அசைவ உணவை சாப்பிட்டுவிட்டு கோயிலுக்கு செல்வது சரியா, தவறா? சாஸ்திரம் சொல்வது என்ன?

Subscribe to Oneindia Tamil

சென்னை: அசைவம் சாப்பிட்டுவிட்டு கோயிலுக்கு செல்லலாமா? அசைவம் சாப்பிட்டுவிட்டு குளித்துவிட்டு கோயிலுக்கு செல்வது முறையா என்ற சந்தேகங்களுக்கு பதில்கள் கிடைத்துள்ளன. அது போல் சிலர் கழுத்தில் ஏதாவது மாலைகளை போட்டுக் கொண்டும் அசைவம் சாப்பிடுவர். அதுவும் சரியா தவறா என்பதை பார்ப்போம்.

தினமும் கோயிலுக்கு செல்வதும் இறைவனை வழிபடுவதும் மனதை நல்வழிப்படுத்தும். அதிலும் கோபுர தரிசனம் கோடி புண்ணியம் என்பார்கள். சிலர் காலை, மாலை இரு வேளைகளும் கோயிலுக்கு சென்று வழிபடுவதை வழக்கமாக கொண்டிருப்பார்கள்.

அது போல் வீடுகளிலும் தினமும் பூஜை செய்துவிட்டுத்தான் அலுவலகங்களுக்கு கிளம்புவது வழக்கம். கோயிலுக்கு செல்லும் போது மனம் தூய்மையாக இருத்தல் வேண்டும். பொய், பொல்லாப்பு, வஞ்சம் உள்ளிட்டவை இருக்கக் கூடாது.

நேர்மறை எண்ணங்களுடன் இறைவனை நினைத்து வழிபட்டாலே அந்த கோயிலுக்கு செல்வதன் புண்ணியம் வந்து சேரும். அது போல் கோயிலுக்கு செல்லும் போது குளித்துவிட்டு சுத்தமான ஆடையை அணிந்து கொண்டு செல்ல வேண்டும். கோயிலில் சொல்லப்பட்டுள்ள வழிமுறைகளை பின்பற்ற வேண்டும்.

அது போல் கோயிலில் சுவாமி சிலைகளை தொடக் கூடாது. முதலில் கோபுரத்தை தரிசித்துவிட்டு உள்ளே சென்று கொடி மரத்தையும் வழிபட வேண்டும் என்பார்கள். இதில் சிலர் அசைவம் சாப்பிட்டு விட்டு கோயிலுக்கு செல்வர். இன்னும் சிலர் அசைவம் சாப்பிட்டுவிட்டு குளித்துவிட்டு கோயிலுக்கு செல்வார்கள்.

சிலர் ஐயப்ப மாலை, மருவத்தூர் மாலை அல்லாமல் சுவாமி உருவங்கள் பதித்த துளசி மாலைகளை அணிந்திருப்பர். அவர்கள் அசைவம் சாப்பிடும் போது அப்படியே சாப்பிடுவார்கள். எனவே கோயிலுக்கு செல்லும் போது அசைவம் சாப்பிட்டுவிட்டுசெல்வது நல்லதா என்பதை பார்க்கலாம்.

கோயிலுக்கு செல்லும் போது மனம் அமைதியுடன் செல்ல வேண்டும். நாம் சாப்பிடும் உணவுக்கும் நமது மனதிற்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. காரமான உணவை சாப்பிட்டால் அதிக கோபம் வரும் என்பார்கள். பொங்கல், தயிர் சாதம் சாப்பிட்டால் தூக்கம் வரும். அது போல் அசைவம் சாப்பிட்டால் மந்தம் ஏற்படும்.

spirtuality god

இவை விரைவில் செரிமானமடையாது. இதனால் மந்த நிலையோடு கோயிலுக்குச் சென்றால் நிம்மதியாக சுவாமியை கும்பிட முடியாது. அது மட்டுமல்லாமல் கறி சாப்பிட்டுவிட்டு கோயிலுக்கு வந்துவிட்டோமே என்ற சஞ்சலமும் இருக்கும். பொதுவாக கோயிலுக்கு சென்றால் சுத்தமாக செல்ல வேண்டும். உடல் சுத்தம் மட்டுமில்லாமல் மன சுத்தமும் வேண்டும்.

மந்த நிலையில் சென்றால் கோயிலுக்குள் நிலவும் பாசிட்டிவ் வைப்ஸையும் தெய்வ சக்தியையும் உணர முடியாது. மேலும் நம் மனதை ஒருநிலைப்படுத்தவும் முடியாது. சைவ உணவுகளை சாப்பிட்டு விட்டு கோயிலுக்குள் சென்றார், கோயிலில் இருக்கும் பிராண சக்தியை நமது உடலும் மனமும் அதிகம் கிரகித்துக் கொள்ளும்.

அதுவே அசைவ உணவுகளை சாப்பிட்டவர்களால் இந்த பிராண சக்தியை கிரகித்துக் கொள்ளவே முடியாது. ஏனெனில் அசைவம் நமது உடலில் கெட்ட புத்தியை அளிக்கும். எனவே கோயிலுக்கு செல்லும் போது அசைவம் சாப்பிட்டிருந்தால் சாப்பிட்டு 3 அல்லது 4 மணி நேரம் கழித்து தலைக்கு குளித்துவிட்டு செல்லலாம். அது போல் கழுத்தில் மாலைகளை அணிந்து கொண்டும் அசைவம் சாப்பிடக் கூடாது. அவற்றை கழற்றி பூஜை அறையில் வைத்துவிட்டு பிறகு அடுத்த நாள் தலைக்கு குளித்துவிட்டு மாலைகளை (விரமிருந்து போடப்படும் மாலை அல்ல) அணிந்துக் கொள்ளலாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+