குரு பெயர்ச்சி..அலைமோதும் மக்கள் கூட்டம்..தஞ்சை,கும்பகோணத்தில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கம்
தஞ்சாவூர்: குரு பகவான் மீன ராசியில் இருந்து மேஷ ராசிக்கு இடப்பெயர்ச்சி அடைவதை முன்னிட்டு குரு பரிகார தலங்களில் ஏராளமானோர் சாமி தரிசனம் செய்ய குவிந்து வருகின்றனர். பக்தர்களின் வசதிக்காக ஆலங்குடி, திட்டை, சூரியனார் கோவிலுக்கு போக்குவரத்துறை இரண்டு நாட்களுக்கு சிறப்பு பேருந்துகளை இயக்க உள்ளதாக அறிவித்துள்ளது.
மனித வாழ்க்கையின் ஏற்றம் - இறக்கம் எல்லாமே பூர்வ புண்ணியத்தின் அடிப்படையில்தான் அமைகின்றன. பூர்வ புண்ணியத்திற்கான பலன்களை அளிப்போர் நவகிரகங்கள் எனப் போற்றப் பெறும் நவநாயகர்களே ஆவர். இந்த ஒன்பது கிரகங்களில் ஐந்தாவதாக, நடு நாயகராகத் திகழ்பவர் குரு பகவான்.

தேவர்களின் குருவாகிய குருபகவான் பூரணமான சுபகிரகம் ஆவார். குரு பகவான். அறிவு, வித்யை, ஞானம் ஆகியவற்றுக்கு இவரே காரகத்துவம் வகிக்கிறார். இவரை 'பிரகஸ்பதி' என்றும் அழைப்பார்கள். தேவர்கள் அனைவருக்கும் குருவாகத் திகழ்வதால், 'தேவகுரு' என்றும் அழைப்பார்கள். புகழ், பதவி, அந்தஸ்து, திருமணம், புத்திர பாக்கியம் என ஒரு மனிதனுடைய வாழ்க்கையின் முக்கிய அம்சங்களைத் தீர்மானிப்பதில் குரு பகவானுக்கு முக்கியப் பங்குண்டு.
குருவின் பார்வை உச்சத்தில் இருக்கும் ஒருவன், வாழ்க்கையில் அனைத்து இன்பங்களையும் பெறுவான். குருபகவானின் அருட்பார்வைக்கு அளப்பரிய ஆற்றல் உண்டு. அதனால் தான் 'குரு பார்க்க கோடி நன்மை', குரு பார்வை தோஷ நிவர்த்தி' என்றெல்லாம் குருபகவானின் அருள்திறம் போற்றப் பெறுகின்றது.
குருபகவான் ராசி மண்டலத்தைக் கடக்க எடுத்துக்கொள்ளும் காலம் பன்னிரண்டு ஆண்டுகள் ஆகும். அதாவது, ஒரு ராசியைக் கடக்க ஓர் ஆண்டு ஆகிறது. குருபகவான் ஒரு ராசியில் 2, 5,7,9,11, ஆகிய ஐந்து இடங்களில் சஞ்சரிக்கும் காலத்தில் குறிப்பிட்ட ஜாதகர் நற்பலன்களை அடைகிறார். அதே குருபகவான், 1,3,4,6,8,10,12 ஆகிய ஏழு இடங்களில் சஞ்சரிக்கும் காலத்தில் ஜாதகருக்கு சுமாரான பலன்களை தருகிறார்.
குரு பகவான் இன்று இரவு மீன ராசியில் இருந்து மேஷ ராசிக்கு இடப்பெயர்ச்சி அடைகிறார். இதையொட்டி தமிழகத்தில் குரு பகவான் வீற்றிருக்கும் தலங்களில் சிறப்பு பூஜைகள் லட்சார்ச்சனைகள் நடைபெறுகின்றன. இதனை முன்னிட்டு குரு பகவானை வழிபட பரிகார தலங்களுக்கு மக்கள் படையெடுத்து வருகின்றனர்.
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே அமைந்துள்ள குருவித்துறையில் ஸ்ரீதேவி, பூதேவி சமேதரராய் வீற்றிருக்கும் அருள்மிகு சித்திரரத வல்லப பெருமாள் திருக்கோவிலில் சுயம்புவாக வீற்றிருக்கும் குருபகவான் சன்னதியில் குரு பெயர்ச்சி விழா நடைபெறுகிறது. பரிஹார மஹாயாகம், மஹாபூர்ணஹூதி மற்றும் திருமஞ்சன சிறப்பு பூஜைகள் நடைபெற உள்ளது.
வேலூர் மாவட்டம் வாலாஜாபேட்டை தன்வந்திரி பீடத்தில் இன்று குருப்பெயர்ச்சி மஹாயாகம் மற்றும் ஸ்ரீ மேதா தட்சிணாமூர்த்திக்கு சிறப்பு அபிஷேகம் விசேஷ பூஜைகள் யாகங்கள் நடைபெறுகிறது. குருபகவானுக்குரிய மஞ்சள் நிற ஆடை, சரக்கொன்றை,முல்லை மலர்கள், கொண்டைக்கடலை மாலை ஆகியவற்றை செலுத்தி குருபகவானின் அருளை பெறலாம்.
திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் அருகே உள்ள ஆலங்குடியில் நவ கிரக தலங்களில் ஒன்றாகப் போற்றப்படும் ஆபத்சகாயேசுவரர் குரு பரிகார கோயில் உள்ளது. இன்று இரவு குருபெயர்ச்சி விழா நடைபெறுவதை முன்னிட்டு குருபகவானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் அலங்காரம் செய்து மகாதீபாராதனை நடைபெறும் இதற்கான சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதே போல திட்டை வசிஷ்டேஸ்வரர் ஆலயத்திலும் குரு பெயர்ச்சி விழா நடைபெற உள்ளது.
இன்றைய தினம் விடுமுறை நாள் என்பதால் கும்பகோணம், தஞ்சாவூர் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள நவகிரக தலங்களில் ஏராளமான பக்தர்கள் வழிபாடு செய்தனர். பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று குரு பகவானை தரிசனம் செய்தனர். சுப பலன்களான திருமணம், குழந்தைப்பேறு, தொழில், பொருளாதாரம், உயர்பதவி, அரசாங்க உதவி ஆரோக்யம் போன்றவைகளில் நன்மை பெற வேண்டியும் பக்தர்கள் வேண்டிக்கொண்டனர்.
குரு பெயர்ச்சி விழாவை முன்னிட்டு இரண்டு நாட்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. சூரியனார் கோவில், ஆலங்குடி, திட்டைக்கு செல்ல சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. தஞ்சையிலிருந்து திட்டைக்கும், கும்பகோணத்திலிருந்து சூரியனார் கோவிலுக்கும் சிறப்பு பேருந்து இயக்கப்படும் என போக்குவரத்துறை அறிவித்துள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications