இந்த 8 பொருளை உடனே தூக்கி எறியுங்க.. வீட்டில் மகிழ்ச்சி, பணம், நன்மைகள் தர உதவும் செம வாஸ்து டிப்ஸ்
சென்னை: நம்முடைய வீட்டில் சில பொருட்களை சரியாக வைத்திருந்தாலே, வறுமை அண்டாது என்பார்கள்.. அதேபோல, தரித்திரம் ஏற்படுத்தக்கூடிய பொருட்களை வீட்டிற்குள் சேர்த்து வைக்காமல் இருந்தாலும், வறுமை அண்டாது. இதுகுறித்து முன்னோர்கள் பல குறிப்புகளை சொல்லி வைத்திருக்கிறார்கள்.. அதை சுருக்கமாக பார்ப்போம்.
எப்போதுமே, கிழிந்த ஆடைகளை வீட்டில் வைத்திருக்க கூடாது.. உடுத்தும் ஆடைகளையும் கிழிசல் ஆடைகளை பயன்படுத்தக்கூடாது.. பழைய ஆடைகள் பொதுவாக சுருங்கிவிடும்.. இந்த சுருங்கி போன ஆடைகளையும், அணியக்கூடாது, இவையெல்லாம் குடும்பத்தில் தரித்திரத்தை உண்டுபண்ணிவிடும்.

இரும்பு: அதேபோல, வீட்டின் சாவி, பூட்டுகள், தாழ்ப்பாள், இரும்பு கேட் இவையெல்லாம் துருப்பிடிக்கும் அளவுக்கு விடக்கூடாது.. மாதம் ஒருமுறை, இவைகளை சுத்தப்படுத்தி வைத்து கொள்ள வேண்டும்.. இரும்பு கேட், தாழ்ப்பாள் பகுதிகளில் 2 சொட்டு எண்ணெய் விட்டு வரலாம். அதாவது எப்போதுமே பயன்படுத்தும்படியாகவே இவையெல்லாம் இருக்க வேண்டும். காரணம், இரும்பு என்பது சனி பகவானுக்கு உரியது. அதனால், வீட்டில் எங்குமே இரும்பு பொருட்களை பயன்படுத்தாமலும், பழுதடைந்தும் போட்டு வைக்ககூடாது.
அதேபோல, ஒரே செருப்பை நீண்ட காலத்துக்கு பயன்படுத்தக்கூடாது.. ஓரளவு நன்றாக செருப்பாக இருந்தாலும், அவைகளை மாற்றிவிடுவது நல்லது. முக்கியமாக, நாம் பயன்படுத்தும் செருப்புகள் தேயக்கூடாது.. அதேபோல, பயன்படுத்தாத செருப்பு, ஷூக்களையும் வீட்டில் வைத்திருக்கக்கூடாது.. புது செருப்புகளே என்றாலும், அதை பயன்படுத்தாவிட்டால், உடனே வெளியே வீசிவிட வேண்டும்.
பீங்கான்: மிதியடிகள் எப்போதுமே தூய்மையாக இருக்க வேண்டும். கிழிந்த மிதியடியை நுழைவுவாயிலில் போட்டு வைக்கக்கூடாது.. இந்த காலடிகளை அடிக்கடி மாற்றிக் கொண்டேயிருக்க வேண்டும். வீட்டில் உடைந்த கண்ணாடி இருக்கக்கூடாது.. பீங்கான் பொருட்கள் உடைந்திருந்தாலும், விரிசல் விட்டிருந்தாலும் அதையும் தூக்கி எறிந்துவிட வேண்டும்.
மாடியில், பயன்படுத்தாத சேர்கள், நாற்காலிகள் போட்டு வைத்திருக்கக்கூடாது.. இவைகளையும் உடனே அப்புறப்படுத்த வேண்டும். சாதம் வடிக்கும் தட்டு எப்போதுமே சுத்தமாக இருக்க வேண்டும். வளைந்து நெளிந்த தட்டுகளை உபயோகிக்ககூடாது. அதேபோல, அம்மிக்கல், ஆட்டுக்கல் உள்ளிட்ட தேவையற்ற பழைய பொருட்களை வீட்டிற்குள் அடைத்து வைக்கக்கூடாது.. பழைய கடிகாரங்கள், பயன்படுத்தாத கடிகாரங்கள், போன்றவையும் வைத்திருக்கக்கூடாது.. அப்படி வைத்திருந்தால், குடும்பத்தில் சண்டை, சச்சரவுகள் வரக்கூடும்..
உலோக கம்பிகள்: அதேபோல, சிலர் வீடு கட்டிமுடித்ததுமே, மீதமான கம்பங்கள், மூங்கில்களை மொட்டை மாடியில் போட்டு வைத்திருப்பார்கள்.. இதனால் வீட்டில் தகராறு ஏற்படும் என்கிறார்கள் வாஸ்து நிபுணர்கள்.. உலோகப் பொருட்கள், கம்பிகள், கருவிகள், உடைந்த மண் பாத்திரங்கள் எதுவுமே வைத்திருக்கக் கூடாது.. வீட்டின் மொட்டைமாடி சனி பகவானின் காரணியாக கருதப்படுவதால், மாடியை எப்போதும் சுத்தமாக இருக்க வேண்டும்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications