கழுத்தை நெரிக்கும் பணக்கஷ்டமா? அல்லலை நீக்கும் அன்னதானம்.. பரிகாரம் பலனளிக்கலயா? இதேதான் காரணம்
சென்னை: ஜோதிடத்தில் பரிகாரம் என்பது தவிர்க்க முடியாத முக்கியத்துவத்தை பெற்று வருகிறது. இதற்கு என்ன காரணம்? பரிகாரம் செய்பவர்கள் கடைப்பிடிக்க வேண்டிய முக்கியமான வழிமுறைகள் என்னென்ன?
ஒருவருக்கு கிரக நிலை சரியாக அமையாமலும், மோசமான திசை புத்தி நடக்கும்போது, மோசமான பலன்களே கிடைத்துவிடும்.. நம்முடைய கர்ம வினைகளுக்கு ஏற்பவே, நல்லது - கெட்டது நடக்கும் என்பார்கள்.

கர்ம வினைகள்: இந்த கர்ம வினைகளில் மூன்று வகைகள் உண்டு. முதலாவதாக, "த்ருத கர்மா".. அதாவது முற்பிறவியில் தெரிந்தே செய்த பாவமாகும்.. இது மிகக் கடுமையான கொடுமையான பாவம் செய்தவர்களின் கர்ம வினையாகும்.. இப்போதும் தொடரும்.. இதை அனுபவித்துதான் தீரவேண்டும். இவர்கள் தன் சந்ததிகள் நன்றாக இருக்க வேண்டுமானால் நிறைய ஏழைகளுக்கு அன்னதானத்தை தொடர்ந்து செய்யவேண்டும்.
அடுத்ததாக "த்ருத அத்ருத கர்மா".. இது தெரிந்தே செய்த தவறு பிறகு, அதற்காக மனம் வருந்தி மன்னிப்பு கேட்பது.. இதற்கு இந்த ஜன்மத்தில் ஜாதக ரீதியாக பரிகாரம் செய்தால், சரியாகி நல்ல பலன் கிடைக்கும். கஷ்டங்களும் தொடர்ந்து வராது.. ஜாதகத்தில் லக்னம், சந்திரன், சூரியன் ஆகியோருக்கு குரு அல்லது ஒன்பதாம் அதிபதியின் பார்வையிருக்கும். இதை வைத்து ஜாதகத்தில் தெரிந்து கொள்ளலாம்.
3 வகைகள்: மூன்றாவதாக, அத்ருத கர்மா.. அதாவது தெரியாமல் செய்த தவறு.. மன்னிக்கக்கூடிய சிறய குற்றங்களை தெரியாமலே செய்வது.. இதற்கு எந்தவிதமான பரிகாரங்களும் தேவையில்லை. மனம் வருந்தி கடவுளிடம் செய்யும் வேண்டுதலே போதுமானது.. இது ஜாதகத்தில் லக்னம், சந்திரன், சூரியன் ஆகியோருக்கு குரு, அல்லது பாக்கியஸ்தானமான ஒன்பதாம் அதிபதியின் சேர்க்கை இருப்பதைக் காட்டிக் கொடுக்கும்.
எனவே, பரிகாரம் செய்தும் பலிக்கவில்லையே என்று கவலைப்படாமல், ஒருவர் ஜாதகத்தில் எந்த வகையில் தொடர்கிறது என்பதைத் தெரிந்து கொண்டு அதற்கேற்ப பரிகாரம் செய்து நல்லது என்கிறார்கள்..
கஷ்ட நஷ்டங்கள்: ஆனால் பொதுவாக, பரிகாரம் என்பது குறிப்பிட்ட ஒரு செயலுக்காக, நேரம், பொருள், செலவு செய்து பூஜை முறையில் ஈடுபடுவதாகும்.. இந்த பூஜை மூலம் பிரச்சினைகள், கஷ்ட நஷ்டங்கள், தடைகள், இடையூறுகள் நீங்குகின்றன.. பரிகாரத்தின் பலன்கள் எப்போதுமே, குறிப்பிட்ட கால அளவிற்கே இருக்கும். ஆனால், வழிபாட்டின் பலனோ, ஒருவரின் ஆயுள் முழுவதும் அவருடன் எப்போதுமே இருக்கும்.
எப்போதுமே பரிகாரம் செய்யும்போது சில முக்கிய விஷயங்களை கவனிக்க வேண்டும்.. அப்பா, அம்மா, குல, குடும்ப, இஷ்ட, உபாசன, காலடி, காவல் தெய்வ ஆசியை மானசீகமாகவோ நேரடியாகவோ பெற்ற பிறகே பரிகாரம் செய்ய வேண்டுமாம்.. ஆனால், சந்திராஷ்டம நாளில் பரிகாரம் செய்யக் கூடாது என்பார்கள்.
நிறைவேறும்: அதேபோல, நல்ல விஷயத்துக்கான பரிகாரம் என்றால் வளர்பிறையிலும், மற்ற பரிகாரத்தை தேய்பிறையிலும் செய்ய வேண்டும். லக்னாதிபதி வலிமையுள்ள ஜாதகருக்கு, எப்போதுமே பரிகாரம் உடனே நிறைவேறிவிடும்..
மிகப் பெரிய பரிகார பூஜை செய்யும்போது குறைந்தது 1 வாரத்திற்கு முன்பே பிரம்மச்சரியத்தை கடைபிடித்து புலால் உண்பதை தவிர்த்து, காரிய சித்தி வழிபாடு செய்பவரின் பரிகாரமானது, குறிப்பிட்ட கால அவகாசத்துக்குள்ளேயே நிச்சயமாக நிறைவேறுமாம்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications