அன்புக்குரியவர்களே இருந்தாலும்! இறந்தால் இந்த பொருட்களை எல்லாம் நாம் வீட்டில் வைத்திருக்கவே கூடாது!
சென்னை: இறந்தவர்களின் இந்த 4 பொருட்களை மட்டும் வீட்டில் வைக்கவே கூடாது, ஏன் தெரியுமா?
வீட்டில் யாராவது இறந்துவிட்டால் நிறைய சடங்குகளை செய்து அவர்களை பெரியவர்களுடன் சேர்த்து வைப்பது வழக்கம். அப்போதுதான் அவர்கள் ஆன்மா சாந்தியடையும் என்பார்கள்.

அந்த 13 நாட்களில் வீட்டில் செய்யும் சாங்கியத்தால் அவர்கள் படிப்படியாக விண்ணுலகை அடைவார்கள் என சொல்வார்கள். ஆன்மா நம் உடலை விட்டு செல்லும் போது என்னென்ன நடக்கும் என்பதை கருடபுராணத்தை படித்தாலே தெரியும்.
இறந்தவர்களின் ஞாபகமாக சில பொருட்களை அந்த குடும்பத்தினர் பத்திரமாக வைத்திருப்பர். ஆனால் இறந்தவர்களின் பொருட்களில் சில 4 பொருட்களை வீட்டிலேயே வைக்கக் கூடாது என்கிறார்கள். இவற்றை வைத்திருந்தால் வாழ்க்கையில் ஒருவருக்கு பிரச்சினைகள் தொடர்ந்து கொண்டே இருக்கும்.
அதற்கு பல காரணங்கள் இருந்தாலும் வீட்டில் இறந்தவர்களின் சில பொருட்களை வீட்டில் வைத்திருப்பதாலும் இந்த பிரச்சினைகள் எழும் என்கிறார்கள் ஜோதிடர்கள். அந்த குறிப்பிட்ட பொருட்களை வீட்டில் இருந்து தூக்கி எறிவதன் மூலம் பிரச்சினைகள் ஏதும் இல்லாமல் நிம்மதியான வாழ்வை வாழலாம்.
அந்த பொருட்களை எரிக்கவோ அல்லது நீர் நிலைகளிலோ போட்டு விட்டு வர வேண்டும். அது போல் இறந்தவர்களின் பொருட்களை பிறர் அணியவே கூடாது என்கிறார்கள். அதிலும் அவர்களுடைய உடை, அணிகலன்களை அணியக் கூடாது. இறந்தவர்களின் காலணிகள், கைக் கடிகாரங்கள் என எந்த பொருட்களையும் பயன்படுத்தவே கூடாது.
ஒரு வேளை தங்கமாக இருந்தால் அதை கடையில் கொடுத்து உருக்கி அதிலிருந்து வேறு புதிய நகையை செய்து கொள்ளலாம். ஆனால் அப்படியே அவர்கள் அணிந்ததை நாம் அணியக் கூடாது. எல்லாவற்றிலும் முக்கியமானது இறந்தவர்களின் பாய், பெட், தலையணை உள்ளிட்டவற்றை பயன்படுத்தவே கூடாது.
இறந்தவர்களை புதைக்கவோ எரிக்கவோ கொண்டு சென்றவுடன் அவர்களை படுக்க வைத்திருந்த பாய், தலையணைகளை குப்பையில் போட்டுவிடுவதை பார்த்துள்ளோம். எனவே அந்த தலையணைகளையோ பாய்களையோ நாம் வைத்துக் கொள்ளவே கூடாது. அந்த பொருட்களை எரிப்பதோ நீர் நிலைகளில் கொண்டு போய் போட்டுவிடவோ வேண்டும். அதை அப்படியே வீட்டில் வைத்திருந்தால் தீய சக்திகளின் தாக்கம் அதிகரிக்கும்.
எனவே தான் இறந்தவுடன் அவர்களுக்கு செய்ய வேண்டிய சாங்கியங்களை செய்து முடித்தல் என்பது அவசியமானதாகும். இதில் எந்த குறையையும் வைக்கக் கூடாது. இறந்தவர்களின் உடலை எந்த சேதாரமும் இல்லாமல் நல்லபடியாக கொண்டு போய் சேர்த்தல் நல்லது. அது போல் சாவு வீட்டில் சண்டை சச்சரவுகள் செய்வது பாவம் என்பார்கள். இறந்த நாள் முதல் 13 நாட்களுக்கு அசைவ உணவுகளை கண்டிப்பாக உண்ணவே கூடாது. கொள்ளி வைத்தவர், வாழை இலையில்தான் சாப்பிட வேண்டும். தட்டில் சாப்பிடவே கூடாது. இப்படி ஏகப்பட்ட சம்பிரதாயங்கள் எல்லாம் இருக்கிறது.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications