செவ்வாய் நிலம் வாங்கலாமா? தவறுதலாக கூட செவ்வாய்க்கிழமை இதெல்லாம் செய்யாதீங்க.. செவ்வாயின் அற்புதம்
சென்னை: செவ்வாய்க்கிழமையானது, துர்கை அம்மன் மற்றும் லட்சுமிக்கு உகந்த நாளாக கருதப்படுகிறது. அதனால்தான்,, இந்த புனித நாளில் சில செயல்களை செய்யக்கூடாது என்று பெரியவர்கள் அறிவுறுத்துகிறார்கள்.. அந்தவகையில், ஒருசிலவற்றை இங்கே பார்ப்போம்.
கடன் தொல்லையில் இருப்பவர்கள், கடன் தீர நினைப்பவர்கள் முருகப்பெருமானை தொடர்ந்து வணங்கி வர வேண்டும். முருகப்பெருமானையும், பூமாதேவியையும் வழிபட்டு வருபவதுடன், செவ்வாய்க்கிழமைகளில் மங்கலப்பொருள் வாங்கினால் அது பன்மடங்கு பெருகுமாம். அதேபோல, எல்லாவிதமான சிறப்புகளும் நம்மைத் தேடி வரும் என்பார்கள்.

கடன் தொல்லை: கடன் வாங்கியவர்கள் கடனை திருப்பித் தரும்போது செவ்வாய்க்கிழமை தந்தால் வெகு சீக்கிரமே கடன் அடையும். அதுமட்டுமல்லாமல், இனியும் கடன் வாங்கும் சூழ்நிலை வராது...
செவ்வாய்க்கிழமைகளில் ஒருசிலவற்றை செய்யாமல் இருந்தாலே பணப்பிரச்சனை தீர்ந்து, குடும்பத்தில் மகிழ்ச்சியும், அமைதியும் தழைக்கும்.. உதாரணத்துக்கு கண்ணாடி பாத்திரங்கள் உள்ளிட்ட கண்ணாடி பொருட்களை செவ்வாய்க்கிழமைகளில் வாங்கக்கூடாது. அப்படி கண்ணாடி பொருட்களை வாங்கினாலோ அல்லது பரிசளித்தாலோ, உங்களுக்கு பண இழப்பு ஏற்படும். இரும்பு பொருட்களையும் வாங்க கூடாது.
நிலம் வாங்கக்கூடாது: வீடு கட்டுவதற்கு செவ்வாயன்று பூமி பூஜை செய்வது நல்லது என்றாலும், செவ்வாய்க்கிழமைகளில் நிலம் வாங்கக்கூடாது. அப்படி வாங்குவதால் வீட்டில் வறுமை, குடும்ப தலைவருக்கு நோய்களும் உண்டாகும். செவ்வாய்களில் பணத்தை தானமாக தர க்கூடாது.. உப்பு, தயிர் போன்றவற்றையும் தானமாக தரக்கூடாது.
செவ்வாய்க்கிழமைகளில், முடி, நகம் வெட்டக்கூடாது.. அப்படி செய்தால், அதிர்ஷ்டம் போய் துரதிர்ஷ்டம் குடியேறிவிடும்.. ரத்தம் தொடர்பான நோய்கள் ஏற்படும். வாழ்நாளும் குறைந்து கொண்டே செல்லும். அதுமட்டுமல்ல, செவ்வாய்க்கிழமைகளில் வீடு துடைக்கவோ, ஒட்டடை அடிக்கவோ கூடாது.. சாமி விளக்கு துடைக்கவோ, விளக்கவோ கூடாது. அப்படி செய்தால், லட்சுமி வீட்டை விட்டு சென்றுவிடுவாராம்.
குப்பைகள்: வீட்டிலுள்ள வாசற்படி, அம்மி, ஆட்டுக்கல், உரல் ஆகியவைகளில் உட்காரக்கூடாது. வீட்டை இரவில் பெருக்ககூடாது. அப்படியே பெருக்கினாலும், குப்பைகளை வெளியே கொட்டக் கூடாது. செவ்வாய்க்கிழமையில் துளசி செடியை பறிக்கவும் கூடாது, அதன் இலைகளையும் கிள்ளக்கூடாது. இதனாலும் குடும்பத்தில் நிதி தட்டுப்பாடு ஏற்படும்.
இன்றைய நாளில் கருப்பு நிற ஆடைகளை வாங்கவோ, கருப்பு நிற ஆடைகளை அணியவோ கூடாது. செவ்வாய்க்கிழமைகளில் இறைச்சி, வெங்காயம், பூண்டு மதுபானம் தவிர்க்க வேண்டும். இதனால் குடும்பத்தில் வறுமை ஏற்படும்.
சிவப்பு ஆடை: அப்படியானால் செவ்வாய்கிழமையில் என்ன செய்யலாம்? இந்த செவ்வாய்க்கிழமைகளில் சிவப்பு அல்லது ஆரஞ்சு நிற ஆடைகளை அணிந்து வரலாம். இதனால் செவ்வாய் தோஷம் குறையும் என்பது ஐதீகம். 5 முகம் கொண்ட குத்து விளக்கு ஏற்றி திருமகளை வழிபட வேண்டும். புது ஆடை இருந்தால், அதை செவ்வாய்க்கிழமைகளில் உடுத்தலாம்.. அதேபோல, தான தருமங்களை இந்நாளில் செய்வதால், பலன்கள் பெருகும்..
செவ்வாய்க்கிழமையில் யாருடனும் வாதம் செய்யக்கூடாது. அப்படி செய்தால், மிகப்பெரிய சண்டையில் முடிந்துவிடுமாம். அதனால்தான் செவ்வாய்க்கிழமைகளில் மவுனவிரதம் இருப்பது நல்லது என்று அறிவுறுத்துகிறார்கள் பெரியவர்கள்.












Click it and Unblock the Notifications