இப்படி அப்பாவியா இருக்கீங்களே? E எழுத்தில் உங்க பேர் துவங்குதா? செம்ம கேரக்டர் நீங்க.. இதுதான் மைனஸ்
சென்னை: ஒவ்வொரு எழுத்துக்கும், ஒவ்வொரு எண்ணும், அதற்குரிய தன்மைகளும், குணங்களும் இருக்கின்றன. அதாவது, ஒரு குறிப்பிட்ட எண்ணின் ஆதிக்கத்தில் பிறந்தவர்களுக்கு, அதை சார்ந்த எழுத்தை முதல் எழுத்தாக வருமாறு பெயர் வைத்தால் அதிர்ஷ்டமாக இருக்கும் என்பது நம்பிக்கையாக உளளது. அந்தவகையில், E என்ற எழுத்தில் பெயர் வைத்திருப்பவர்களின் குணாதிசயங்கள் என்னென்ன என்பதை பற்றி பார்ப்போம்.
பெயர்கள் உங்கள் குணத்தை காட்டக்கூடியது, உங்களது இயல்பை உணர்த்தக்கூடியது. அந்தவகையில், எண் கணிதத்தில், E என்பது எழுத்து சுதந்திரம், தகவல் தொடர்பு, நுண்ணறிவு போன்றவற்றை உணர்த்த கூடியது. E என்பது உற்சாகத்தை குறிக்கக்கூடியது..

E என்ற எழுத்தை முதல் எழுத்தாக கொண்டவர்கள், மிகவும் வசீகரமான, உற்சாகமான குணம் கொண்டவர்கள்.. பிறரை எளிதாக ஈர்க்கக்கூடியவர்கள்.. ஒழுக்கத்தை முதன்மையாக மதிக்கக்கூடியவர்கள்.. மற்றவர்களிடம் நன்றாக பேசுவார்கள்..மிகவும் உணர்ச்சிவசப்படுவார்கள்.. இதனால் எளிதில் எல்லாரையும் நம்பிவிடுவார்கள்.. அப்பாவித்தனமான நபர்களாக இருப்பார்கள்.
அன்பு, பாசம், ஆளுமை
இவர்கள் இருக்கும் இடமே எப்போதுமே கலகலப்பாக இருக்கும்.. யாரையுமே தங்களது சிரிப்பு நிறைந்த பேச்சால் ஈர்க்கக்கூடியவர்கள்.. அதேசமயம், சிக்கலான, கடினமான நேரங்களில், அவசரப்பட்டு எந்த முடிவையும் எடுக்காமல் தீர யோசித்து செயல்படக்கூடியவர்கள். இதே கடினமான சூழல் பிறருக்கு ஏற்பட்டால், தானாக முன்வந்து உதவக்கூடியவர்கள்.
மற்றவர்கள் தயங்கும் விஷயத்தை தைரியமாக முன்னின்று செய்வார்கள்.. சிறந்த ஆளுமையும் கொண்டவர்களாக இருப்பார்கள்.. தங்கள் வாழ்க்கையில் ஒழுக்கத்தை மதிக்கக்கூடியவர்கள் என்பதால், பிறருடைய தனிப்பட்ட வாழ்க்கையில் தலையிட மாட்டார்கள். தங்களுக்கு காதல் ஏற்பட்டாலும், அதிலும் ஒழுக்கத்தையும் நேர்மையையும் கடைப்பிடிப்பவர்கள். இதய சுத்தியுடன் பழகுவதால், காதலில் சிக்கல்களை எதிர்கொள்ள நேரிடலாம்..
காதல் விவகாரங்கள்
காதலை போலவே, பிற உறவுகளையும் மதிக்கக்கூடியவர்கள். நேர்மை, விசுவாசம், ஒழுக்கம், அர்ப்பணிப்புக்கு சொந்தக்காரர்களாக இந்த E எழுத்து நபர்கள் இருப்பார்கள். பிறர் துன்பத்தையும் தன் துன்பமாக பார்க்கக்கூடியவர்கள், தன்னுடைய குடும்பத்தை தலைமேல் வைத்து தாங்குவார்கள். அதனால், குடும்ப உறுப்பினர்கள் மொத்த பேரும் இவர்மீது அன்பாக இருப்பார்கள்.
மாற்றங்களை எளிதில் ஏற்றுக்கொண்டு விடுவார்கள்.. எல்லாருடனும் பேசுவதும், பழகுவதும் இவர்களுக்கு பிடிக்கும். அதேசமயம், சுதந்திரமாக இருப்பதை அதிகமாக விரும்புவார்கள். இதற்காக பயணங்களை மேற்கொள்ளவும் ஆசைப்படுவார்கள். எந்த வாய்ப்பு வந்தாலும், அவைகளை சரியாக பயன்படுத்திக்கொள்வார்கள்..
இந்த 2 பலவீனங்கள்
இவர்களுக்கு 2 விதமான பலவீனங்கள் உண்டு.. அதில் முதன்மையானது ஈகோ.. பிறருக்கு வளைந்து கொடுப்பதில்லை.. எனவே, ஈகோவை கைவிட்டு, தன்னுடைய தவறுகளில் இருந்தே இவர்கள் பாடங்களை கற்றுக்கொள்ள வேண்டும். அடுத்ததாக, சுதந்திரம் என்ற பெயரில் தனிமையில் சிக்கி கொள்வார்கள்.. யாருமே அணுக முடியாமல் தனியாக இருப்பது, அவர்களையே பாதிக்கக்கூடும். எனவே எல்லா நேரமும் வெளிப்படையான மனதுடன் இருக்க வேண்டும்.
மொத்தத்தில, அனைத்துமே தன்னை சுற்றியே இருக்க வேண்டும் என்பது போல நடந்து கொள்ளாமல், அதிலிருந்து வெளியே வந்தால், E எழுத்தை முதலாக கொண்டவர்களின் வாழ்க்கை மேலும் சிறப்பாக இருக்கும் என்கிறார்கள் நிபுணர்கள்.












Click it and Unblock the Notifications