங்குகள் குறித்து வாஸ்து சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ள அம்சங்கள் என்னென்ன தெரியுமா?
மும்மூர்த்திகளில் காக்கும் கடவுளாக திகழ்பவர் மகா விஷ்ணு... இவரது அம்சமாக திகழ்வது வலம்புரி சங்கு. இந்த வலம்புரி சங்கானது, ஐஸ்வர்ய லட்சுமியின் அம்சமாக போற்றப்படுகிறது. இந்தச்சங்கை காதில் வைத்துக்கேட்டால் "ஓம்" என்ற சப்தம் கேட்கும்.

கடலில் வாழும் உயிரினங்களில் கிளிஞ்சல் வகை புழுக்கள் தனக்கு பாதுகாப்பிற்காக கட்டிக் கொள்ளும் மேல் கவசம்தான் சங்கு...
சங்குகளிலேயே வலம்புரி சங்குதான் அபூர்வமானதும், சிறப்பானதும் ஆகும். இந்த சங்குகள் பொங்கும் கடலில் இருந்து எடுக்கப்படுகிறது.
முன்னோர்கள்: தூய்மையான வெண்மை நிறத்துடன், நீண்டு மூன்றில் ஒருபங்கு நீளத்தில் வாலும், தலைப்பாகத்தில் ஏழு சுற்றும் அமைந்து சங்கின் சுற்றளவு அடிமுடி நீளத்திற்கு சமமாக இருக்கும். இந்த சங்கினை, தங்கள் வீட்டின் வாசலில் சங்கு பதிப்பதை நம்முடைய முன்னோர்கள் வழக்கமாக கொண்டிருந்தனர்.
இதற்கு காரணம், வலம்புரி சங்கினை வாசலில் பதிக்கும்போது, துஷ்ட சக்திகள் வீட்டிற்குள் வராது.. திருஷ்டி தோஷம் ஏற்படாது. குடும்பத்திலுள்ளவர்களுக்கு திருஷ்டி இருந்தாலும் நீங்கிவிடும். வீட்டிற்குள் கெட்ட சக்திகள் அண்டாது என்பதெல்லாம் ஐதீகம்.
மகாலட்சுமி: அந்த காலத்தில் வசதி படைத்தவர்கள், வீடு கட்டும்போது, 5 வெள்ளிக்கிழமைகளில் மகாலட்சுமிக்கு உரிய வசிய பூஜை செய்த வலம்புரி சங்கை, வீட்டின் கதவு நிலைக்கருகில் வாசற்படியில் பதித்து விடுவார்கள். இதனால் வீட்டில் செல்வம் வற்றாது என்பது நம்பிக்கையாகும்.
பொதுவாக, நுண் கிருமிகளை அழிக்கும் திறன் கொண்டவை சங்குகள்.. வெளியிலிருந்து வரும் காற்று சங்கின் ஊது துவாரம் வழியாக சென்று, சங்கின் உள்ளே கிருமிகள் அழிக்கப்பட்டு சுத்தமான காற்றாக வீட்டுக்குள்ளே அனுப்பிவிடும். அதனால்தான், வாசற்படியிலேயே இந்த சங்கு ஓரளவு வெளியே தெரியும்படி பதித்து வைத்திருந்தார்கள்..
புதுமனைகள்: எனவே புதுமனைகளிலும், வியாபாரம் செய்யும் இடங்களிலும், இந்த சங்கினை பதித்து வைத்தால், கண் திருஷ்டிகள் நீங்கும். வலம்புரி சங்கு வழிபாடு செய்து வந்தால், திருமண தடையும் நீங்கும் என்பார்கள்.
அதேபோல, பூஜையறைகளில் இந்த வலம்புரி சங்கை வைத்திருந்தால், அடிக்கடி மஞ்சள் நீரில் கழுவி சுத்தம் செய்ய வேண்டும். இந்த சங்கிற்கு மஞ்சள், சந்தனம், குங்குமம், பூக்கள் கொண்டு அலங்கரித்து பீடத்தின் மீது வைத்தால் போதும். கடன் தொல்லை நீங்கி, தடையின்றி செல்வம் பெருகும்..
சங்கு பூஜைகள்: வெள்ளிக்கிழமையில் வாழையிலையில் சிறிது அரிசியை பரப்பி, அதன்மீது சங்கு வைத்து, வைத்து சந்தனம், குங்குமம், பூக்கள் கொண்டு அலங்காரம் செய்து, பிரார்த்தனை செய்யலாம்.. லட்சுமி அஷ்டோத்திரமும் சொல்லலாம். அதேபோல, துளசி தீர்த்தத்தை இந்த சங்கில் நிரப்பி, வெள்ளிக்கிழமைகளில் வீடு முழுக்க தெளித்து வந்தால், தோஷங்கள் நீங்கிவிடும்.. அதேபோல, வலம்புரி சங்கில், துளிசி நீரை சேர்த்து, அதை குடித்து வந்தால் உடலுக்கு மிகவும் நல்லது.
எப்போதுமே வலம்புரி சங்கினை தரையில் வைக்கக்கூடாது.. மேலும், இறைச்சி சாப்பிட்ட அன்றும், பெண்கள் மாதவிலக்கான நாட்களிலும் வலம்புரிச்சங்கைத்தொடக்கூடாது என்பார்கள்..












Click it and Unblock the Notifications