சங்கடஹர சதுர்த்தியில்! திருப்பதி ஏழுமலையானை எத்தனை பேர் தரிசித்தார்கள் தெரியுமா?
திருப்பதி: திருப்பதியில் வைகுண்ட ஏகாதசி 10 நாட்கள் கொண்டாடப்படும் நிலையில் நேற்று ஒரே நாளில் திருப்பதி ஏழுமலையானை எத்தனை பேர் தரிசித்தார்கள் என்பது குறித்து தெரிந்து கொள்ளுங்கள்.
திருமலை திருப்பதி வெங்கடாஜலபதியை தினந்தோறும் ஆயிரக்கணக்கானோர் வழிபடுகிறார்கள். அது போல் பண்டிகை காலங்களில் லட்சக்கணக்கானோர் திருப்பதிக்கு வருகை தருகிறார்கள். எந்த நேரத்திலும் ஏழுமலையானை ஏராளமான பக்தர்கள் தரிசித்து வருவதால் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது.

பெருமாள் கோயில்களில் முக்கியமானது மார்கழியில் வரும் வைகுண்ட ஏகாதசி எனப்படும் சொர்க்க வாசல் திறப்பு நிகழ்ச்சி. இது கடந்த 10ஆம் தேதி நடைபெற்றது. இந்த விழா திருப்பதியில் ஜனவரி 19 ஆம் வரை நடைபெறும்.
இந்த 10 நாட்களும் விஐபி தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது. ரூ 300 தரிசன டிக்கெட்டுகள் கடந்த டிசம்பர் மாதமே ரிலீஸ் செய்யப்பட்டு புக் செய்யப்பட்டுவிட்டது. இலவச தரிசனத்திற்கான டோக்கன்களை வழங்க திருப்பதியில் 8 இடங்களை தேவஸ்தானம் தேர்வு செய்து அங்கு பக்தர்கள் வரிசையில் நின்று பெற்றுக் கொள்ள அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தன.
அந்த வகையில் ஜனவரி 17-ஆம் தேதியான நேற்று மொத்தம் 61,142 பேர் ஏழுமலையானை தரிசனம் செய்தனர். அது போல் 19,736 பேர் மொட்டை அடித்துக் கொண்டனர். நேற்று ஒரே நாளில் உண்டியல் காணிக்கை ரூ 3.15 கோடியாகும். சர்வ தரிசனத்தில் ஏழுமலையானை தரிசிக்க எத்தனை மணி நேரம் ஆனது என்பது குறித்து குறிப்பிடவில்லை.
ரூ 300 சிறப்பு தரிசனத்திற்கு 3-5 மணி நேரத்திற்கு மேல் ஆனது. நடைபாதையாக வந்த பக்தர்கள் 8-10 மணி நேரம் தரிசனத்திற்காக காத்திருந்தனர். மேலும் மூத்த குடிமக்கள், மாற்றுத் திறனாளிகளுக்கான தரிசன ஷெட்யூலில் அவர்கள் 2 மணி முதல் 3 மணி நேரம் வரை காத்திருந்தனர்.
திருப்பதிக்கு மாதந்தோறும் 24 ஆம் தேதி (இந்த தேதி மாறுதலுக்குள்பட்டது, இதற்கான அறிவிப்பு மாதந்தோறும் 21 ஆம் தேதி வரும்), அதாவது 3 மாதங்களுக்கு முன்பே ரூ 300 தரிசன டிக்கெட்டுகள் புக்கிங் தொடங்குகின்றன. அதில் ஒரு அக்கவுன்ட்டில் 6 டிக்கெட்டுகள் வரை புக்கிங் செய்யலாம். அது போல் எக்ஸ்ட்ரா லட்டு வேண்டுமானாலும் தனியே பணம் செலுத்திக் கொள்ளலாம். குடும்ப உறுப்பினர்களின் ஆதார் கார்டு, பாஸ்போர்ட் அல்லது வாக்காளர் அடையாள அட்டையில் ஏதேனும் ஒன்றை ஆவணமாக கொண்டு டிக்கெட் புக் செய்ய வேண்டும். அறைகளை புக் செய்ய அன்றைய தினம் பிற்பகல் 3 மணிக்கு புக்கிங் ஸ்லாட் திறக்கப்படும். அதில் புக் செய்துக் கொள்ளலாம். ரூ 300 தரிசனத்திற்கும் அறை புக்கிங்கிற்கும் ஹை ஸ்பீடு இன்டர்நெட் இருந்தால்தான் புக் செய்ய முடியும்.












Click it and Unblock the Notifications