For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பணம்..துணி வைக்கும் அலமாரியில் இந்த பொருட்களை மறந்தும் கூட வைத்து விடாதீர்கள்..வறுமை ஏற்படலாம்!!

Google Oneindia Tamil News

சென்னை: சிலர் வீடுகளில் துவைத்த துணிகளை குவியலாக போட்டு வைத்திருந்தால் அது வஸ்திர தோஷத்தை ஏற்படுத்தும். அப்படி வஸ்திர தோஷத்தை தவிர்க்க துணிகளை சரியான முறையில் பீரோவில் அடுக்கி வைக்க வேண்டும். நம்முடைய வீட்டில் சந்தோஷம் நிறைந்திருக்க என்ன செய்ய வேண்டும் என்ன செய்யக்கூடாது. பீரோவில் நாம் எத்தகைய துணிகளை வைக்க வேண்டும் எப்படி வைக்க வேண்டும் என்றும் பார்க்கலாம்.

சிலருடைய பீரோவில் ஒருமுறை உடுத்திய துணிகளை வைத்திருப்பார்கள். அதனால் அழுக்கு வாசம் வீசும். நம்முடைய வீட்டில் உள்ள பீரோவில் நாம் வைக்கும் பொருட்கள் கூட நம்முடைய செல்வ வளத்தை நிர்ணயம் செய்யக்கூடும். நன்றாக துவைத்து காயவைத்த துணிகளை மட்டுமே பீரோவில் மடித்து வைக்க வேண்டும். துவைக்காத அழுக்குத் துணிகளை பீரோவிற்குள்ளோ, குவியலாகவே போட்டு வைத்திருக்கக் கூடாது. சுத்தமான துணிகளை நன்றாக மடித்து வைக்க வேண்டும்.

சம்பாதிக்கும் பணமெல்லாம் சிலருக்கு வீண் விரைய செலவாகிவிடும். திடீர் மருத்துவ செலவாகும். கோர்ட் கேஸ் என்று வக்கீலுக்கு செலவாகும். அதற்குக் காரணம் நம்முடைய வீட்டில் இருக்கும் வாஸ்து கோளாறுகள்தான். நம்முடைய பீரோவை எப்படி பயன்படுத்த வேண்டும் என்று பார்க்கலாம்.

துடைப்பம் தானேன்னு சாதாரணமா நினைக்காதீங்க..மகாலட்சுமி அருள் கிடைக்க இதை பாலோ பண்ணுங்க துடைப்பம் தானேன்னு சாதாரணமா நினைக்காதீங்க..மகாலட்சுமி அருள் கிடைக்க இதை பாலோ பண்ணுங்க

மகாலட்சுமி அருள் கிடைக்க

மகாலட்சுமி அருள் கிடைக்க

நம்முடைய வீட்டில் மகாலட்சுமி வாசம் செய்ய வேண்டும் என்றால் வீட்டில் எப்போது நல்ல வாசம் நிறைந்திருக்க வேண்டும். ஒரு சிலர் பீரோவைத் திறந்தாலே பூஞ்சை வாசம் அடிக்கும். அப்படி இருக்கக் கூடாது. பச்சைக்கற்பூரத்தை ஒரு கவரில் போட்டு அதை பீரோவில் வைத்திருக்க வேண்டும். பெரும்பாலான பெண்கள் செய்யும் மிகப்பெரிய தவறு விலை உயர்ந்த புடவையை அணிந்திருந்து விட்டு அதை அப்படியே மடித்து வைப்பார்கள். அழுக்கு துணிகளை ஒருபோது அப்படி பீரோவில் மடித்து வைக்கக் கூடாது. டிரைவாஷ் கொடுக்க வேண்டியிருந்தால் அதை தனியாக ஒரு பெட்டியிலோ சூட்கேஷிலோ மடித்து வைத்து விட வேண்டும்.

அழுக்குத் துணிகள்

அழுக்குத் துணிகள்

அழுக்குத் துணிகள் அதிகம் இருந்தால் அங்கு ஒருவித துர்வாசனை வீசும். அது துர்தேவதைகள் குடியேர வாய்ப்பாக அமைந்து விடும். துர்தேவதைகள் வசிக்கும் இடத்தில் நல்ல தெய்வங்களின் ஆதிக்கம் குறைந்து விடும். வறுமை தாண்டவம் ஆடும். பணப்பிரச்சினை ஏற்பட வாய்ப்புகள் உண்டு. உடல் ஆரோக்கிய பாதிப்பு, திடீர் செலவுகள், கடன் தொல்லைகள், தொடர் தோல்விகள் ஏற்படும்.

 கிழிந்த ஆடைகள்

கிழிந்த ஆடைகள்

அதே போல கிழிந்த துணிகளில் வஸ்திர தோஷம் இருக்கும் எனவே துணி வைக்கும் அலமாரியில் கண்டிப்பாக கந்தல் துணிகள் அதாவது நைந்து போன பழைய துணிமணிகளை வைக்கக் கூடாது. அதே போல நல்ல நிலையில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் கிழிந்த துணிகளை வைத்திருக்கவே கூடாது. புதிய ஆடைகளில் திடீரென நெருப்பு பட்டு ஓட்டையாகி விட்டாலோ அல்லது ஆணியில் மாட்டி கிழிந்து போய் இருந்தாலோ அந்த துணிமணிகளை மீண்டும் நல்ல நிலைக்கு டைலரிடம் கொடுத்து மாற்ற முடியும் என்றால் மாற்றி அணிந்து கொள்ளலாம் அல்லது அதை எரித்து விடுவது நல்லது. அதை கண்டிப்பாக அலமாரியில் வைத்து இருப்பது வறுமையை ஏற்படுத்தும்.

உடைந்த பொருட்கள் வேண்டாம்

உடைந்த பொருட்கள் வேண்டாம்

இறந்து போனவர்கள் உபயோகப்படுத்திய துணிகள், கைகடிகாரம்,பர்ஸ், கண்ணாடி போன்றவை அவர்களின் நினைவாக வைத்திருப்பது தவறில்லை. அதே நேரத்தில் நாம் அன்றாடம் உபயோகிக்கும் பீரோ, அலமாரிகளில் இவற்றை வைத்திருக்க வேண்டாம். தனியாக ஒரு பெட்டியில் போட்டு வைப்பது நல்லது. அதே போல உடைந்து போன பழைய புகைப்படங்களை சிலர் அலமாறியில் வைத்திருப்பார்கள். அதை கட்டாயம் நம்முடைய பீரோவில் வைத்து இருக்கக் கூடாது. அப்படி வைத்திருந்தால் குடும்பத்தில் வறுமையை ஏற்படுத்திவிடும் என்பதால் உடனே அப்புறப்படுத்தி விட வேண்டும்.

சனிதோஷம்

சனிதோஷம்

அடுத்தவர் வீட்டில் இரவலாக வாங்கிய பொருட்களை உடனே திரும்ப கொடுத்து விட வேண்டும். பாத்திரங்கள், இரும்பு சாமான்கள் இரவலாக உபயோகப்படுத்த வாங்கினால் கண்டிப்பாக திரும்ப தர வேண்டும் இல்லாவிட்டால் அது தோஷத்தை ஏற்படுத்தி விடும். இரும்பு சம்பந்தப்பட்ட உலோகங்களுக்கு தோஷங்கள் உண்டு என்பதால் இவ்வாறு கூறப்படுகிறது. சனிதோஷம் பீடித்து விடும்.

தங்கம் வெள்ளி நகைகள்

தங்கம் வெள்ளி நகைகள்

தங்கம், வெள்ளி போன்றவற்றுக்கு தோஷம் கிடையாது. எனவே நமது வீட்டில் முன்னோர்கள் பயன்படுத்திய தங்க, வெள்ளி நகைகள் அல்லது தங்க, வெள்ளி பொருட்கள் போன்றவற்றை தாராளமாக மறு உபயோகம் செய்து கொள்ளலாம். தங்கம், வெள்ளி நகைகள் வைக்கும் பொழுது நீங்கள் பிளாஸ்டிக் அல்லது இரும்பு பொருட்களை பயன்படுத்தக் கூடாது. தேக்கு மரப்பெட்டியில் மெல்லிய பட்டுத் துணியில் வைத்து பயன்படுத்துவது நல்லது. பச்சை, பிங்க், சிவப்பு ஆகிய நிறங்களில் கிடைக்கக்கூடிய பட்டுத் துணியை விரித்து அதில் தங்க நகை மற்றும் வெள்ளி நகைகளை பாதுகாத்து வைக்கலாம்.

பீரோவில் பணம்

பீரோவில் பணம்


நாம் பீரோவில் பணம் வைத்து புழங்குகிறோம். தங்க நகைகளை வைத்து பயன்படுத்துகிறோம். நம் வீட்டு மகாலட்சுமி வசிக்கக் கூடிய அந்த பீரோவில், அழுக்கு துணியை வைப்பது தவறு. காசு சேமித்து வைக்கும் பெட்டியில் அழுக்குத் துணியை வைக்காதீர்கள். அப்படி வைத்து பயன்படுத்தினால் தேவையற்ற செலவுகள் வந்து உங்களை கடனாளியாக்கிவிடும்.

English summary
What is Vastra dosha: Do's and dont your Wardrobe: (வஸ்திர தோஷம் என்றால் என்ன உங்கள் பீரோவில் மறந்தும் இந்த பொருட்களை வைத்து விடாதீர்கள். வறுமையின் பிடியில் சிக்கிக் கொள்வீர்கள்) If some people keep the washed clothes in piles at home, it can cause Vastra Dosha. Clothes should be stacked properly in the bureau to avoid such vastra dosha. What to do and what not to do to make our home full of happiness. Let's see what clothes we should put in the bureau and how to put them.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X