ஷீர்டி சாய்பாபா.. நினைத்ததை நிறைவேற்ற உதவும் ஷிர்டி சாய்பாபா விரதம்.. நலன்களை தரும் சீரடி சாயி பாபா
சென்னை: ஷீர்டி பாபாவை வணங்கிவிட்டு, எந்த பணிகளை செய்தாலும், அது அத்தனையும் ஜெயம் உண்டாகும்.. ஷீர்டி பாபாவை வணங்கும் முறை என்ன? பாபாவுக்கான விரதம் எப்படியிருக்க வேண்டும் தெரியுமா?
ஷீர்டி சாயிபாபா, மிக உன்னதமான குருநாதர் என்று கொண்டாடுகிறார்கள் பக்தர்கள்... யாருடைய வீட்டில் சாயிபாபாவின் பெயர் உச்சரிக்கப்படுகிறதோ. அந்த வீட்டுக்கு பாபாவின் அருள் கிடைக்கும் என்பது பக்தர்களின் பலத்த நம்பிக்கையாக இருந்து வருகிறது.

மூல மந்திரம்: சாயி பாபாவின் படத்துக்கோ அல்லது சிலைக்கோ தினமும் மாலை அணிவித்து பூஜை செய்ய வேண்டும்.. தீப ஆரத்தி காட்ட வேண்டும்.. அவருக்கு எதிரே ஒரு நிமிடமாவது அமர்ந்து, பாபாவின் மூல மந்திரத்தை சொல்வது சிறப்பு. அதாவது, "ஓம் ஸாயி ஸாயி ஜெயஜெய ஸாயி" என்ற இந்த ஒற்றை வரி மூல மந்திரத்தை, கண்கள் மூடி தினமும் 108 முறை சொல்லிவிட்டு, தீபாராதனை காட்டினாலே போதும். நீங்கள் செய்யும் காரியம் அத்தனையும் வெற்றியாகும்.
நினைத்த காரியம் நிறைவேறுவதற்காக, பாபாவை வேண்டிக்கொண்டு, 9 வியாழக்கிழமைகளில் பக்தர்கள் விரதம் இருப்பார்கள்.. இந்த 9 வியாழக்கிழமைகளிலும் மேற்கொள்ளும் விரத முறைகள் மிகவும் முக்கியமானது. விரதத்தை துவங்கும் முன்பு, சாயி நாமத்தை வேண்டிக்கொண்டு துவங்க வேண்டும்.. சாயி பாபாவின் போட்டோவிற்கோ அல்லது சிலைக்கோ பூஜைகள் செய்ய வேண்டும்.
மஞ்சள் துணி: ஒரு தூய்மையான நாற்காலி அல்லது பலகையில், மஞ்சள் நிற துணியை விரித்து பாபா படத்தை வைத்து, சுத்தமான தண்ணீரில் துடைத்து எடுக்க வேண்டும்.. பிறகு சந்தனம் குங்குமம் வைத்து அலங்கரிக்க வேண்டும்..
மஞ்சள் நிற மலர்கள் கிடைத்தால் அதை மாலையாக அணிவிக்கலாம். பொட்டு வைத்து தீபம், ஊதுபத்தி ஏற்றி பிரசாதமான பழங்கள் இனிப்புகள் கற்கண்டு எதுவானாலும், அதில் நைவேத்தியம் செய்து படைக்க வேண்டும். வியாழக்கிழமைகளில் காலை- மாலை என 2 வேளையும் சாயி பாபா ஆலயத்துக்கு சென்று வழிபடுவது நல்லது
உணவு விரதம்: இந்த விரத நாளில், பால், நீர், பழங்கள், இனிப்புகள் போன்றவற்றை சாப்பிடலாம்.. ஒருவேளை நாளெல்லாம் சாப்பிடாமல் இருப்பதற்கு கடினமாக இருந்தால், மதியமோ, அல்லது இரவோ உணவு சாப்பிட்டு கொள்ளலாம். அதுக்காக முழுநாள் பட்டினி கிடந்த விரதத்தை செய்யக்கூடாது.
9 வாரங்களும் பூஜையின்போது சாய் விரத கதைகளை கேட்கலாம்.. சாய் பாமாலை அல்லது சாய் பவானி போன்றவற்றை படிக்கலாம். விரதம் நிறைவுபெறும்நாளில், 5 ஏழைகளுக்கு உணவு வழங்கலாம்.. அல்லது பணமாகவும் உதவி செய்யலாம்.. வசதி இருப்பவர்கள் வியாழக்கிழமைகளில் அன்னதானம் வழங்கப்படும் பாபா ஆலயங்களில், அதற்கான பணத்தை வழங்கலாம்
விரதங்கள்: இந்த விரதத்தை ஆண், பெண், குழந்தைகள் என்று யார் வேண்டுமானாலும் இருக்கலாம்... திடீரென வெளியூர் செல்வதானாலும் இந்த விரதத்தை கடைபிடிக்கலாம்... ஒருவேளை மாதவிடாய் போன்ற காரணத்தினால் பெண்களால் விரதம் செய்ய முடியவில்லையானாலும் தவறில்லை. அந்த வாரம் விட்டு விட்டு, அடுத்த வாரம் விரதத்தை தொடரலாம். பெண்கள் இடையில் ஒரு வாரம் விரதம் இருக்க இயலாமல் போனாலும் பிரச்சினை இல்லை.
ஒரு முறை பாபாவை நினைத்தாலே போதும், 9 தலைமுறையில் செய்த பாவங்கள் தீரும் என்பார்கள்.. எந்தஅளவுக்கு விரதம் இருக்கிறோமோ, அந்த அளவுக்கு பாபாவை நெருங்கலாம்.
நெருக்கம் - நம்பிக்கை: ஆனால், விரதம் இருங்கள் என்று பாபா ஒருபோதும் சொன்னதே இல்லை. அதனால், பாபாவை வேண்டிக் கொண்டு விரதம் இருப்பதும், இருக்காததும் அவரவர் தனிப்பட்ட விருப்பத்தை பொறுத்தது. சாயிடம் நெருங்க வேண்டுமானால், அவர் அன்பை பரிபூரணமாக பெற வேண்டுமானால், அவர் மீது நம்பிக்கை வைப்பது ஒன்றே போதுமானது.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக












Click it and Unblock the Notifications