சமையலறையில் இதை மட்டும் பெண்கள் செய்யாதீங்க.. வறுமை வந்துடும்.. பாத்திரம் கழுவறீங்களா? இதை கவனியுங்க
சென்னை: சமையலறையில் சில விஷயங்களை தெரிந்தோ, தெரியாமலோ நாம் செய்வதால் வறுமையில் சிக்கிவிடுகிறோம்.. எனவே, சில பொருட்களின் மீதும், சில விஷயங்கள் மீதும் கூடுதல் கவனம் செலுத்தினாலேபோதும்.. குடும்பத்தில் மகிழ்ச்சி தழைக்கும் என்பார்கள்.
கிழக்கு பகுதியில் சமையலறை வரக்கூடாது வாழ்க்கையில் ஏற்றத்தாழ்வுகள் ஏற்படும் என்பார்கள்.. அதனால் தென்கிழக்குதான் சமையலறைக்கு சரியான இடம். தென்மேற்கிலும், வடகிழக்கிலும் சமையலறை இருந்தால், குடும்பத்தில் வறுமை பிடித்துவிடும்.

வடகிழக்கு: பாத்திரம் கழுவும் குழாய் வடகிழக்கில் அமைப்பது நல்லது. இல்லாவிட்டால் பெண்களுக்கு ஆரோக்கிய குறைபாடு ஏற்படும். வடகிழக்கில் சமையலறை வைத்தால் குடும்பத்தின் பொருளாதார நிலை பாதிக்கும். ஒருவேளை தவறான சமையல் அறை அமைப்பில் குடியிருக்க நேர்ந்தால், ஏழைகளுக்கு அன்னதானம் கொடுக்கலாம். இதனால் குடும்பத்தில் வறுமை ஏற்படாது.
சூரிய வெளிச்சம் சமையலறைக்குள் விழும்படியாக இருக்க வேண்டும். அதாவது, சமையலறை ஜன்னல் கிழக்கு திசையில் இருக்க வேண்டும். உடைந்த பொருட்கள், நசுங்கிய பாத்திரங்கள், உடைந்த கண்ணாடி, மருந்துகள், குப்பைகள், தண்ணீர் சிந்தும் குழாய்கள், போன்றவை கிச்சனில் வைத்திருந்தால், பணக்கஷ்டம் வரும்.
உப்பு, அரிசி: உப்பு, அரிசி, பருப்பு, புளி போன்ற பொருட்கள் கொஞ்சமாவது வைத்திருக்க வேண்டும். முக்கியமாக வெள்ளிக்கிழமைகளில் இந்த பாத்திரங்கள் காலியாக இருக்கக்கூடாது. அடுப்பு, உப்பு ஜாடி, அஞ்சறைப் பெட்டி, அரிசி கொட்டி வைத்திருக்கும் பாத்திரம், அரிவாள்மனை, கத்தி போன்றவை எப்போதும் கழுவி சுத்தமாகவே இருக்க வேண்டும்.
இரவு சமையல் முடிந்ததும், அடுப்பு மேடையையும் கழுவி விட வேண்டும். அதேபோல, சமையலறையில் கருப்பு நிறத்தைப் பயன்படுத்துவது அசுபமானது என்று வாஸ்து விதிகள் சொல்கின்றன.. அதற்கு பதிலாக, பச்சை, ஆரஞ்சு மற்றும் சிவப்பு போன்ற பிரகாசமான வண்ணங்களை பயன்படுத்தலாம்.
மார்பிள் ஓடுகள்: அதேபோல, சமையலறையில் ஸ்கை ப்ளூ அல்லது நீல நிற மார்பிள் ஓடுகளை தவறுதலாக பயன்படுத்த வேண்டாம்... சமையலறையில் அதிக தண்ணீர் வரவும் கூடாது.. கிச்சனில் பாத்திரங்களை கழுவாமல் இருந்தால் நல்லது.. பாத்திரங்களை கழுவுவதற்கென்றே ஒரு தனி இடத்தை ஒதுக்க வேண்டுமாம்.
பெண்கள் கிச்சனில் சமைக்கும்போது, அடிக்கடி டேஸ்ட் பார்க்கக்கூடாதாம்.. இது அன்னபூர்ணாதேவிக்கு கோபத்தை உண்டுபண்ணுமாம்.. எப்போதுமே பெண்கள் குளித்துவிட்டு சுத்தம் செய்தபிறகே சமையலறைக்குள் நுழைய வேண்டும்.. குறிப்பாக, அழுக்கு ஆடைகளுடன் அல்லது குளிக்காமல் சமையலறைக்குள் நுழையவே கூடாது. அதேபோல, கிச்சனில் சமைக்காமல் இருக்கக்கூடாது.. தினமும் ஏதாவது சமைத்து சாப்பிட வேண்டும்.
அடுக்குகள்: தண்ணீர் குடம், வாட்டர் ப்யூரிஃபையர் போன்ற கருவிகளை வடகிழக்கு திசையில் அமைக்கலாம்.. எப்போதும் சமைத்த உணவுகளை அடுப்பிற்கு வலது புறத்திலேயே வைக்க வேண்டும். காரணம், அன்னபூரணி வாசம் செய்யும் திசை இதுவாகும்.. சமையல் பொருட்கள் சேமித்து வைக்கும் அடுக்குகள், சமையல் அறையின் மேற்கு அல்லது தெற்கு பக்கம் உள்ள சுவற்றில் அமைப்பது சிறப்பானதாகும்.
நெருப்பு தொடர்பான வீட்டு உபயோக பொருட்களை தென் மேற்கு திசையில் வைத்துவிட்டு, சமையல் செய்பவர் கிழக்கு நோக்கி நின்று சமையல் செய்ய வேண்டும். நடுநிலை திசையான மேற்கு நோக்கியும் நின்று சமைக்கலாம். அதேபோல, மளிகை பொருட்களை செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் நிறைந்து இருக்கும்படி பார்த்து கொள்ள வேண்டும்
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications