திருப்பதியில் லட்டு பிரசாதம் எப்போது முதல் வழங்கப்படுகிறது தெரியுமா? பூந்தி லட்டான கதை என்ன?
திருப்பதி: திருப்பதி லட்டு பிரசாதத்தில் மாடு, பன்றியின் கொழுப்பு கலக்கப்பட்டிருப்பதாக வந்த புகாரை அடுத்து அந்த லட்டு பிரசாதத்திற்கு வயது என்ன, எப்போது முதல் வழங்கப்பட்டு வருகிறது போன்ற தகவல்களை பார்க்கலாம்.
கோயில்களில் சுவாமிக்கு நெய்வேத்தியம் செய்த பிரசாதம் பக்தர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. திருப்பதிக்கு லட்டு, பழனிக்கு பஞ்சாமிர்தம், சபரிமலை அரவணை பாயாசம் என வழங்கப்படுகிறது.

அந்த வகையில் திருப்பதியில் வழங்கப்படும் லட்டு பிரசாதத்தில் பயன்படுத்தப்படும் நெய்யில் விலங்குகளான மாடு, பன்றிகளின் கொழுப்பு கலக்கப்பட்டதாக அதிர்ச்சிகரமான தகவல் வெளியாகியுள்ளது.
இந்த லட்டு பிரசாதத்தில் விலங்கு கொழுப்பு கலந்திருப்பது குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்யுமாறு முதல்வர் சந்திரபாபு நாயுடு உத்தரவிட்டுள்ளார். மேலும் இந்த கலப்படம் ஜெகன் மோகன் ரெட்டி ஆட்சிக் காலத்தில் நடந்ததாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
இப்படி அல்லோகலப்படும் திருப்பதி லட்டுக்கு என்ன வயது என்பதை தெரிந்து கொள்ளலாம். திருப்பதியில் லட்டு தயாரிக்க 500 க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் உள்ளனர். ஏழுமலையான் கோயிலில் 3 வகைகளில் லட்டு தயார் செய்யப்படுகிறது.
அவற்றில் ஒன்று பக்தர்களுக்கு கவுன்ட்டர்களில் விற்பனை செய்யப்படும் 175 கிராம் லட்டு. இரண்டாவது லட்டு 750 கிராம் எடையில் தயார் செய்யப்படும் பெரிய லட்டு ஆகும். அது போல் மூன்றாவது லட்டு, சுவாமிக்கு நெய்வேத்தியம் செய்வதற்காகவே தயார் செய்யப்படுகிறது. 300 ஆண்டுகளுக்கு முன்பு ஏழுமலையான் கோயிலில் பக்தர்களுக்கு பூந்தி பிரசாதம் வழங்கப்பட்டு இருந்தது.
அதைத் தொடர்ந்துதான் 1715 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 2ஆம் தேதி முதல் பூந்திக்கு பதில் லட்டு பிரசாதம் வழங்கும் நடைமுறை அமலுக்கு கொண்டு வரப்படுகிறது. இப்போது வரை பக்தர்களுக்கு லட்டு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த 2015 இல் திருப்பதி லட்டுக்கு புவிசார் காப்புரிமை வழங்கப்பட்டது. இதனால் இந்தியாவில் திருப்பதி லட்டு என்ற பெயரில் யாரும் லட்டை தயார் செய்யக் கூடாது.
சுமார் 175 கிராம் எடை கொண்ட 5100 லட்டுகளை தயாரிக்க 185 கிலோ கடலை மாவு, 400 கிலோ சர்க்கரை, 160 கிலோ நெய், 30 கிலோ முந்திரி, 16 கிலோ உலர் திராட்சை, 8 கிலோ கல்கண்டு, 4 கிலோ ஏலக்காய் ஆகியவை பயன்படுத்தப்படுகிறது. இந்த லட்டு பிரசாதம் விநியோகமானது 308 ஆண்டுகளை கடந்து ஆகஸ்ட் 2ஆம் தேதி முதல் 309 ஆவது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.
-
குழந்தை வரம் வேண்டுவோர்.. வைகாசி விசாகம் நாளான்று இப்படி விரதம் இருந்தால் நல்லது! -
வைகாசி 2026: சுப முகூர்த்தங்கள், வாஸ்து நாட்கள் மற்றும் விசேஷ தினங்கள் முழு பட்டியல் -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2500 இருக்கட்டும், புதிய பயனாளிகளுக்கு அடுத்த விண்ணப்பம் எப்போது -
அஷ்டமத்து சனி ஓவர்! இனிதான் விஜய் ஆட்டம் ஆரம்பம்! ஆட்சியை இழக்கவும் தயங்க மாட்டார்! ஷெல்வி கணிப்பு -
பங்குச்சந்தை வீழ்ச்சி அடையப்போகிறது! தங்கம், வெள்ளி விலை பல மடங்கு உயரும்.. பிரபல எக்ஸ்பர்ட் -
அழகிரி தந்த கிரீன் சிக்னல்.. தவெகவில் இணைகிறார் அழகிரியின் மகள் கயல்விழி.. விஜய் சொன்ன ஒரு வார்த்தை -
ஆதார் கார்டு வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. இலவசமாக புதுப்பிக்க ஒரு வருடம் கால அவகாசம் நீட்டிப்பு! -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
5 ஆண்டுக்கு ஒருமுறை சம்பள உயர்வு; ₹69,000 அடிப்படைச் சம்பளம்... மத்திய அரசு போடும் ஸ்வீட் பிளான்! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது!












Click it and Unblock the Notifications