கிடு கிடுவென விலை உயரும் தங்கம்..பெட்டி பெட்டியாக வீட்டில் சேர என்ன செய்யலாம்?என்ன செய்யக்கூடாது
சென்னை: தங்கம் விலை விண்ணை முட்டும் அளவிற்கு உயர்ந்து வருகிறது. தங்கம் வாங்குவது என்பது ஏழைகளுக்கு எட்டாக்கனியாகி வருகிறது. தங்க நகைகளை வாங்குவது போட்டு அழகுபார்ப்பதற்காக மட்டும் அல்ல அது மிகச்சிறந்த முதலீடு. சில விசயங்களை செய்தால் யார் வேண்டுமானாலும் தங்கத்தை வாங்கி சேகரிக்கலாம். தங்கம் வாங்குவது முக்கியமில்லை அதை எப்படி பாதுகாத்தால் அடகுக்கு போகாமல் தப்பிக்கும் என்றும் பார்க்கலாம்.
நம்முடைய பாட்டி காலத்தில் தங்கம் ஒரு சவரன் 40 ரூபாய்க்கு விற்பனையானது. அம்மா காலத்தில் 1970 களில் ஒரு சவரன் 400 ரூபாய்க்கு விற்பனையானது. நம்முடைய காலத்தில் திருமணம் நடக்கும் போது நகை வாங்கிய சமயத்தில் ஒரு சவரன் 4000 ஆக விற்பனையானது. நம்முடைய பிள்ளைகளுக்கு இப்போது நகை வாங்கினால் ஒரு சவரன் செய்கூலி சேதாரம் சேர்த்து 50000 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனையாகிறது.
தங்கத்தில் முதலீடு செய்வது என்பது மிகச்சிறந்த லாபத்தை தரக்கூடியது என்றுதான் நம்முடைய முன்னோர்கள் பெண்களுக்கு திருமணத்தின் போது சீராக தங்கத்தை பரிசளித்தனர். தங்கத்தை தேவையின் போது அடகு வைத்து பணமாக புரட்டி செலவு செய்யலாம். தங்க நகை வாங்குங்கள் என்று எத்தனையோ விளம்பரங்கள் வந்தாலும் தங்கத்தை அடகு வைப்பது பற்றியும் பல விளம்பரங்கள் வருகின்றன.

இன்றைய கால கட்டத்தில் ஒருவரிடம் போய் பணத்தை கடன் வாங்குவதை விட, நம்மிடம் இருக்கும் தங்க நகையை அடகு வைப்பது ஒன்றும் பெரிய தவறு அல்ல. அதை எப்படி மீட்பது என்பதுதான் சூட்சுமம் உள்ளது. மீண்டும் மீண்டும் தங்கத்தை அடகு வைக்காமல் தவிர்க்க என்ன செய்யலாம் என்பது பற்றி பரிகாரம் உள்ளது. உண்டு.
காசு கொட்டி கிடந்தாலும் எல்லோராலும் நகை வாங்கி குவிக்க முடியாது. அதற்கு ஏற்ப செலவுகள் அவர்களுக்கு வந்து கொண்டே இருக்கும். இதனால் நகை சேர்க்கை உண்டாகாது.தங்கம் நம்முடைய வீட்டில் சேர வேண்டும் எனில் மகாலட்சுமியின் அருள் அவசியம். சொர்ண லட்சுமியின் அருள் இருந்தால் தான் நகையை நாம் வாங்கவே முடியும்.
ஒரு சிலர் வாங்கிய நகைகளை பீரோவில் வருட கணக்கில் பூட்டி வைத்திருப்பார்கள். இது போல கண்டிப்பாக செய்யவே கூடாது. பூட்டி வைத்த நகைகளில் தோஷங்கள் உண்டாகும் எனவே நகைகளை அணிந்து கொள்ளுங்கள், உங்களிடம் மகாலட்சுமி கடாட்சம் நிறைந்திருக்கும்.

சொர்ணத்தில் தோஷம் உண்டு என்கிறது சாஸ்திரங்கள் எனவே நீங்கள் ஒருவரிடம் இருந்து நகையை கடனாக பெற்றால் கூட உப்பு தண்ணீரில் கழுவிய பின்னர் பாலில் ஊற்றி நன்கு கழுவி சுத்தம் செய்து அணிந்து கொள்ள வேண்டும். அப்போது அவர்களிடம் இருக்கும் தோஷம் உங்களை பாதிக்காமல் இருக்கும். அதே போல சில காரணங்களுக்காக நகையை கடனாக கொடுக்க நேர்ந்தால் அதை நாம் திரும்பி வாங்கும் போது உப்பு நீர் ஊற்றி கழுவி சுத்தம் செய்ய வேண்டும்.
குளிகை நேரத்தில் செய்யும் செயல் மீண்டும் மீண்டும் நடக்கும் என்பது நம்பிக்கை, எனவே குளிகை நேரத்தில் தங்கம் வாங்கினால் மீண்டும் மீண்டும் வாங்கும் யோகம் வரும். நீங்கள் புதிதாக வாங்கிய நகையை வெள்ளை துணியில் முடிந்து சந்தன, குங்குமம் இட்டு பூஜை அறையில் வைத்து சொர்ண லட்சுமியையும் குல தெய்வத்தையும் வணங்க வேண்டும். அதன் பின்னர் நீங்கள் அணிந்து கொள்ளலாம்.
நகையை அடகு வைத்து அதை மீட்ட பின்னர் உடனடியாக மஞ்சள் கலந்த நீரில் கழுவலாம். ஒரு வெள்ளை துணியில் முடிந்து வைத்து இந்த துணியை கல் உப்பு இருக்கும் ஜாடிக்குள் கொண்டு போய் வையுங்கள். சில மணி நேரங்கள் கழித்து அதை மீண்டும் எடுத்து பூஜை அறையில் வைத்து சொர்ண லட்சுமியை வணங்க வேண்டும். இப்படி செய்தால் அடகு சென்று வந்த நகை மீண்டும் அடகுக்கு செல்லாது என்பது நம்பிக்கை. இது போல செய்வதன் மூலம் மேலும் மேலும் தங்க நகைகளை வாங்கும் யோகம் வரும்.












Click it and Unblock the Notifications