வாஸ்து டிப்ஸ்.. உங்க வீட்டில் பணம் நிரந்தரமாக தங்கணுமா? செல்வம் செழிக்கணுமா? அப்ப இதை ட்ரை பண்ணுங்க
சென்னை: வீட்டுக்குள் செல்வம் கொழிக்க வேண்டுமானால், ஒரு சில செடிகளை வளர்க்க வேண்டும் என்பார்கள்.. இதற்கு அறிவியல் காரணமும் உண்டு.. ஆன்மீக காரணமும் உண்டு. அந்த செடிகள் என்னென்ன தெரியுமா?
பெரும்பாலும், வீடுகளில் பணம் செழிக்க வேண்டுமானாலோ அல்லது பணம் தங்கியிருக்க வேண்டும் என்றாலோ முக்கிய வாஸ்து செடிகளை வீடுகளில் வளர்ப்பது பெருகி வருகிறது.

சுத்தமான காற்று: பொதுவாக, மரம், செடிகள் நம்முடைய வீட்டை சுற்றி இருப்பது மிகப்பெரிய ஆரோக்கியம்.. அதிக ஆக்சிஜன் உற்பத்தி செய்து தரும் மலர்களையும், செடிகளையும் இப்படி வளர்க்கலாம்.. இவைகள் அதிக ஆக்சிஜன் வழங்குவதுடன், மாசுபடும் துகள்களை சிலவகை செடிகள் கவர்ந்து அழித்து விடும். இதனால் சுற்றுப்புறச்சூழலும் மாசுபடாமல் இருக்கும்.
அதேபோல, வீடுகளுக்குள்ளும் சிலவகையான செடிகளை வளர்க்கலாம்.. சில செடிகளை வீட்டில் வளர்த்தால், அது வீட்டில் பிரச்சனைகளையும், இழப்பையும் ஏற்படுத்தும். அதே சமயம் சில செடிகளை வளர்ப்பதன் மூலம் சுற்றுச்சூழல் நன்றாக இருப்பதுடன், பாசிட்டிவ் எனர்ஜியும் பெருகிவிடும்.
மணி பிளான்ட்: உதாரணத்துக்கு மணி பிளான்ட்டை எடுத்துக் கொண்டால், காற்றில் உள்ள கார்பன் மோனாக்சைடு, ஃபார்மாடிகைடு, பென்சைன் போன்ற நச்சுக்களை ஈர்த்துக்கொண்டு, ஆக்சிஜனை வெளியிடும். டிவி, செல்போன் போன்ற எலக்ட்ரானிக் பொருட்களில் இருந்து வெளியாகும் கதிர்வீச்சுக்களையும் இந்த செடி கிரகித்து கொள்கிறது.
தென்கிழக்கு திசையில் மணி பிளான்ட்களை வைத்தால், கடன் பிரச்சனைகள் தீருவதுடன், செல்வம் வந்து சேரும் என்றும் கூறுகிறார்கள். வடக்கு திசையில் மட்டும் இந்த செடியை வைக்கக் கூடாதாம்.
மல்லிப்பூ: பணத்தை அதிகரிக்கும் மங்களகரமான செடியாக மல்லிகை செடியையும் கருதுகிறார்கள்.. வாஸ்துப்படி, வீட்டு வாசலில் மல்லிகை செடியை வைத்து வளர்ப்பது மிகவும் நன்மைதரக் கூடியதாம்..
எங்கெல்லாம் நல்ல வாசனை உள்ளதோ, அங்கெல்லாம் லட்சுமி தேவி வாசம் செய்வதாக நம்பப்படுகிறது.. எனவே மல்லிகை செடியை வாசலில் வைத்தால், அது வீட்டில் அதிர்ஷ்டம் கொட்டுவதுடன், நேர்மறையான ஆற்றலை அதிகரிக்க செய்து, செல்வத்தையும் பெருக்குவதாக நம்பப்படுகிறது.
தொட்டால்சிணுங்கி: வாஸ்துப்படி, தொட்டால் சிணுங்கியும் அதிர்ஷ்டமான செடியாக விளங்குகிறது. இந்த செடியை வாடிவிடாமல், தினமும் தண்ணீர் ஊற்றி பராமரிக்க வேண்டுமாம்.. இதனால், ராகு தோஷம் நீங்கும் என்பார்கள். அதேபோல, விஷ்ணு மற்றும் சிவனை நினைத்து வழிபடுவதற்காகவே வளர்க்கப்படும் செடி சங்குப்பூ செடி.. அதிலும் நீல நிற சங்குப்பூ செடி என்றால், அதை கட்டாயம் வீட்டில் வளர்ப்பார்கள். இதனால் குடும்பத்தில் மகிழ்ச்சி, ஒற்றுமை பெருகுமாம்.
வீட்டை சுற்றிலும் துளசி செடிகளை வைக்கலாம். லட்சுமிதேவிக்குரியதாகவே துளசி செடி கருதப்படுகிறது.. எனவே, வீட்டு முற்றத்தில் துளசி செடிகளை வைக்க வேண்டும்.. இதனால், குடும்பத்தில் மகிழ்ச்சியும், வளமும் பெருகும் என்று நம்பப்படுகிறது. துளசியின் மணம் வீட்டை நிரப்பி கொண்டேயிருக்கும்.. பாசிட்டிவ் ஆற்றலும் வீட்டுக்கு கிடைத்துக் கொண்டேயிருக்கும்.
கருப்பு ஊமம்: கருப்பு அல்லது வைலட் கலர் ஊமத்தை செடியையும் வீடுகளில் வளர்க்கலாம். இந்த செடி, சிவனுக்கு உரியதாக நம்பப்படுகிறது. எனவே, பாலாபிஷேகம் செய்து, துளசி செடியை போலவே இந்த செடிகளையும் வணங்கி வரலாம். இதனால், பண வரவு கிடைப்பதுடன், பித்ரு தோஷங்களிலிருந்தும் விடுபடலாம் என்கிறார்கள்.
பாம்பு செடி வீட்டில் வளர்த்தாலும், செல்வமும், ஆரோக்கியமும் கிடைக்குமாம். இந்த செடிகளை படிக்கும் அறை அல்லது படுக்கும் அறைகளில் வைக்க வேண்டுமாம்..
தென்னை மரம்: தென்னை மரங்களையும் இந்த லிஸ்ட்டில் சேர்த்து கொள்ளலாம்.. தென்னை மரத்தை வீட்டில் வளர்த்து வந்தால், குடும்பத்திலுள்ளவர்களின் முன்னேற்றம் அனைத்து வழிகளிலுமே இருக்கும். எனவே, வீட்டில் தென்னை மரம் வளர்க்க இடம் இருந்தால், அதையும் நட்டு வைத்து வளர்க்கலாம்.
ஆலுவேரா என்று சொல்லக்கூடிய கற்றாழை செடிகளையும் வீட்டில் வைக்கலாம்.. இதனால், நேர்மறை ஆற்றலை கொண்டுவருவதுடன், காற்றை சுத்திகரிக்கும் குணங்களை கொண்டது கற்றாழை செடி.
படுக்கையறை: படுக்கையறையில் நிறைய செடிகளை வளர்க்க தேவையில்லை. ஆனால், ஜாஸ்மின், லாவெண்டடர், மூங்கில், பீஸ் லில்லி போன்ற தாவரங்களை மட்டுமே படுக்கையறைகளுக்குள் வைக்கலாம் என்கிறது வாஸ்து சாஸ்திரம்.
ஆனால், வீடுகளுக்குள் வளர்க்கவே கூடாது என்று சொல்லக்கூடிய செடிகள் எது தெரியுமா? பருத்தி செடியை வீட்டில் வைக்க வேண்டாம் என்கிறார்கள்.. காரணம் துர்திரஷ்டம் வீட்டுக்குள் வந்துவிடுமாம்.. அதேபோல, போன்சாய், பருத்தி செடிகள், புளி, அத்திப்பழம், போன்றவைகளையும் வீட்டில் வளர்க்கக்கூடாது என்கிறார்கள்.
-
திமுகவிற்கு ‘குட்பை'.. விஜயின் தவெகவிற்கு மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் ஆதரவு! -
சிறகடிக்க ஆசை: விஜயா செய்த சதி, ஜெயிலுக்கு போகும் மொத்த குடும்பம்.. மனோஜால் ஏற்படும் விபரீதம்! ஜெயித்த ரோகிணி -
தேர்தல் ஆணையத்தின் அதிரடி ‘டிரான்ஸ்பர்’ மேளா.. காலியான எடப்பாடி கணக்கு... ஸ்டாலின் பவர்ஃபுல் மூவ்! -
எடப்பாடிக்கு அருகில் சீட்.. ஒரே விமானத்தில் பயணம்.. கடைசி நேரத்தில் பிளானை மாற்றிய உதயநிதி! -
வில்லிவாக்கத்தில் ட்விஸ்ட்.. ஆதவ் அர்ஜுனாவுக்கு அடிக்குமா ஜாக்பாட்? களம் எப்படி இருக்கிறது? -
"கொஞ்ச நேரம்.." என கொஞ்சியபோது காதலில் விழாதவர் உண்டோ? ஆஷா போஸ்லேவின் மறக்க முடியாத தமிழ் பாடல்கள் -
தவெக ஆட்சிக்கு வந்த 6 மாதத்தில் தமிழ்நாடு சேவை உரிமை சட்டம்.. குமரியில் விஜய் அளித்த வாக்குறுதிகள் -
ஈரான் விரித்த வலையில் ஈரானே சிக்கிடுச்சு.. அமெரிக்காவே கவலைப்படும் அளவிற்கு நிலைமை கைமீறியது -
மகளிர் உரிமைத் தொகை.. இன்னும் ஆட்டம் முடியல.. வரப்போகும் 2 ‘மெகா’ மாற்றங்கள்.. கவனிங்க! -
விட்டு விளாசிய பிடிஆர்! கோபத்தின் உச்சிக்கே போன குஷ்பு சுந்தர் சி.. மோதல் உச்சகட்டம்! என்ன நடக்குது? -
இஸ்லாமாபாத் டாக்ஸ்.. ட்ரம்ப் - ஈரான் டீல்.. இந்தியா மிஸ் செய்த சான்ஸ்? அடித்து தூக்கிய பாகிஸ்தான் -
அவ்ளோதான் முடிச்சுவிட்டீங்க போங்க.. ஒரே வரியில் தவெக பர்னிச்சரை சல்லி சல்லியாக்கிய ஸ்டாலின்












Click it and Unblock the Notifications