மகாலட்சுமியின் அம்சம்.. தங்கத்தை இடுப்புக்கு கீழே அணிய கூடாதாமே.. காலில் வெள்ளி நகை போட காரணம்? செம
சென்னை: தங்கம், வெள்ளி நகைகள் அணியும்போது, ஆன்மீகத்தில் பல்வேறு தகவல்கள் சொல்லப்பட்டுள்ளன.. இடுப்புக்கு கீழே தங்க ஆபரணங்களை அணியக்கூடாது என்று முன்னோர்கள் சொல்ல என்ன காரணம் தெரியுமா? இதற்கு அறிவியல் காரணங்களும் உள்ளன.
தங்கத்தை அணியும்போது, நேர்மறை எண்ணங்களும், நேர்மறைச் செயல்களும் அதிகமாக தோன்றும்.. அந்தவகையில், தங்கத்தில் மோதிரம் அணியலாம்.. இதனால், மகிழ்ச்சி, உற்சாகம், தன்னம்பிக்கை அதிகரிக்கும்... தீய சக்திகளும் விலகும்.. பெண்கள் தங்க மோதிரத்தை இடது கையிலும், ஆண்கள் வலது கையிலும் அணிய வேண்டும்..

தங்க நகைகள்: ஒருவேளை, சுவாச பாதிப்புகள் உங்களுக்கு இருந்தால், இருமல், சளி போன்ற பிரச்சனையால் அவதிக்கு ஆளானால், தங்க மோதிரத்தை சுட்டு விரலில் அணிய வேண்டும்.. பெயர், புகழ், அந்தஸ்து சம்பந்தமாக பிரச்சனைகள் என்றால், தங்க மோதிரத்தை நடுவிரலில் அணிய வேண்டும்.
தங்கம் சுக்கிரனுடன் தொடர்புடைய உலோகம் என்பதால், சுக்கிர தோஷம் உள்ளவர்கள், சுக்கிர பலம் குறைந்தவர்கள் தங்கத்தை பயன்படுத்தலாம்.. இதனால், அதிர்ஷ்டம் கூடும்..
நரம்புகள்: ஆனால், தங்கத்தை தவறாக உபயோகிக்கும்போது, பலன்கள் நேர் எதிராக திரும்பிவிடும்.. காரணம், நம்முடைய உடலின் நரம்புகள் புதன் கிரகமாகும்.. வயிறு சம்பந்தப்பட்ட பாகங்களை குருவாக சொல்லுகிறார்கள்.. குருவின் ஆதிக்கத்தில் உள்ள ஆபரணமாக தங்கம் உள்ளதால்தான், தங்கத்தாலி, தங்கச் செயின், மற்றும் வயிற்றுடன் இணைத்து அணியும் ஒட்டியாணம் போன்றவைகளை அணிய சொல்லியிருக்கிறார்கள்.
ஆனால், இடுப்பிலிருந்து தொடை வரை இருக்கக்கூடிய பாகங்களை சுக்கிரனுக்கான இடம் என்பார்கள்.. தொடையிலிருந்து காலின் பாதப்பகுதி வரை சனி கிரகத்துக்குரிய இடம் என்பார்கள்.. ஆக, நம்முடைய பாதம் என்பது சனியின் அம்சமாக கருதப்படுகிறது.
தங்கம் நகைகள்: மகாலக்ஷ்மியின் அம்சமாக கருதப்படும் தங்கத்தை, குருவின் ஆதிக்கம் நிறைந்த தங்கத்தை, இடுப்புக்குக் கீழே அணிய கூடாது என்கிறார்கள். மகாலட்சுமியை அலட்சியப்படுத்துவதாகிவிடும். அதுமட்டுமல்ல, குருவும் சனியும் பகைக்கிரகங்களாகும்.. எனவே, கால்களுக்கு வெள்ளி அணியலாமே தவிர, தங்கம் அணிய கூடாது. தங்கக் கொலுசு அணிவதால், நன்மையை விட தீமைதான் அதிகமாகிவிடும்.
இடுப்புக் கீழே தங்கத்தை அணிய கூடாது என்பதற்கு அறிவியல் காரணமும் உண்டு.. நம்முடைய உடல் இயக்கம் என்பது உஷ்ணம், குளிர்ச்சியை சமமாக கொண்டது.. எனவே, வாதம், பித்தம் அனைத்துமே சரியான விகிதத்தில் இயங்க வேண்டும்... தட்ப வெப்பநிலைக்கு ஏற்ப நம்முடைய உடல் மாறக்கூடியது என்பதால், அணிகலன்கள் அணியும்போது இதனை கருத்தில்கொள்ள வேண்டியிருக்கிறது.
வாதம், பித்தம்: தங்கம் குளிர்ச்சியை தரக்கூடியது.. எனவே, காது, கை, கழுத்தில் அணியலாம்.. இதனால், நமக்கு குளிர்ச்சி கிடைக்கிறது. ஆனால், காலில் தங்கம் அணியும்போது, உடலில் வாதம் அதிகமாகிவிடும். வாதம் அதிகரித்தால் உடல் எடை கூடிவிடும்.. இது கால் வலி, மூட்டு வலி, முழங்கால் வலியில் கொண்டுபோய் விட்டுவிடும். அதனால், வெள்ளியை அணிய சொல்கிறார்கள். உடலில் உஷ்ணத்தை தந்து, வாதத்தை சம நிலையில் வைக்கும் தன்மை வெள்ளிக்கு உண்டு. அதனால்தான் கொலுசு, மெட்டி வெள்ளியில் அணிகிறோம்.
அதுமட்டுமல்ல, காலில் தங்கம் இருந்தால் வாத நரம்புகள் தூண்டிவிடப்பட்டு உடலில் வீக்கமும் வலியும் ஏற்படுகின்றன.. இதற்கு அறிவியல் ஆதாரங்களும் இருக்கின்றன.. அதனால் தான் நம் முன்னோர்கள் வாதத்தை கட்டுப்படுத்தி சமமாக வைக்கும் வெள்ளியை காலில் அணிந்து வந்தார்கள். இதுவே, காலில் தங்கம் அணியாதமைக்கு உண்மையான அறிவியல் ரீதியான காரணமாகும்.












Click it and Unblock the Notifications